SS அகிலாண்டேஸ்வரி (லலிதா) போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அகிலாண்டேஸ்வரி (லலிதா) போற்றி
அகிலாண்டேஸ்வரி (லலிதா) போற்றி
அகிலாண்டேஸ்வரி (லலிதா)  போற்றி

ஓம் அன்னையே அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் அன்னத்தைப் பழிக்கும் நடையுடைய ஹம்ஸத்வனியே போற்றி
ஓம் அறிவிலா மூடன் எனக் கனுகி ரகிப்பாய் போற்றி
ஓம் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதியே போற்றி
ஓம் அபயமளிக்கும் அபயாம்பிகையே போற்றி
ஓம் அழகுக் கடலான அங்கயற்கண்ணி போற்றி
ஓம் அழகிய ஸ்தன பாரங்களையுடைய அம்பிகே போற்றி
ஓம் அக்கினியாய் அருள் செய்யும் ஆவுடையே போற்றி
ஓம் ஆதி சக்தியானவளே ஆதரிப்பாய் போற்றி
ஓம் ஆதியந்த மற்ற பரம்பொருளே போற்றி

ஓம் ஆழமான பார்வையையுடைய அபிராமி போற்றி
ஓம் இன்பங்களெல்லாம் தந்தருள்வாய் ஈஸ்வரியே போற்றி
ஓம் இருளைப் போக்கி ஒளியைத் தரும் ஜோதியே போற்றி
ஓம் இரத்த பீஜனை சம்கரித்த பத்ரகாளி போற்றி
ஓம் இரவை ஏற்படுத்தும் சௌகந்திகா போற்றி
ஓம் ஈசனின் இடப்பக்கம் அமர்ந்தவளே போற்றி
ஓம் உம்பர்களுக்கு உவப்பளித்த உலகமாதா போற்றி
ஓம் ஊசிமேல் தவமிருந்த உலகநாயகியே போற்றி
ஓம் ஊனிலும் உயிரிலும் கலந்த உமையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே ஏகாட்சரி போற்றி

ஓம் என் இதயமே கோவிலாய் கொள்ளுவாய் போற்றி
ஓம் எல்லையற்ற குணநிதியே! ஏகாம்பரி போற்றி
ஓம் என்றும் பதினாறாய் விளங்கும் ஏலங்குழலி போற்றி
ஓம் ஏது செய்வேன் ஆதரிக்கும் நாயகியே போற்றி
ஓம் ஏழேழு பிறவியிலும் எனைக் காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரனைப் பெற்ற அன்ன பூரணியே போற்றி
ஓம் ஐசுவரியத்தை அள்ளித்தரும் சோமசுந்தரியே போற்றி
ஓம் ஒன்றே பலவான ஓங்காரி போற்றி
ஓம் என்னும் எழுத்திலே உறைந்தவளே போற்றி
ஓம் ஒளடதமாய் அங்கிருந்து ஆதரிப்பாய் போற்றி

ஓம் கயிலையில் வாழும் கற்பகமே போற்றி
ஓம் கரும்பு வில்லைக் கையில்கொண்ட கல்யாணி போற்றி
ஓம் கங்கா நதிக்கரை வாழும் விசாலாட்சி போற்றி
ஓம் காமேச்வரன் மகிழும் காமேச்வரி போற்றி
ஓம் காமத்தை ஜெயித்தக் காமாட்சி போற்றி
ஓம் கிளியைக் கையில் கொண்ட கின்னரரூபி போற்றி
ஓம் குதர்க்கமில்லா மனம்தருவாய் கோலவிழி போற்றி
ஓம் குவலயத்தை ரட்சிக்கும் கோமதி போற்றி
ஓம் குங்குமப்பூ நிறத்தாளே குமரியே போற்றி
ஓம் குகனைப் பெற்ற உமாதேவி போற்றி

ஓம் கேசவனின் தங்கையான ராஜ ராஜேஸ்வரி போற்றி
ஓம் கேட்டவர்க்கு வரமளிக்கும் காந்திமதியே போற்றி
ஓம் கோடி சூர்யப்ரகாச வதனி போற்றி
ஓம் சண்டமுண்டனை சம்கரித்த சாமுண்டி போற்றி
ஓம் சப்த,ஸ்பரிச,ரூப,ரஸ,கந்தங்களைப் பாணங்களாய் தரித்தவளே போற்றி
ஓம் சத்துருக்களை ஒடுக்கும் சாரதையே போற்றி
ஓம் சங்கரன் பாதம் பணியம் சமயாம்பா போற்றி
ஓம் சபேசனோடு நடமிடும் சிவகாமி போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி போற்றி
ஓம் சிந்தித்ததை அளிக்கவல்ல சிந்தாமணியே போற்றி

ஓம் சிரித்துப் புரமெரித்த சிவப்பிரியே போற்றி
ஓம் சிவனையே சோதித்த சாம்பவி போற்றி
ஓம் சீர்காழியில் உறையும் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் கம்ப நிசும்பரை வதைத்த துர்க்காதேவி போற்றி
ஓம் சூதறியா பாலகன் நான் துணையிருப்பாய் போற்றி
ஓம் சூரிய சந்திரர்களை தாடங்கமாய் அணிந்த அகிலாண்டேஸ்வரி போற்றி
ஓம் செல்வமே வடிவான சௌந்தரி போற்றி
ஓம் சொக்கருக்கு மாலையிட்ட மீனாம்பிகே போற்றி
ஓம் சௌபாக்கியத்தைத் தரும் சௌதாமினி போற்றி
ஓம் சௌந்தர்யத்தின் பிறப்பிடமாம் சியாமளையே போற்றி

ஓம் ஞான சம்பந்தருக்கு அருளிய சிவசங்கரி போற்றி
ஓம் ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகே போற்றி
ஓம் தட்சனுக்காக வாதிட்ட தாட்சாயிணி போற்றி
ஓம் தனங்களை அள்ளித்தரும் தயாமித்ரையே போற்றி
ஓம் திக்விஜயம் செய்த தடாதகை தேவியே போற்றி
ஓம் தில்லையில் தாண்டவமிடும் சபேசினி போற்றி
ஓம் தீராவினை தீர்க்கும் தியாகேஸ்வரி போற்றி
ஓம் துஷ்டர்களுக்கு அச்சத்தை தருபவளே போற்றி
ஓம் தூய என் நெஞ்சிலே துணையிருப்பாய் போற்றி
ஓம் தேன்போன்ற குரலுடைய தர்மாம்பிகா போற்றி

ஓம் தேவாதி தேவர்களின் ஸேவிதையே போற்றி
ஓம் தேடிவந்து ரட்சிக்கும் கிருபாகரி போற்றி
ஓம் தை வெள்ளியிலே ஊஞ்சலிலே ஆடிடுவாய் போற்றி
ஓம் தொண்டர்களின் உள்ளமெல்லாம் குடியிருப்பாய் போற்றி
ஓம் தோகையே! தூயமணி மரகதமே போற்றி
ஓம் நவநிதிகளின் இருப்பிடமான நவாட்சரி போற்றி
ஓம் நாடெல்லாம் நயந்து அன்பு காட்டும் நிமலையே போற்றி
ஓம் நாத வடிவானவளே நிரஞ்சனியே போற்றி
ஓம் நிரந்தரமாய் ஆனந்தத்தைத்தரும் நிர்குணமே போற்றி

ஓம் பண்டாசுரனை வதைத்த பாலாம்பிகே போற்றி
ஓம் பர்வத ராஜன் மகளான பார்வதியே போற்றி
ஓம் பகலை உண்டாக்கிய பஞ்சாட்சரி போற்றி
ஓம் பதினாறு பேறுகளையும் அளிக்கவல்ல பதிவிரதே போற்றி
ஓம் பாபம் தொலைப்பவளே பராத்பரி போற்றி
ஓம் பிறப்பறுக்க வந்த புவனேஸ்வரி போற்றி
ஓம் பிணி தீர்க்கும் நாயகி பரமேஸ்வரி போற்றி
ஓம் பிரளய காலத்திலும் பிரகாசிக்கும் பைரவி போற்றி
ஓம் பீஜாட்சரத்தில் உறையும் பத்ராயை போற்றி
ஓம் பூதப்ரேத பைசாசங்களிடமிருந்து காப்பாற்றும் வாராஹி போற்றி
ஓம் பை நாகங்களை ஆபரணமாய் அணிந்தவளே போற்றி

ஓம் மஹிஷாசுரனை வதைத்த மர்த்தனியே போற்றி
ஓம் மலையாள தேசம் வாழும் மஹேஸ்வரி போற்றி
ஓம் மலையத்துவஜன் யாகத்தில் தோன்றிய அங்கயற்கண்ணி போற்றி
ஓம் மதுரமான சிரிப்பை உடைய மதுரகாளி போற்றி
ஓம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத மதனசுந்தரி போற்றி
ஓம் மலைவாழையை தோற்கடிக்கும் துடையையுடைய மகாராக்ஞி போற்றி
ஓம் மங்களத்தைக் கொடுக்கும் மங்களாம்பிகா போற்றி
ஓம் மன்மதனை ஆளும் மகா மாயா போற்றி
ஓம் மதங்க முனிவரின் தவப்பலனாகப் பிறந்த மாதங்கி போற்றி
ஓம் மந்தகாச முகமுடைய மலர் வதனி போற்றி

ஓம் மாரியாய் அருள் புரியும் கருமாரி போற்றி
ஓம் மின்னல் கொடி போன்ற மனோன்மணியே போற்றி
ஓம் மீனைப் போன்ற கண் படைத்த மீனாட்சி போற்றி
ஓம் மூன்று குணங்களை உடைய மூகாம்பிகை போற்றி
ஓம் மேகம் போன்ற கூந்தலை உடைய மதுமதியே போற்றி
ஓம் மோகத்தை வெல்ல வைக்கும் மாயாதேவி போற்றி
ஓம் ஜலமயமான அம்ருதேஸ்வரி போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரத்தில் வாழும் ஸ்ரீ லலிதாம்பா போற்றி

சீர்மிகு லலிதா திருப்பெயர் ஆயிரம் போற்றிகள்

ஓம் சீர்மிகு அன்னையே போற்றி
ஓம் திருமலி பேரரசியே போற்றி
ஓம் ஏருறு சிங்காசனத் துறை தலைவியே போற்றி
ஓம் பேரறிவோமப் பெருங்கனல் உதித்தாளே போற்றி
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி
ஓம் உதிக்கும் செங்கதிர் ஆயிரம் ஒப்பாளே போற்றி
ஓம் விதிக்கும் கரங்கள் நான்கினை உடையாளே போற்றி
ஓம் பற்றின் உருவத்துப் பாசத்தைக் கொண்டாளே போற்றி
ஓம் சீற்றமது உருவமாம் அங்குசத் திலங்குவாளே போற்றி
ஓம் மனமென்னும் கரும்பினை வில்லாய் கொண்டாளே போற்றி

ஓம் குணமுறு பஞ்ச பூதமாம் கணையினாளே போற்றி
ஓம் தன் சிவப்பொளி மூழ்கு சகத்தினை உடையாளே போற்றி
ஓம் செம்பகம் அசோகு செழுங்கொன்றை நறுங்குழலி போற்றி
ஓம் செம்மணி வரியொளி சேர்மௌளி சிரத்தினளே போற்றி
ஓம் இன்னொளி எட்டாம் பிறைமதி நெற்றியாளே போற்றி
ஓம் முகமதிக் கறையெனக் கஸ்தூரிப் பொட்டினாளே போற்றி
ஓம் மதன் திருவாயிலின் தோரணப் புருவத்தாளே போற்றி
ஓம் முகத்தழகு வெள்ளத்தே மீனான கண்ணுடையாளே  போற்றி
ஓம் அன்றலர் செம்பகத்து மலர்போல மூக்குடையாளே போற்றி
ஓம் விண்மீனின் ஒளியோட்டும் விளங்கு மூக்கணியுடையாளே போற்றி

ஓம் செவிப்பூவால் மனங்கவரும் கதம்பப் பூங்கொத்துடையாளே போற்றி
ஓம் இரவி மதிகள் மண்டலத்தோடு இலங்குநல் தோடுடையாளே போற்றி
ஓம் பதுமராக ஒளிதோற்கும் கண்ணாடி கன்னத்தாளே போற்றி
ஓம் புதுப்பவளம் கொவ்வைகளும் புறங்காட்டும் இதழ்படைத்தாளே போற்றி
ஓம் சுத்த வித்தை முளைகளெனத் தோன்று இருபல்வரிசையினாளே போற்றி
ஓம் தாம்பூல நறுமணத்தைத் தானிழுக்கும் திசையுடையாளே போற்றி
ஓம் கலைமகளின் வீணைக்கு மதிப்பழித்த இன்னுரையாளே போற்றி
ஓம் புன்னகையின் ஒளிமூழ்கு காமேசன் மனம் படைத்தாளே போற்றி
ஓம் ஒப்புமையே நினைப்பரிய  உயர்மோவாய்க் கட்டழகியே போற்றி
ஓம் காமேசன் கட்டிட்ட மங்கலநாண் கழுத்தழகி போற்றி

ஓம் பொன்னங் கதமோடு கேயூரத் தோளழகியே போற்றி
ஓம் செம்மணியின் அட்டிகைசேர் பதக்கத்து முத்துடையாளே போற்றி
ஓம் காமேசன் மனம் வாங்கும் கலச முலைப் பேரழகி போற்றி
ஓம் கொப்பூழாம் தோட்டத்துக் கொடிபழுத்த குவிமுலையாளே போற்றி
ஓம் உரோமத்தின் கொடியதனால் உணர்ந்தறியும் மின்னிடையாளே போற்றி
ஓம் தனபாரம் தாங்கற்கு அமைந்தனைய மும்மடிப்பை
           இனமாகக் கொண்டிட்ட இடையழகு மிக்குடையாளே போற்றி
ஓம் செம்மைமிகு பட்டாடை சேர்ந்தொளிரும் நல்லிடையாளே போற்றி
ஓம் செம்மணியின் கிங்கிணிகள் ஒலிசெய்யும் மேகலையாளே போற்றி
ஓம் காமேசனே அறியும் கவின்மென்மைத் தொடையினாளே போற்றி
ஓம் மாணிக்க மகுடமென விளங்குமுழந் தாளினாளே போற்றி

ஓம் காமனம்புக் கலம்போலும் கவின்மிகுந்த கணைக்காலளே போற்றி
ஓம் மறைந்தழகு வெளிக்காட்டும் மாண்பு கணுக்காலுடையாளே போற்றி
ஓம் ஆமையதன் முதுகனைய அழகுபுறப் பாதத்தாளே போற்றி
ஓம் தாமசமாம் குணம்மறைக்கும் காமர்நக ஒளியுடையாளே போற்றி
ஓம் தாமரைகள் தோற்றோடும் தகவுடைய திருவடியாளே போற்றி
ஓம் ஒளிமிகுந்த ரத்தினக்கல் சிலம்பலம்பு சேவடியாளே போற்றி
ஓம் களியன்னப் பேடனைய தளிர்மென்மை நடையினாளே போற்றி
ஓம் பேரழகு பெட்டகத்தாளே போற்றி
ஓம் செம்மையெங்கும் சேர்த்தொளிர்வாளே போற்றி
ஓம் ஓர்ந்தாலும் ஓர் குறையும் காணரிய உருவத்தாளே போற்றி

ஓம் சீரணிகள் எல்லாமும் சிறப்படையப் பூண்டிட்டாளே போற்றி
ஓம் சிவகாமேசன் திருமடியில் அமர்ந்திடுவாளே போற்றி
ஓம் சிவானியே போற்றி
ஓம் கணவனைத் தன்வயமாய் ஆக்கியவளே போற்றி
ஓம் மேருமலை நடுவுற்ற கொடி முடியாளே போற்றி
ஓம் சீர்நகர நாயகியாளே போற்றி
ஓம் சிந்தாமணி வீட்டில் வாழ்ந்திடுவாளே போற்றி
ஓம் ஐந்தென்னும் பிரமங்கள் ஆசனமாய் அமர்ந்திட்டாளே போற்றி
ஓம் பெருந்தாமரக் காடுவாழ்பவளே போற்றி
ஓம் கதம்பப் பெருங்காட்டில் வாழ்பவளே போற்றி

ஓம் பேரமுதக் கடல் நடுவே பெற்றாளே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் விரும்புவன வழங்கிடுவாளே போற்றி
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி
ஓம் பண்டனை அழிக்க முனையும் சக்தி சேனை தனையுடையாளே போற்றி
ஓம் சம்பத்கரீ நடத்திடும் நல் கரிப்படையால் சூழற்றாளே போற்றி
ஓம் அச்வாரூடா செலுத்தும் பல்கோடிப் பரிப்படையாளே போற்றி
ஓம் சீர் சக்கரத் தேர்மேவும் படைக்கலன்கள் புடை சூழ்வாளே போற்றி
ஓம் கேயசக்கரத் தேரூரும் மந்திரிணி தொழ நிற்பாளே போற்றி
ஓம் கிரிசக்கரத் தேருடைய தண்டினியை முன்னிட்டாளே போற்றி

ஓம் ஜ்வாலா மாலினிவைத்த தீக்கோட்டை நடுவிருப்பாய் போற்றி
ஓம் பண்டன்படை அழிக்க வரும் சக்திசேனை திறன்கண்டு மிக மகிழ்வாளே போற்றி
ஓம் நித்தியா தேவிகளின் பெருவீரம் கண்டுவகை மிகவுற்றாளே போற்றி
ஓம் பண்டன்தரு மக்கள் தமையழிக்கும் பாலாவின் திறன் மகிழ்வாளே போற்றி
ஓம் மந்திரிணி விசங்களை அழித்தமையால் மகிழ்ந்திடுவாளே போற்றி
ஓம் விசுக்கிரன் உயிர் போக்கும் தண்டினியைப் புகழ்ந்திடுவாளே போற்றி
ஓம் காமேசன் முகம் பார்த்து கணேசனைத் தோற்றுவித்தாளே போற்றி
ஓம் பண்டன்விடு படைக்கெதிராய் கணைமழையைத் தான்பொழிவாளே போற்றி
ஓம் மாகணேசன் உடைத்திட்ட இடர்ப்பொறியால் மிகமகிழ்வாய் போற்றி
ஓம் தன் நகத்தால் நாரணன்பத் தவதாரம் படைத்தாளே போற்றி

ஓம் பாசுபதக் கணைத் தீயால் அரக்கர் படை அழித்திட்டாய் போற்றி
ஓம் காமேசன் கணையதனால் பண்டாசுரனோடவன் தீமாவாம்
       தலைநகரம் குனியகம் எரித்திட்டாளே போற்றி
ஓம் பிரமனரி இந்திரரும் தேவர்களும் தொழ நின்றாளே போற்றி
ஓம் அரனெரித்த மதனுயிரைத் தருமருந்துக் கொடியானாளே போற்றி
ஓம் சீர்மிகுந்த வாக்பவத்தின் கூடத்தைத் தன்னுடைய ஏர்உற்ற முகத்தாமரையாகக் கொண்டிட்டாளே போற்றி
ஓம் கண்டமுதல் இடைவரையில் காமராஜ நடுக்கூடம் கொண்ட திருஉருவானாளே போற்றி
ஓம் குலவுமிடைக் கீழ்ப்பகுதி சக்திபீட மொன்றிட்ட தனிப்பகுதியாய்க் கொண்டாளே போற்றி
ஓம் மூலமாம் பெருமந்திரம் தானாகி விளங்குவாளே போற்றி
ஓம் மூலத்தின் முக்கூடம் தன்னுடலயாய்த் தான் கொண்டாளே போற்றி
ஓம் குலாமுதச் சுவையினில் தனியின்பம் கண்டிட்டாளே போற்றி

ஓம் குலமறையைக் காத்திடுவாளே போற்றி
ஓம் குலமகளாய்த் தான் திகழ்வாளே போற்றி
ஓம் குலத்துள்ளே உறைந்திடுவாளே போற்றி
ஓம் கௌல வழிபாடுறுவாளே போற்றி
ஓம் குலப்பிறப்பாம் யோகத்தை வரச்செய்யும் அருளுடையாளே போற்றி
ஓம் அகுலமாம் சுழுமுனையாளே போற்றி
ஓம் சமயத்தின் நடு நிற்பாளே போற்றி
ஓம் ஆறாதார வழிபாட்டால் அகமகிழ்ந்திடுபவளே போற்றி
ஓம் மூலதாராத் தனியாளே போற்றி
ஓம் பிரமநாடி முடிப் பொடிப்பாளே போற்றி

ஓம் மணி பூரகத்துள் உதிப்பாளே போற்றி
ஓம் மால்முடிப்பைப் பிளந்திடுவாளே போற்றி
ஓம் ஆக்கினைச் சக்கரத்தின் நடுவே திகழ்பவளே போற்றி
ஓம் உருத்திர நாடியதன் உறுமுடிப்பை ஒடித்திடுவாளே போற்றி
ஓம் ஆயிரமாம் இதழ்கொண்ட தாமரையில் வீற்றிருப்பாளே போற்றி
ஓம் அமுதத்தைப் பெருமழையாய் அகம்புறத்தே பொழிவிப்பாளே போற்றி
ஓம் மின்னலென ஒளிர்ந்திடுவாளே போற்றி
ஓம் ஆறுசக்கர மேல் நிலைப்பாய் போற்றி
ஓம் திருவிழாவில் மிகமகிழ்வாய் போற்றி
ஓம் குண்டலமாய்ச் சுருண்டிடுவாய் போற்றி

ஓம் தாமரையின் நூல் போல மெல்லியலாய் விளங்கிடுவாளே  போற்றி
ஓம் பவானியாளே போற்றி
ஓம் பாவனையால் அடையத்தக்காளே போற்றி
ஓம் பிறவி எனும் காடழிக்கும் கோடரியாவாளே போற்றி
ஓம் மங்கலத்தை விரும்புவாளே போற்றி
ஓம் மங்கல திருவுருவாளே போற்றி
ஓம் அன்பருக்கு நல்ல வெல்லாம் அருள் செய வல்லாளே போற்றி
ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி
ஓம் பக்தியால் அடைய வல்லாளே போற்றி
ஓம் பக்திக்கே வசமாவாளே போற்றி

ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி
ஓம் சம்புவின் சக்தியே போற்றி
ஓம் சாரதையாள் பூசிப்பவளே போற்றி
ஓம் சர்வாணியே போற்றி
ஓம் நல்லின்பம் என்றும் தருவாளே போற்றி
ஓம் சங்கரன் பத்தினியாளே போற்றி
ஓம் செல்வமெல்லாம் நல்கிடுவாளே போற்றி
ஓம் பதிவிரதையே போற்றி
ஓம் சரத்கால மதியனைய முகத்தினாளே போற்றி
ஓம் நுணங்கிய வயிறுடையாளே போற்றி

ஓம் சாந்தி நிறை வடிவானாளே போற்றி
ஓம் ஆதாரமில்லாதாளே போற்றி
ஓம் அழுக்கற்றோளே போற்றி
ஓம் பற்றிலாளே போற்றி
ஓம் மும்மல மொட்டாதாளே போற்றி
ஓம் நிலை பெற்றவளே போற்றி
ஓம் உருவிலாளே போற்றி
ஓம் கலக்க மொன்றில்லாதளே போற்றி
 ஓம் முக்குணங்கட்கு எட்டாதாளே போற்றி
ஓம் கூறுபடாத் தன்மையாளே போற்றி

ஓம் மேவுசாந்தத் திருவுருவாளே போற்றி
ஓம் விருப்ப மொன்றில்லாளே போற்றி
ஓம் ஊழியினும் அழியாதாளே போற்றி
ஓம் முத்தியின் வடிவுடையாளே போற்றி
ஓம் மாறுபாட்டிற் கப்பாலாளே போற்றி
ஓம் பிரபஞ்சத்திற் கெட்டாதாளே போற்றி
ஓம் சார்பேதுமில்லாதாளே போற்றி
ஓம் எப்போதும் தூய்மையளே போற்றி
ஓம் என்றும் அறிவு வடிவுடையாளே போற்றி
ஓம் குறை ஒன்றுமில்லாதாளே போற்றி

ஓம் குறுகும் இடைவெளியில்லாளே போற்றி
ஓம் காரணமொன்றில்லாதாளே போற்றி
ஓம் களங்க மேதுமில்லாதாளே போற்றி
ஓம் உபாதிகள் ஒன்றுமிலாளே போற்றி
ஓம் தாமே ஈசுவரமாயானாளே போற்றி
ஓம் ஆசையற்ற தன்மையளே போற்றி
ஓம் ஆமை தனைக் கெடுப்பவளே போற்றி
ஓம் செருக்கேதுமில்லாதாளே போற்றி
ஓம் செருக்கெல்லாம் ஒழிப்பவளே போற்றி
ஓம் கவலை ஒன்றும் இலாதவளே போற்றி

ஓம் அகங்காரமற்றவளே போற்றி
ஓம் மதிமயக்கமற்றவளே போற்றி
ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி
ஓம் மமதையே இல்லாதாளே போற்றி
ஓம் மமதையை அழிப்பவளே போற்றி
ஓம் பாபமேதுமற்றவளே போற்றி
ஓம் கோபம் அண்டாதாளே போற்றி
ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி
ஓம் பேராசையற்றவளே போற்றி
ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

ஓம் ஐயப்பாடில்லாதவளே போற்றி
ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்றி
ஓம் பிறவியென்பதிலாதாளே போற்றி
ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி
ஓம் சீரில்லாச் செயலிலாளே போற்றி
ஓம் சேர்மறுப்பிற்குட்படாதாளே போற்றி
ஓம் பேதமறுப்பிற்குட்படாதாளே போற்றி
ஓம் பேதமொன்றிலாதாளே போற்றி
ஓம் பேதவுணர்வழிப்பவளே போற்றி
ஓம் நாசமுற்றும் அற்றவளே போற்றி

ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி
ஓம் செயற்படுதல் இல்லாதாளே போற்றி
ஓம் தேருமுதலி வேண்டிடாளே போற்றி
ஓம் ஒப்புமையே அற்றவளே போற்றி
ஓம் ஒளிர்கருமைக்குழலினாளே போற்றி
ஓம் அபாயமேதும் அற்றவளே போற்றி
ஓம் வரம்பு மீறல் இலாதாளே போற்றி
ஓம் எளிதடைய ஒண்ணாதாளே போற்றி
ஓம் நெருங்கிடற்கரியவளே போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி

ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி
ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி
ஓம் கெட்டவர்க்கு எட்டாதாளே போற்றி
ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி
ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி
ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி
ஓம் இளகு கருணை கொண்டவளே போற்றி
ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தில் இல்லாதாளே போற்றி
ஓம் எல்லாச்சக்தியும் தானாய் ஆனவளே போற்றி
ஓம் எல்லா மங்கல வடிவம் பெற்றவளே போற்றி

ஓம் நற்கதிபலவும் நல்கிட வல்லாளே போற்றி
ஓம் எல்லாவற்றிற்கும் தலைவியே போற்றி
ஓம் எல்லாமாகவும் இருந்திடவல்லாளே போற்றி
ஓம் எல்லாமந்திர வடிவாயும் இருப்பவளே போற்றி
ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி
ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி
ஓம் மனோன்மணியே போற்றி
ஓம் மாகேசியே போற்றி
ஓம் மாதேவியே போற்றி
ஓம் மகாலெட்சுமியே போற்றி

ஓம் மிருடானியே போற்றி
ஓம் மாபெரும் உருவினளே போற்றி
ஓம் பெரும் பூசைக்குரியவளே போற்றி
ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி
ஓம் மாமாயையே போற்றி
ஓம் மாசத்துவப் பேருருவே போற்றி
ஓம் மாசத்தியே போற்றி
ஓம் பேரன்பின் இன்னுருவாளே போற்றி
ஓம் பேரின்பப் பெட்டகமே போற்றி
ஓம் பெருஞ்செல்வம்தானுடையாளே போற்றி

ஓம் பெருவீரம் தானுறுவாளே போற்றி
ஓம் பெருவலிமை மிகவுடையாளே போற்றி
ஓம் பேரறிவின் வடிவானாளே போற்றி
ஓம் பெரும் சித்தி திருவுருவாளே போற்றி
ஓம் பெருயோக முற்றார்க்கும் பெருந்தலைவியாய்த் திகழ்வாளே போற்றி
ஓம் மாபெரும் தந்திரத்தாளே போற்றி
ஓம் மாபெரும் மந்திரத்தாளே போற்றி
ஓம் பெருமை மிகு யந்திரத்தாளே போற்றி
ஓம் பெருமை மிகு இருக்கையாளே போற்றி
ஓம் மாயாக முறை வழியே பூசனைக் குரியவளே போற்றி

ஓம் பெருமைமிகு பைரவால் பூசிக்கப் பெற்றவளே போற்றி
ஓம் மாகேசன் பேரூழித் தாண்டவத்தின் சான்றாவாளே போற்றி
ஓம் மாபெரும் காமேசன் பட்டத்துப் பேரரசியே போற்றி
ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி
ஓம் அறுபத்து நான்கான பணிவிடைகள் ஏற்பவளே போற்றி
ஓம் அறுபத்து நான்கென்னும் கலைகளாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் அறுபத்து நான்கு கோடி யோகினியரின்
       பெருங்கணம் பணிவிடை புரிந்திடப் பெறுபவளே போற்றி
ஓம் மனுதந்த வித்தையாளே போற்றி
ஓம் சந்திரவித்தையாளே போற்றி
ஓம் சந்திரமண்டல நடுவினில் திகழ்பவளே போற்றி

ஓம் அழகிய வடிவினளே போற்றி
ஓம் அழகிய சிரிப்பினளே போற்றி
ஓம் அழியாச் சந்திரகலையினைச் சூடினாளே போற்றி
ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி
ஓம் சீர்மிகு சக்கரம் இருப்பிடம் கொண்டாளே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் தாமரைக்கண்ணியே போற்றி
ஓம் பதுமராக மணிபோலப் பரவும் பேரொளியே போற்றி
ஓம் ஐந்தான பிரேதங்கள் ஆசனமாய்க் கொண்டவளே போற்றி
ஓம் ஐந்தான பிரமங்கள் தன்னுருவாய் ஏற்றவளே போற்றி

ஓம் பேரறிவாய்த் திகழ்வாளே போற்றி
ஓம் நிறைமகிழ்வானவளே போற்றி
ஓம் பெருஞானம் ஒன்றியதோர் திருவுருவு ஆயினாளே போற்றி
ஓம் தியானமும் அதைச் செய்வாரும் அதன் தெய்வமும் ஆனவளே போற்றி
ஓம் அறத்திற்கும் மறத்திற்கும் அப்பாலாய் நிற்பவளே போற்றி
ஓம் விசுவனின் திருவுருவாளே போற்றி
ஓம் விழிப்புநிலை தோன்றிடுவாளே போற்றி
ஓம் கனவுநிலை காணுவாளே போற்றி
ஓம் நுணுக்க நிலைவிரும்புவாளே போற்றி
ஓம் தூங்கும் உயிராய்த் திகழ்வாளே போற்றி

ஓம் ஓங்கு ஞானத்திருவுருவாளே போற்றி
ஓம் துரியநிலை தானுறைவாளே போற்றி
ஓம் துரியாதீத நிலை கடந்தாளே போற்றி
ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி
ஓம் பிரமன் வடிவானாளே போற்றி
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்றி
ஓம் கோவிந்தன் உருவேற்பாளே போற்றி
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி
ஓம் உருத்திரவடிவுறுவாளே போற்றி
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி

ஓம் ஈசுவரி எனப்படுவாளே போற்றி
ஓம் சதாசிவன் எனப்படுவாளே போற்றி
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி
ஓம் ஐந்தொழில் புரிவதில் ஈடுபாடுடையவளே போற்றி
ஓம் சூரிய மண்டல நடுவில் திகழ்வாளே போற்றி
ஓம் வைரவன் தேவியே போற்றி
ஓம் பகமாலினியே போற்றி
ஓம் பத்மாசனத்துறை தேவியே போற்றி
ஓம் பகவதியே போற்றி
ஓம் பத்மநாப சகோதரியே போற்றி

ஓம் கண்மூடித் திறப்பில் கணக்கிலாப் புவனம் உண்டாக்கி அழித்திட வல்லவளே போற்றி
ஓம் ஆயிரம் தலைகளும் வாய்களும் உடையாளே போற்றி
ஓம் ஆயிரம் கண்கள் உற்றவளே போற்றி
ஓம் ஆயிரம் கால்கள் உள்ளவளே போற்றி
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி
ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி
ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி
ஓம் அறம்பலச் செயல்களில் பயன் தருபவளே போற்றி
ஓம் மறைத்தாய் வகிட்டில் வைத்த குங்குமமாய்த் தன்
      திருப்பாதத் தூளிகள் திகழ்ந்திடும் தன்மையளே போற்றி
ஓம் ஆகமச் சிப்பியுள் ஆணி முத்தானவளே போற்றி

ஓம் அறம் பொருள் இன்ப வீடுகள் அருள்பவளே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் இன்பம் அருள்பவளே போற்றி
ஓம் புவனேசுவரியே போற்றி
ஓம் புகழ்மிகு நற்றாயே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவளே போற்றி
ஓம் நாரணன், நான் முகன், தேவர்கள் தலைவனும் வணங்கிட்டபான்மையாளே போற்றி
ஓம் நாரணியே போற்றி
ஓம் நாத உருவினளே போற்றி
ஓம் பேரும் ஊரும் இல்லாதவளே போற்றி

ஓம் ஹ்ரீங்காரத் திருவுருவே போற்றி
ஓம் நாணமெனும் குணவடிவே போற்றி
ஓம் உள்ளத்திற்கு உவப்பாவாளே போற்றி
ஓம் தள்ளத்தக்கனவும் கொள்ளத் தக்கனவும் இல்லாத தலைவியே போற்றி
ஓம் அரசர்க் கரசியாய் அர்ச்சிக்கப் பெறுபவளே போற்றி
ஓம் அரசியாய் ஆள்பவளே போற்றி
ஓம் அழகின் திருவுருவே போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் மனநிறைவளிப்பாளே போற்றி
ஓம் விளையாட்டுடையாளே போற்றி

ஓம் சுவைத்தற்குரியாளே போற்றி
ஓம் கிங்கிணி ஒலிசெய் மேகலை அணிபவளே போற்றி
ஓம் இரமா தேவீ போற்றி
ஓம் எழில் நிலா வதனியே போற்றி
ஓம் இரதியின் வடிவே போற்றி
ஓம் இரதியை விரும்புவாளே போற்றி
ஓம் காத்தல் புரிபவளே போற்றி
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி
ஓம் பெண்டிராய்த் திகழ்பவளே போற்றி
ஓம் பதியுடன் மகிழ்பவளே போற்றி

ஓம் விரும்பிடப் பெறுபவளே போற்றி
ஓம் காமகலை வடிவினாளே போற்றி
ஓம் கதம்ப மலரினில் நாட்டம் மிகக் கொண்டாளே போற்றி
ஓம் கல்யாணியே போற்றி
ஓம் உலகின் ஆணிவேர் ஆனவளே போற்றி
ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி
ஓம் கலைகளை உடையவளே போற்றி
ஓம் கொஞ்சுமொழி உரைப்பவளே போற்றி
ஓம் காந்தி மிகவுடையவளே போற்றி
ஓம் மதுச்சுவை விரும்புவாளே போற்றி

ஓம் வரம்தரும் பான்மையளே போற்றி
ஓம் வடிவழகுக் கண்ணாளே போற்றி
ஓம் வாருணீ மதுவினால் தன்னிலை மறப்பாளே போற்றி
ஓம் அனைத்துக்கும் மேம்பட்டவளே போற்றி
ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி
ஓம் நினைப்பரு விந்தியமலையில் நிலைத்திருப்பவளே போற்றி
ஓம் உலகினைக் கருத்தாங்கி வெளிப்படுத்தி வளர்ப்பவளே போற்றி
ஓம் மறைகளின் நற்றாயே போற்றி
ஓம் பரம்பொருளின் மாயையே போற்றி
ஓம் கேளிக்கை உடையவளே போற்றி

ஓம் திருத்தல வடிவே போற்றி
ஓம் திருத்தலத்து இறைவியே போற்றி
ஓம் திருத்தலம் தலத்தினன் இரண்டையும் காப்பவளே போற்றி
ஓம் தேய்வும் வளர்ச்சியும் இல்லாதவளே போற்றி
ஓம் சேத்திர பாலரால் பூசிக்கப் பெற்றவளே போற்றி
ஓம் ஒப்பற்ற வெற்றிச் சிறப்பினை உடையவளே போற்றி
ஓம் தோயும் மலமற்றவளே போற்றி
ஓம் வணங்கற்குரியவளே போற்றி
ஓம் வணங்குவோரிடத்துப் பேரன்பு பூண்பவளே போற்றி
ஓம் வாக்குவாதினியே போற்றி

ஓம் வடிநீள் குழலினாய் போற்றி
ஓம் அக்கினி மண்டலம் உறைபவளே போற்றி
ஓம் அன்பர்க்குக் கற்பகக் கொடியானவளே போற்றி
ஓம் பசுக்களைப் பாசத்தின் நீக்குவாளே போற்றி
ஓம் பாஷண்டிகளை ஒடுக்குபவளே போற்றி
ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி
ஓம் தாபமாம் முத்தீயால் தவித்திடும் மாந்தர்க்கு சாந்தம் மிக அளிக்கும் தண்ணிலவே போற்றி
ஓம் காந்தப் பருவத்து இளையவளே போற்றி
ஓம் தவசிகள் வழிபடுந் தன்மையாளே போற்றி
ஓம் மெல்லிய இடையினாளே போற்றி

ஓம் பேரிருளைக் கடந்திடுவாளே போற்றி
ஓம் ஞானத்தின் திருவுருவே போற்றி
ஓம் அதுவெனும் சொல்லின் குற்றமற்ற குறிப்பொருள் ஆனாளே போற்றி
ஓம் பெருஞானத்து ஒன்றிய உருவினளே போற்றி
ஓம் தன் பேரானந்தக் கடல் முன் பிரமன் முதலியோரின்
      ஆனந்தம் இடுசிறுதுளியாய் ஆக்கினாய் போற்றி
ஓம் பரையெனும் மூல ஒலிவடிவே போற்றி
ஓம் உள்நோக்கிக் கண்டிடும் பேரறிவு வடிவே போற்றி
ஓம் ஒலிவரும் இடங்காண் பச்யந்தி வடிவே போற்றி
ஓம் பொறிபுலங்கட் கெட்டாத ஒளியே போற்றி
ஓம் நடுநிலை அடைந்த மத்திமை ஒலியே போற்றி

ஓம் செவிப்புலன் உணரும் வைகரீ வடிவே போற்றி
ஓம் பக்தர்கள் மனக் குளத்து அன்னமே போற்றி
ஓம் காமேசனின் உயிர் நாடியே போற்றி
ஓம் அனைவரின் செயல்களும் அறிவாளே போற்றி
ஓம் காமனால் காமகிரி பீடத்தில் பூசிக்கப் பெற்றவளே போற்றி
ஓம் சிங்காரச் சுவைமிகு நிறைந்தவளே போற்றி
ஓம் வெற்றியளே போற்றி
ஓம் சாலந்தர பீடத்தாளே போற்றி
ஓம் ஒட்டியாண பீடத்தில் நிலைத்தவளே போற்றி
ஓம் பிந்து மண்டலத்தில் திகழ்பவளே போற்றி

ஓம் மறைவு முறை வேள்வியால் வழிபடப் பெறுபவளே போற்றி
ஓம் மறைவு முறை தருப்பணத்தால் மனநிறைவு உறுபவளே போற்றி
ஓம் உடனருள் புரிபவளே போற்றி
ஓம் அனைத்திற்கும் சான்றாவாளே போற்றி
ஓம் தொடர்ந்தறி சான்றிலாளே போற்றி
ஓம் ஆறங்க தேவதையே போற்றி
ஓம் ஆறுகுணம் நிறைதேவி போற்றி
ஓம் அன்பரகப் பேரருளே போற்றி
ஓம் உவமையே இல்லாதாளே போற்றி
ஓம் வீட்டின்ப சுகமருள்வாளே போற்றி

ஓம் பதினாறு நித்தியதேவிகளின் வடிவினாளே போற்றி
ஓம் பதியைத் தன்னுடலில் பாதியாய்க் கொண்டவளே போற்றி
ஓம் ஒளிவட்டம் சூழுற்றாளே போற்றி
ஓம் ஒளிவட்டத் திருவுருவே போற்றி
ஓம் எல்லார்க்கும் தெரிந்தவளே போற்றி
ஓம் மேலான தனியிறைவியே போற்றி
ஓம் ஆதிகாரணமான இயற்கையாய் விளங்குவாளே போற்றி
ஓம் வெளிப்படையாய்த் தெரியாதாளே போற்றி
ஓம் வெளிப்படையாய்த் தெரிந்தும் தெரியாதும் இருப்பவளே போற்றி
ஓம் யாண்டும் பரவியிருப்பவளே போற்றி

ஓம் பாருறை வடிவம் பலப்பல கொண்டவளே போற்றி
ஓம் வித்தை அவித்தை வடிவங்கள் ஏற்றாளே போற்றி
ஓம் பெருங் காமேசனின் கண்ணாம் அல்லியை திருவுற மலர்த்தும் தெள்ளிய நிலவினாளே போற்றி
ஓம் அடியார் உளத்தே அடர்ந்துள்ள இருட்டை நொடியில் போக்கொளி ஞாயிறுகள் ஆனவளே போற்றி
ஓம் சிவனைத் தூதுக்கு விட்டவளே போற்றி
ஓம் முறைவழி சிவனால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் சிவனின் உடலாய் நின்றிடு தேவியும் ஆவாளே போற்றி
ஓம் மங்கலம் செய்பவளே போற்றி
ஓம் சிவனன்பு மாறாதாளே போற்றி
ஓம் தங்கிடும் நாட்டம் சிவனிடம் வைத்தவளே போற்றி

ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி
ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் அளவிடற்கரியவளே போற்றி
ஓம் தனிப்பேரொளியாளே போற்றி
ஓம் எண்ணற்கும் சொல்லற்கும் எட்டாப்பெற்றியாளே போற்றி
ஓம் அறிவாற்றல் வடிவினாளே போற்றி
ஓம் உள்ளறிவிற்கு உருக்கொடுப்பாளே போற்றி
ஓம் சடவுலகப் படைப்பிற்கோர் காரணமாம் பெருஞ்சக்தியே போற்றி
ஓம் சடமான உலகத்தின் வடிவாய் இருப்பவளே போற்றி
ஓம் காயத்திரியாளே போற்றி

ஓம் உச்சரிப்பாய் இருந்திடுவாளே போற்றி
ஓம் சந்தியா தேவியே போற்றி
ஓம் வந்திக்க வந்திடும் ஆத்மா கூட்டங்கள் சூழ்ந்திடப் பெற்றவளே போற்றி
ஓம் முப்பத்தாறான தத்துவ இருக்கையாளே போற்றி
ஓம் எப்போதும் அதுவானாளே  போற்றி
ஓம் தப்பாது நீயாவாளே போற்றி
ஓம் அயீ என்றன்புடன் அழைத்தற்குரியவளே போற்றி
ஓம் ஐந்தான கோசத்துள் அமர்ந்திடும் நாயகியே போற்றி
ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி
ஓம் எப்போதும் அழியாத இளமையோடு இருப்பவளேபோற்றி

ஓம் ஆனந்தக் களிப்பாலே தானெங்கும் விளங்குவாளே போற்றி
ஓம் ஆனந்தக் களிப்பாலே சுழலும் செங்கண் படைத்தவளே போற்றி
ஓம் ஆனந்தக் களிப்பாலே சிவந்திட்ட கன்னத்தவளே போற்றி
ஓம் சந்தனக் குழம்பாலே பூச்சிட்ட அங்கத்தாளே போற்றி
ஓம் சம்பகப் பூக்களில் மங்காத விருப்புடையாளே போற்றி
ஓம் திறமை மிக்கவளே போற்றி
ஓம் திருமலிந்த பொன்மேனியாளே போற்றி
ஓம் குருகுல்லா தேவியே போற்றி
ஓம் குலத்தின் தலைவியே போற்றி
ஓம் குலகுண்டத் துறைவாளே போற்றி

ஓம் கவுலமுறை வழிபாட்டாளே போற்றி
ஓம் கணபதிக்கும் குமரனுக்கும் குலவுநல் தாயானவளே போற்றி
ஓம் மகிழ்ச்சியின் வடிவமே போற்றி
ஓம் உடல்வளத்தின் நிறைவுடையாளே போற்றி
ஓம் புத்தியின் <உருவத்தாளே போற்றி
ஓம் தைரியத்தின் வடிவானாளே போற்றி
ஓம் மனவடக்க உருவினாளே போற்றி
ஓம் மங்கலத்தோடு இருப்பவளே போற்றி
ஓம் கவர்ந்தீர்க்கும் காந்தியாளே போற்றி
ஓம் நந்தினீ நாமத்தாளே போற்றி

ஓம் தடைகளைத் துடைப்பவளே போற்றி
ஓம் பேரொளியாளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் சுழற்கண்ணழகி காம உருவினாளே போற்றி
ஓம் மாலைகள் பூண்டவளே போற்றி
ஓம் அன்னங்கள் சூழ்ந்தவளே போற்றி
ஓம் மாதாவாய் வாழ்வாளே போற்றி
ஓம் மலயமலையில் வாழ்பவளே போற்றி
ஓம் அழகுமுகமுடையவளே போற்றி
ஓம் தாமரைகள் நிறைவடிவே போற்றி

ஓம் அழகுமிகு புருவத்தாய் போற்றி
ஓம் அழகுமங்கல வடிவத்தாளே போற்றி
ஓம் தேவர்களின் தலைவியே போற்றி
ஓம் காலகண்ட சிவன் மனைவியே போற்றி
ஓம் காந்தி மிக உடையாளே போற்றி
ஓம் உணர்வுகளை எழுப்பிடுவாளே போற்றி
ஓம் நுண்ணிய வடிவுடையாளே போற்றி
ஓம் வஜ்ரேஸ்வரி தேவியாளே போற்றி
ஓம் வாமதேவ பத்தினியே போற்றி
ஓம் வயதுநிலை மாறாதாளே போற்றி

ஓம் சித்தர்களின் பெருந்தலைவி போற்றி
ஓம் சித்தர்களின் நல்வித்தையே போற்றி
ஓம் சித்தர்களைக் காக்கும் தாயே போற்றி
ஓம் சீரியல்புப் புகழுடையாளே போற்றி
ஓம் விசுத்தியாம் சக்கரத்து விளங்கிடுவாளே போற்றி
ஓம் இளஞ்சிவப்பு வண்ணத்தாளே போற்றி
ஓம் முக்கண்ணுடையவளே போற்றி
ஓம் சுக்குமாத்தடி போன்ற படைக்கலங்கள் உவந்தேற்றவளே போற்றி
ஓம் ஆகாசத்து ஒரு முகத்தாளே போற்றி
ஓம் பாயசான்னம் விரும்பிடுவாளே போற்றி

ஓம் தோலுறைவாளே போற்றி
ஓம் அறிவிலியாம் பசுக்களுக்கு அச்சத்தை தந்திடுவாளே போற்றி
ஓம் அமிருதா முதலான சக்திகள் சூழ பெற்றிருப்பாளே போற்றி
ஓம் டாகினீஸ்வரியென்னும் யோகினியின் வடிவத்தாளே போற்றி
ஓம் அனாகதத் தாமரையாளே போற்றி
ஓம் அழகு பசும் பொற்கொடியாளே போற்றி
ஓம் விண்காற்று முகமுடையாள் போற்றி
ஓம் தெற்றிப் பல் ஒளியுடையாளே போற்றி
ஓம் அட்சமாலை முதலான ஆயுதங்கள் கொண்டவளே போற்றி
ஓம் குருதி தாதுதனில் உறைவாளே போற்றி

ஓம் காளராத்திரி முதலாம் சக்திகளின் கூட்டங்கள் குழவுளாளே போற்றி
ஓம் நெய்யன்னம் விரும்பிடுவாளே போற்றி
ஓம் மாவீரத்தலைவர்க்கு வரமளிப்பாளே போற்றி
ஓம் ராகினித்தாய் யோகினியின் திருவடிவம் பெற்றிட்டாளே போற்றி
ஓம் மணிபூரகத் தாமரையாளே போற்றி
ஓம் விண்வெளித்தீ முகமுடையாளே போற்றி
ஓம் வச்சிரமாம் படைக்கலங்கள் பூண்டிட்டாளே போற்றி
ஓம் டாமரியாள் முதலிய சக்திகளால் சூழற்றாளே போற்றி
ஓம் செந்நிறத்தவளே போற்றி
ஓம் தசைத்தாது தனில் உறைவாளே போற்றி

ஓம் வெல்லம்சேர் பொங்கலதை விரும்புகின்ற மனமுடையாளே போற்றி
ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி
ஓம் லாகினியின் வடிவுடையாளே போற்றி
ஓம் சுவாதிட்டத் தாமரையாளே போற்றி
ஓம் விண்வளித்தீ நீர்முகத்தாளே போற்றி
ஓம் சூலமுதல் படைக்கலங்கள் ஏற்றிட்டாளே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தழகியே போற்றி
ஓம் செருக்குடையாளே போற்றி
ஓம் கொழுப்பென்னும் தாதுறைவாளே போற்றி
ஓம் தேன் சுவைப்பவளே போற்றி

ஓம் பந்தினீ முதலான பரிவார தேவதையாளே போற்றி
ஓம் தயிரன்னம் விரும்பிடுவாளே போற்றி
ஓம் காகினித் தாய் யோகினியே போற்றி
ஓம் மூலதாரத் தாமரையாளே போற்றி
ஓம் பஞ்சபூத ஐம்முகத்தாளே போற்றி
ஓம் எலும்புத்தாதுறைபவளே போற்றி
ஓம் அங்குசம் முதலிய ஆயுதத்தவளே போற்றி
ஓம் வரதா முதலிய தேவிகளால் சூழப்பெற்றவளே போற்றி
ஓம் பயிறன்னம் விரும்புவாளே போற்றி
ஓம் சாகினித்தாய் யோகினியே போற்றி

ஓம் ஆக்கினைத் தாமரை வாழ்வாளே போற்றி
ஓம் வெண்ணிறத்தாளே போற்றி
ஓம் மனத்தோடு பஞ்சபூதத்தாறு முகம்படைத்தவளே போற்றி
ஓம் நிணத்தாதுறைந்திடுவாளே போற்றி
ஓம் அம்சவதீ முதலிய சக்தி கூட்டத்தவளே போற்றி
ஓம் மஞ்சளன்னம் விரும்புபவளே போற்றி
ஓம் ஹாகினியாம் யோகினியே போற்றி
ஓம் ஆயிரமாம் இதழ்த் தாமரையாளே போற்றி
ஓம் அனைத்து வண்ணமுமுடையவளே போற்றி
ஓம் அனைத் தாயுதமும் ஏற்றவளே போற்றி

ஓம் சுக்கிலமாம் தாதுறைவாளே போற்றி
ஓம் எங்கும் நிறை முகமுடையாளே போற்றி
ஓம் பக்குவமாம் உணவனைத்தும் பரிந்தேற்கும் உளம் போற்றி
ஓம் யாகினித்தாய் யோகினியே போற்றி
ஓம் சுவாகாவடிவுற்றாளே போற்றி
ஓம் சுவதாவாம் திருவுருவாளே போற்றி
ஓம் அவித்தை உருவத்தாளே போற்றி
ஓம் மேதையாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் வேதமாய் விளங்குவாளே போற்றி
ஓம் நினைவு நூல்கள் தானாவாளே போற்றி

ஓம் தனக்குமேல் மிக்காரும் உத்தமரென்றில்லாதாளே போற்றி
ஓம் புண்ணியத்தின் புகழுடையாளே போற்றி
ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி
ஓம் புண்ணியம் தரவல்ல இன்னிசைப் புகழுடையவளே போற்றி
ஓம் இந்திராணி தேவியால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி
ஓம் புரிகளாய்ச் சுருண்டு முன் நெற்றியில் புரளும் குழலினாய் போற்றி
ஓம் பரம்பொருளை விளக்கும் சக்தியே போற்றி
ஓம் முக்திக்கு வித்தான வித்தையே போற்றி
ஓம் விண் முதல் உலகங்கள் ஈன்றளித்த நற்றாயே போற்றி

ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்றி
ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி
ஓம் அனைத்திற்கும் முதன்மையானவளே போற்றி
ஓம் எண்ணற்கியலாத வடிவங்கள் உடையாய் போற்றி
ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி
ஓம் காத்தியாயினியே போற்றி
ஓம் காலனை அழித்தவளே போற்றி
ஓம் கமலக் கண்ணனால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் தாம்பூலம் நிறைந்த வாயனளே போற்றி
ஓம் மாதுளம் பூ நிறத்தவளே போற்றி

ஓம் மானின் நோக்குடையாய் போற்றி
ஓம் மயக்கம் அளிப்பவளே போற்றி
ஓம் முதன்மை படைத்தவளே போற்றி
ஓம் சுகம்தரும் தேவியே போற்றி
ஓம் சூரிய வடிவினளே போற்றி
ஓம் யாண்டும் மன நிறைவுடையவளே போற்றி
ஓம் அன்பர்க்குச் செல்வமே போற்றி
ஓம் கட்டுப்பாடுறுத்துபவளே போற்றி
ஓம் அனைத்துக்கும் தலைவியே போற்றி
ஓம் மைத்திரீ முதலான நினைப்பருவாசனையால் அடைதற்குரியோய் போற்றி

ஓம் பேரூழிக் காலத்தும் சான்றாய் திகழ்பவளே போற்றி
ஓம் மேலான சத்தியாம் வடிவே போற்றி
ஓம் நிட்டையின் மேலான எல்லையாய் போற்றி
ஓம் பேரறிவுப் பெற்றியால் நிறைவான உருவினளே போற்றி
ஓம் மதுவுண்ட தன்மையால் சோம்பிக் காணப்படுவோய் போற்றி
ஓம் பெருமதம் கொண்டோய் போற்றி
ஓம் அகரமுதலிய அட்சர வடிவே போற்றி
ஓம் மாக்கயிலாயம் மகிழ்ந்துறை தேவியே போற்றி
ஓம் தாமரைத் தண்டுபோல் தளிர்க் கரம் உடையாய் போற்றி
ஓம் கொண்டாடத் தக்கவளே போற்றி

ஓம் குளிர் தயவுமிக்குடையாய் போற்றி
ஓம் பேராண்மை படைத்தவளே போற்றி
ஓம் ஆன்மாவை அறியும் வித்தையே போற்றி
ஓம் மாவித்யை திருவுருவே போற்றி
ஓம் சீர் வித்யா வடிவுடையோய் போற்றி
ஓம் காமன்செய் வழிபாட்டுடையாய் போற்றி
ஓம் சீர் பதினாறு அக்கரத்துருவே போற்றி
ஓம் முக்கூடத் திருவடிவே போற்றி
ஓம் காமகோடி பீடத்தோய் போற்றி
ஓம் கடைக்கண் பார்வைக்குக் காத்திருந்து ஏவல் செய்யும்
       பலகோடி லெட்சுமிகள் பரவிட்ட பாதத்தோய் போற்றி

ஓம் சிரத்தில் இருப்பவளே போற்றி
ஓம் சந்திரன் போன்றவளே போற்றி
ஓம் நெற்றியில் திகழ்வோய் போற்றி
ஓம் வானவில் ஒளியினாய் போற்றி
ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி
ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி
ஓம் முக்கோண நடுவினிலே முழுதீப வடிவினாய் போற்றி
ஓம் தாட்சாயணியே போற்றி
ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி
ஓம் ஆணவத் தக்கனின் வேள்வியை அழித்தவளே போற்றி

ஓம் அச்சம் அகற்றும் அழகுநீள் கண்ணினாய் போற்றி
ஓம் முகத்திற் கழகளிக்கும் புன்சிரிப்பின் ஒளியினாய் போற்றி
ஓம் குருவின் திருவடிவே போற்றி
ஓம் குணங்களுக்கு உறைவிடமே போற்றி
ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி
ஓம் கந்தனின் பிறப்பிடமே போற்றி
ஓம் தேவர்களின் தலைவியே போற்றி
ஓம் தண்டிக்கும் அறமுறையவளே போற்றி
ஓம் இதயத் திருவொளியில் இருந்திட்டருள்பவளே போற்றி
ஓம் பிரதமை முதல் பவுர்ணமி ஈறாகப் பதினைந்து திதிகளில் பூசிக்கப் பெறுபவளே போற்றி

ஓம் கலைகளாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் கலைகளின் தலைவியே போற்றி
ஓம் காப்பியக் காட்சிகளில் களிப்புள்ளம் கொண்டோய் போற்றி
ஓம் திருமகளும் கலைமகளும் இடப்புறத்தும் வலப்புறத்தும் சாமரைகள் கையேந்தி பணிவிடைசெய் பெற்றியளே போற்றி
ஓம் முதற்காரண சக்தியே போற்றி
ஓம் அளவிடற்கரியாளே போற்றி
ஓம் ஆன்மாவாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் அனைத்திற்கும் மேலானோய் போற்றி
ஓம் தூய்மை தரும் தோற்றத்தோய் போற்றி
ஓம் பலகோடி பிரமாண்டம் ஈன்றவளே போற்றி

ஓம் தெய்வீக ஒளி வீசும் உடலினாய் போற்றி
ஓம் க்லீங் காரத் திருவுருவே போற்றி
ஓம் தானாகி தனித்திருப்போய் போற்றி
ஓம் மறைவடக்க மானவளே போற்றி
ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி
ஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி
ஓம் மூவுலகும் வழிபடத்தக்கவளே போற்றி
ஓம் மும்மூர்த்தி வடிவுடையாய் போற்றி
ஓம் மூன்றாம் தசைபெறும் தேவர்கள் தலைவியே போற்றி
ஓம் மூவெழுத்துடைய மந்திர வடிவினளே போற்றி

ஓம் தெய்வீக நறுமணத்தவளே போற்றி
ஓம் சிந்தூரப் பொட்டழகியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் இமயவன் திருமகளே போற்றி
ஓம் கௌரியே போற்றி
ஓம் கந்திருவரால் வழிபாடுன்மையளே போற்றி
ஓம் உலகினைக் கருவாய்த் தாங்கிட வல்லோய் போற்றி
ஓம் இரணிய கர்ப்பர் திருவுருவானோய் போற்றி
ஓம் கொடியவரை அடக்குவோய் போற்றி
ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

ஓம் தியானிக்க எளியவளே போற்றி
ஓம் எல்லைக்குள் அடங்காதாய் போற்றி
ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி
ஓம் பேரறிவுத் திருவுருவே போற்றி
ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி
ஓம் உண்மையும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஆனவளே போற்றி
ஓம் <உலோபா முத்திரையால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் பிரமாண்ட மண்டலத்தை விளையாட்டாய் படைப்பவளே போற்றி
ஓம் புலப்படற் கரியவளே போற்றி
ஓம் புலப்படற் கொன்றுமிலாதாய் போற்றி

ஓம் அனைத்தையும் பகுத்திவிட்டு அறிந்திட வல்லாய் போற்றி
ஓம் அறிந்திட தக்கதாய் ஒன்றுமே இலாதாய் போற்றி
ஓம் யோகம் படைத்தவளே போற்றி
ஓம் யோகத்தை தருபவளே போற்றி
ஓம் யோகத்தால் அடையத் தக்கோய் போற்றி
ஓம் யோகத்தால் அடைந்திடும் ஆனந்த உருவே போற்றி
ஓம் யுகங்களைத் தாங்குவாய் போற்றி
ஓம் விருப்புடன் அறிவும் முயற்சியும் ஆனாய் போற்றி
ஓம் முழுமைக்கும் அடிப்படையினாய் போற்றி
ஓம் நிலைத்த நல் இருப்பிடத் தவளே போற்றி

ஓம் நிலைப்பொருளும் நிலையாப்பொருளும் ஆனவளே போற்றி
ஓம் எண்வடிவம் கொண்டோய் போற்றி
ஓம் அறியாத்தன்மையை வென்றோய் போற்றி
ஓம் உலகப் பயணம் ஒழுங்குற நடத்துவோய் போற்றி
ஓம் தனையலால் வேறின்றி தனித்து விளங்குவோய் போற்றி
ஓம் அனைத்துமாம் உருவினளே போற்றி
ஓம் இரண்டற நிற்பவளே போற்றி
ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி
ஓம் அன்னமளிப்போய் போற்றி
ஓம் அருஞ்செல்வம் மிகத் தருவோய் போற்றி

ஓம் முதிர்ந்த நிலையினாய் போற்றி
ஓம் பரம்பொருள் சிவனோடு ஒன்றிட்ட வடிவுடையாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் அந்தணப் பெண் ஆனவளே போற்றி
ஓம் பிரம சக்தி வடிவுடையாய் போற்றி
ஓம் பிரமானந்த வடிவினளே போற்றி
ஓம் வலியவரை விரும்புவோய் போற்றி
ஓம் மொழிகளின் வடிவமே போற்றி
ஓம் பெருஞ்சேனை உடையாய் போற்றி
ஓம் தோற்றமும் அழிவும் இல்லாத் தன்மையளே போற்றி

ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி
ஓம் யாண்டும் மங்கலம் அருள்வாய் போற்றி
ஓம் உயர்நலம், எளிமை, புகலிடம் ஆகிய முக்குணம் உடையாய் போற்றி
ஓம் அனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி
ஓம் அரசுரிமை அனைத்தையும் அளித்திட வல்லாய் போற்றி
ஓம் அரசாட்சி தன்னில் ஈடுபாடுடையாய் போற்றி
ஓம் பெருமை விளங்கும் கருணை மிக்கவளே போற்றி
ஓம் அண்டினார் தம்மை அரசு பீடம் ஏற்றுவோய் போற்றி
ஓம் அரசுக்குரிய திருவெனத் திகழ்வோய் போற்றி
ஓம் பொக்கிஷத்தின் தலைவியே போற்றி

ஓம் நாற்படைத் தளபதியே போற்றி
ஓம் மன்னர்க்கு மன்னரின் மேற்பதம் அருள்பவளே போற்றி
ஓம் மீளாச் சூளுரைக்கு எல்லையாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் கடல் சூழ் உலகாய்க்காட்சி தருவோய் போற்றி
ஓம் அறிவினை ஊட்டுவோய் போற்றி
ஓம் அரக்கரை அடக்குவாய் போற்றி
ஓம் அனைத்து உலகையும் தன் வசம் ஆக்குவாய் போற்றி
ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லவாய் போற்றி
ஓம் உலகைத் தாங்கி வெளியிடும் ஆற்றலாய் போற்றி
ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

ஓம் பரப்பால் காலத்தால் பகுத்திடற்கு அரியவளே போற்றி
ஓம் அனைத்திலும் உறைபவளே போற்றி
ஓம் அனைத்தையும் மயக்குவாய் போற்றி
ஓம் கலைமகள் வடிவினளே போற்றி
ஓம் அறிவு நூல் உருவினளே போற்றி
ஓம் இதயக்குகையில் இருந்திடும் அன்னையே போற்றி
ஓம் இரகசிய வடிவினளே போற்றி
ஓம் எல்லா உபாதையும் விடுபட்ட நிலையினளே போற்றி
ஓம் சதாசிவ பத்தினியே போற்றி
ஓம் சீர்மரபினை அளிக்குநல் தலைவியே போற்றி

ஓம் எவ்வகையும் பொருந்துவாய் போற்றி
ஓம் ஈ எனும் காமக் கலையே போற்றி
ஓம் குருவின் மண்டலத் துருவைக் கொண்டவளே போற்றி
ஓம் அறிபவள் அறிபொருள் அறிவுகட் கெட்டாதாய் போற்றி
ஓம் சூரியனால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் மாயையே போற்றி
ஓம் மதுமதி நாமத்தவளே போற்றி
ஓம் பூமி வடிவானவளே போற்றி
ஓம் கணங்களின் அன்னையே போற்றி
ஓம் குபேரனின் தெய்வமே போற்றி

ஓம் மென்மை உறுப்புகள் மேவிய உடலாளே போற்றி
ஓம் குருவை விரும்புவாய் போற்றி
ஓம் சுதந்திரம் படைத்தவளே போற்றி
ஓம் எல்லா தந்திரத்துத் தலைவியும் ஆவாய் போற்றி
ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி
ஓம் சனகர் முதலியோர் பூசிக்கும் வடிவினளே போற்றி
ஓம் மங்கல அறிவினைத் தருபவளே போற்றி
ஓம் சித்துக் கலையே போற்றி
ஓம் ஆனந்தச் சுவையினளே போற்றி
ஓம் அன்புருவானவளே போற்றி

ஓம் விருப்பங்கள் நிறைவேற்றி வைப்பாய் போற்றி
ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி
ஓம் நந்தி வித்தையளே போற்றி
ஓம் நடேசன் தேவியே போற்றி
ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி
ஓம் மோட்சம் தருபவளே போற்றி
ஓம் முத்தியாய் இருப்பவளே போற்றி
ஓம் லாசிய நடனம் விரும்புவாய் போற்றி
ஓம் தாளத்தின் யோக வடிவினளே போற்றி
ஓம் நாணத்தின் உருவினளே போற்றி

ஓம் அரம்பை தேவியரால் வணங்கிடப் பெற்றவளே போற்றி
ஓம் பிறவிப் பெருந்தீயை அணைக்கும் அமுதமலையே போற்றி
ஓம் பாவக்காட்டினை அழித்திடும் பெருந்தீயே போற்றி
ஓம் துர்ப்பாக்கியப் பஞ்சினை விரட்டிடும் சுழற்காற்றே போற்றி
ஓம் மூப்பாம் இருளினைப் போக்கும் கதிரொளியே போற்றி
ஓம் பாக்கியப் பெருங்கடல் பொங்கவரு சந்திரனே போற்றி
ஓம் பக்தர் உள்ளமாம் மயிலிற் மழைமுகிலே போற்றி
ஓம் நோய் மலை பிளந்திடும் வச்சிராயுதமே போற்றி
ஓம் மரணமாம் மரந்தன்னைப் பிளக்க வருகோடரியே போற்றி
ஓம் பெருமைமிக்க தலைவியே போற்றி

ஓம் மாகாளி அம்மையே போற்றி
ஓம் உலகையே உருண்டையாய் உண்டிடவல்லாய் போற்றி
ஓம் பேருணவு உண்பவளே போற்றி
ஓம் இலையும் உண்ணாத தவத்தொடு, கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோபமிக வுடையாய் போற்றி
ஓம் சண்டமுண்ட அரக்கரை அழித்தவளே போற்றி
ஓம் அழிவொடு அழிவிலா அனைத்துமாய் இருப்பவளே போற்றி
ஓம் அனைத்துலகப் பெருந்தலைவியே போற்றி
ஓம் அகிலத்தைத் தாங்குவாய் போற்றி
ஓம் முப்பொருள் இன்பமுழுதும் அளிப்பவளே போற்றி

ஓம் அழகியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்குண வடிவினளே போற்றி
ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி
ஓம் தூய்மையளே போற்றி
ஓம் செம்பருத்திபூ போலும் வண்ணத்தாளே போற்றி
ஓம் தாதுசாரம் நிரம்பியவளே போற்றி
ஓம் ஒளிபடரும் உருவினளே போற்றி
ஓம் வேள்வியின் வடிவத்தோய் போற்றி
ஓம் விரதத்தில் விருப்புடையோய் போற்றி

ஓம் ஆராதிப்பதற்கு அரியவளே போற்றி
ஓம் வசப்படுத்த முடியாதவளே போற்றி
ஓம் பாதிரிப் பூவினை விரும்புவோய் போற்றி
ஓம் மிகப் பெரியவளே போற்றி
ஓம் மேருவில் வாழ்பவளே போற்றி
ஓம் மந்தாரப்பூ பிரியாளே போற்றி
ஓம் வீரர்கள் புரிந்திடும் வழிபாட்டிற் குரியவளே போற்றி
ஓம் ஈசனின் விராட் என்னும் வடிவம் கொண்டவளே போற்றி
ஓம் மாசொன்றும் இல்லாதவளே போற்றி
ஓம் எங்கணும் முகமானாளே போற்றி

ஓம் உள்நோக்காலறியும் ஆன்மிக வடிவுடையாளே போற்றி
ஓம் பெரும்பேர் வெளியாளே போற்றி
ஓம் உயிராற்றல் தருபவளே போற்றி
ஓம் உயிராற்றல் உருவத்தோய் போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவரால் வழிபடப் பெற்றவளே போற்றி
ஓம் மந்திரிணி தேவியிடம் அரசுரிமைப் பொறுப்பளித்தவளே போற்றி
ஓம் முப்புரத் தலைவியே போற்றி
ஓம் வெற்றிகொள் படையினாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தவளே போற்றி
ஓம் பராபர வடிவினளே போற்றி

ஓம் உண்மை அறிவானந்த வடிவே போற்றி
ஓம் சிவசக்தி சமரச நிலையினாய் போற்றி
ஓம் சடையனின் மனைவியாளே போற்றி
ஓம் கலைகளின் வரிசையாளே போற்றி
ஓம் விரும்பியதை வழங்குவாளே போற்றி
ஓம் விரும்பும் உருவேற்பவளே போற்றி
ஓம் கலைகளின் உறைவிடமானாய் போற்றி
ஓம் காப்பியக் கலை வடிவினளே போற்றி
ஓம் சுவைகள் மிக்க அறிபவளே போற்றி
ஓம் சுவை மிகுந்த பிரமானந்தத் துறைவிடமே போற்றி

ஓம் தத்துவ நிறைவுடையாளே போற்றி
ஓம் பழமைக்கும் பழமையானவளே போற்றி
ஓம் வழிபடத்தக்கவளே போற்றி
ஓம் வளம் நிறைவளிப்பவளே போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் பேரொளியாயினளே போற்றி
ஓம் பெருநிலை ஆனவளே போற்றி
ஓம் மிக நுண்ணணுவினாய் போற்றி
ஓம் மேன்மையிலும் மேன்மையாய் போற்றி
ஓம் பாசம் கை கொண்டிட்டாளே போற்றி

ஓம் பாசத்தை அழித்திட்டாளே போற்றி
ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி
ஓம் உருவுடைய பொருளாவாய் போற்றி
ஓம் உருவிலியாய்த் திகழ்வாய் போற்றி
ஓம் அழிபொருள் வழிபட்டாலும் மகிழ்பவளே போற்றி
ஓம் முனிவரின் மனக்குளத்து அன்னமே போற்றி
ஓம் சத்திய நோன்பினளே போற்றி
ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி
ஓம் தாட்சாயணியே போற்றி
ஓம் பரம்பொருளின் சக்தியே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் கருவிற்கு உருவளிக்கும் தாயே போற்றி
ஓம் பல் <உருவமுள்ளவளே போற்றி
ஓம் அறிவினரின் நற்றெய்வமே போற்றி
ஓம் ஈன்றளிக்கும் நற்றாயே போற்றி
ஓம் அருஞ்சின முடையாய் போற்றி
ஓம் ஆணைகளாய் விளங்குபவளே போற்றி
ஓம் நிலையான பெருஞ்சத்தியே போற்றி
ஓம் எங்கும் அறி வடிவத்தாளே போற்றி
ஓம் உயிர்க் கெல்லாம் தலைவியே போற்றி

ஓம் உலகிற்கு உயிரூட்டி உயர்வளித்துக் காப்பவளே போற்றி
ஓம் அரும்பீடம் ஐம்பதாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் தளைகள் அற்றவளே போற்றி
ஓம் தனியிடத்தாளே போற்றி
ஓம் வீரர்களின் அன்னையே போற்றி
ஓம் விண்ணினைத் தந்தவளே போற்றி
ஓம் வீடு பேறளிப்பவளே போற்றி
ஓம் வீடு பேறு வடிவத்தாளே போற்றி
ஓம் மூல உருவ வடிவினளே போற்றி
ஓம் கருத்தெல்லாம் அறிபவளே போற்றி

ஓம் பிறவி நோய் நீக்குவாய் போற்றி
ஓம் பிறவிச் சக்கரம் சுழற்றுவாய் போற்றி
ஓம் வேதத்தின் சாரமே போற்றி
ஓம் அற நூல்களின் பிழிவாகத் திகழ்பவளே போற்றி
ஓம் மந்திர வலிமையாளே போற்றி
ஓம் ஒட்டிய வயிற்றினளே போற்றி
ஓம் உறு புகழ் படைத்தவளே போற்றி
ஓம் அடங்கிடாப் பெருமையாளே போற்றி
ஓம் எழுத்துருவானவளே  போற்றி
ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

ஓம் உபநிடத நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி
ஓம் சாந்திக்கும் மேற் கலையாளே போற்றி
ஓம் ஆழம் கண்டிடற் கரியவளே போற்றி
ஓம் விண்ணின் நடுவில் நிலைத்தவளே போற்றி
ஓம் செருக்காற்றல் மிக்கவளே போற்றி
ஓம் இசையிலே தனை மறப்பவளே போற்றி
ஓம் கற்பனைக் கெட்டாதவளே போற்றி
ஓம் காஷ்டை என்ற கால எல்லை ஆனவளே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றி
ஓம் பதியைத் தன்னுடலின் பாதியாய்க் கொண்டவளே போற்றி

ஓம் காரிய காரணப் பொருள்களில் நீங்கியாள் போற்றி
ஓம் காமேசனாம்பதிக்கு இடையறாக் கேளிக்கை அளிப்பவளே போற்றி
ஓம் பொன்னனிர் வடிவுகள் எடுப்பவள் போற்றி
ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி
ஓம் பிறவியில்லாதவளே போற்றி
ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி
ஓம் அழகியே போற்றி
ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி
ஓம் உள்ளூறு நாட்டத்து வழிபாட்டிற்கு எளியவளே போற்றி
ஓம் வெளிநாட்டமுடையார் நாடிடற் கரியவளே போற்றி

ஓம் மும்முறை ஆனவளே போற்றி
ஓம் முப்பொருள் நிலையினாய் போற்றி
ஓம் மூன்றாய் உள்ளவை அனைத்துமானவளே போற்றி
ஓம் திரிபுரமாலினி தேவியே போற்றி
ஓம் பிணிகள் அகற்றுவோய் போற்றி
ஓம் பிடிப்புகள் இலாதாளே போற்றி
ஓம் தனக்குத் தானே தனி விளையாட்டினாய் போற்றி
ஓம் அமுதப் பெருக்காய் அமைந்து விளங்குவாள் போற்றி
ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி
ஓம் வேள்விகளை விரும்புவாளே போற்றி

ஓம் வேள்விகளைச் செய்திடுவாள் போற்றி
ஓம் வேள்விகளைச் செய்வார் ஆகிடுவாள் போற்றி
ஓம் அறத்திற்கு அடிப்படையாளே போற்றி
ஓம் செல்வத்திற் கதிபதியாயினை போற்றி
ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி
ஓம் வேதியர் நம்மிடத்து விருப்பமுள்ளாய் போற்றி
ஓம் வேதியர் வடிவினாள் போற்றி
ஓம் உலகியங்கக் காரணியே போற்றி
ஓம் உலகினையே உண்டிடுவாள் போற்றி
ஓம் பவளம்போல் ஒளியுடையாள் போற்றி

ஓம் வைணவித் திருவுருவாளே போற்றி
ஓம் திருமாலின் வடிவுடையாளே போற்றி
ஓம் தோன்றுமிடம் இலாதாளே போற்றி
ஓம் தோற்றுவாய்க் கிடமாவாளே போற்றி
ஓம் அசையாது இருந்திடுவாளே போற்றி
ஓம் நற்குலத்தின் வடிவானாளே போற்றி
ஓம் வீரர்தம் கூட்டத்து நாட்டம் மிகவுடையாளே போற்றி
ஓம் வீரியம் மிகப் படைத்தாளே போற்றி
ஓம் கருமத்தின் தொடர்பிலாளே போற்றி
ஓம் ஓங்கார நாதத்தாளே போற்றி

ஓம் அறிவியல் வித்தையைப் பெருக்கிட்டளிப்பவளே போற்றி
ஓம் அறிவியல் கலைகளில் திறன் மிகப்பெற்றவளே போற்றி
ஓம் செயல்களின் சிறப்புகள் துலங்கிடச் செய்பவளே போற்றி
ஓம் பிந்துவைத் தனக்குநல் இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி
ஓம் தத்துவங்கட்கெல்லாம் அப்பாற்பட்டவளே போற்றி
ஓம் தத்துவமயமாய்த் திகழ்பவளே போற்றி
ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி
ஓம் சாமவேத இசைமிகு விரும்புபவளே போற்றி
ஓம் மதி போன்றவளே போற்றி
ஓம் சதாசிவபத்தினியாள் போற்றி

ஓம் வல, இட வழிமுறை  இருப்பவளே போற்றி
ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி
ஓம் தன்னிலை தவத்துள்ளவளே போற்றி
ஓம் இயல்பினில் இனிமைமிக்கவளே போற்றி
ஓம் புத்தி கூர்மையினாளே போற்றி
ஓம் தீரரால் நன்முறை பூசிக்கப் பெறுபவளே போற்றி
ஓம் உள்ளறிவாம் சிறப்புநீர் வழிபாட்டிற்குரியவளே போற்றி
ஓம் உள்ளறிவாம் மலரினில் ஒரு தனி விருப்புளாளே போற்றி
ஓம் உதிக்கின்ற நிலையிலே எப்போதும் இருப்பவளே போற்றி
ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே  போற்றி

ஓம் காலைப் பருவக் கதிர் போல் சிவந்தவளே போற்றி
ஓம் அறிவுளார் அறிவிலார் பூசனைகள் ஏற்பவளே போற்றி
ஓம் மலர் நிலைத் தாமரை போல் புன்சிரிப்புடையாளே போற்றி
ஓம் சிற்றறிவைப் பேரறிவாய் மாற்றி இணைப்பவளே போற்றி
ஓம் மதிப்பீடில்லாத் தனிப் பதம் தருபவளே போற்றி
ஓம் துதிகளில் மகிழ்பவளே போற்றி
ஓம் துதிசெயின் அறிவும் செல்வமும் தருபவளே போற்றி
ஓம் மறைகள் போற்றிடும் பெருமைகள் படைத்தவளே போற்றி
ஓம் தன்வசம் ஆன நன் மனத்தினாளே போற்றி
ஓம் பெருந்தன்மை மிக்கவளே போற்றி

ஓம் பெருமாகேச்வரியே போற்றி
ஓம் மங்கல வடிவினளே போற்றி
ஓம் உலகீன்ற நற்றாயே போற்றி
ஓம் உலகினைத் தாங்கிடுவாளே போற்றி
ஓம் தடம் பெரு கண்ணினாளே போற்றி
ஓம் பற்றிலாளே போற்றி
ஓம் துணிவும் திறமையும் கொண்டவளே போற்றி
ஓம் வள்ளண்மை மிக்கவளே போற்றி
ஓம் பெருங்களிப் புடையவளே போற்றி
ஓம் மனோமய கோசத்தாளே போற்றி

ஓம் விண்ணாகிய பெருங் குழலாளே போற்றி
ஓம் அளவிறந்த நிலையினாளே போற்றி
ஓம் இந்திர சத்தியாளே போற்றி
ஓம் வாமவழிப் பெருந்தலைவியே போற்றி
ஓம் ஐவேள்வியில் பிரியமுள்ளவளே போற்றி
ஓம் ஐந்தொழிலுக்குரியாரை அரசு கட்டிலாக்கியதில் வீற்றிருப்பாய் போற்றி
ஓம் எண்வகைத் தாயருள் வாராகி யன்னையே போற்றி
ஓம் ஐவகை பருப்பொருளின் அரும்பெரும் தலைவியே போற்றி
ஓம் நிலைத் தென்றும் உள்ளவளே போற்றி
ஓம் நிலையான வளமுடையாளே போற்றி

ஓம் இன்பமே அளிப்பவளே போற்றி
ஓம் சிவன் மனதைக் கவர்பவளே போற்றி
ஓம் நிலமாகத் தாங்குவாளே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் சகல சம்பத்தும் நிறைந்தவளே போற்றி
ஓம் அறம்நிறை மனத்தினாய் போற்றி
ஓம் அறம் வளர் செல்வியே போற்றி
ஓம் உலகுகளுக்கு அப்பாலாளே போற்றி
ஓம் முக்குணத்தைக் கடந்தவளே போற்றி
ஓம் அனைத்தையும் கடந்தவளே போற்றி

ஓம் சாந்தத் திருவுருவாளே போற்றி
ஓம் பொன்வேங்கைப்பூவனையாளே போற்றி
ஓம் பாலா திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் பிரபஞ்ச விளையாட்டில் மகிழ்பவளே போற்றி
ஓம் சுமங்கலியே போற்றி
ஓம் சுகம்பல தருபவளே போற்றி
ஓம் நன்மங்கலத் தோற்றத்தாளே போற்றி
ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி
ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவவே போற்றி
ஓம் நிறைவழகுத் திருவுருவாளே போற்றி

ஓம் மிகத்தூய மனம் படைத்தாளே போற்றி
ஓம் பிந்துவில் தருப்பணம் செய்வதால் மகிழ்பவளே போற்றி
ஓம் இயற்கையின் முதல் உருவமே போற்றி
ஓம் திரிபுராம்பிகையாளே போற்றி
ஓம் பத்துவகை முத்திரையால் வழிபடற்கு உரியவளே போற்றி
ஓம் திரிபுரா ஸ்ரீதேவியினைத் தன்வசத்தில் வைத்திருப்பாளே போற்றி
ஓம் சின்முத்திரை வடிவினளே போற்றி
ஓம் சிறப்பறிவால் கிடைத்திடுவாளே போற்றி
ஓம் அறிவாயும் அறிபடு பொருளாயும் உள்ளவளே போற்றி
ஓம் யோனி முத்திரை வடிவாய்த் திகழ்வாளே போற்றி

ஓம் திரிகண்டா முத்திரையின் தலைவியாய் திகழ்வாளே போற்றி
ஓம் முக்குணங்கள் உடையவளே போற்றி
ஓம் முக்குணங்களின் தாயே போற்றி
ஓம் முக்கோணம் அடைந்தவளே போற்றி
ஓம் பாபமணுகாதவளே போற்றி
ஓம் வியப்பினை அளிக்கும் வரலாறு படைத்தவளே போற்றி
ஓம் வேண்டிய வேண்டியர்க்கு வேண்டியாங்கு அளிப்பவளே போற்றி
ஓம் பயிற்சியின் பெருமழையால் அறிந்துணரத் தக்கவளே போற்றி
ஓம் ஆறுதனிப் பெருவழிகள் கடந்திட்ட வடிவுடையாய் போற்றி
ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி
ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி
ஓம் மீறுதற்கு இயலாத ஆணைகள் இடவல்லாளே போற்றி
ஓம் சீர் மிகு சக்கரம் இருப்பிடம் கொண்டவளே போற்றி
ஓம் சீர் மிகுற திரிபுரனின் அழகிய மனைவியே போற்றி
ஓம் சிறப்புறு சிவையாளே போற்றி
ஓம் சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்த ஒரு தனித் திருவுருவாளே போற்றி
ஓம் அழகுமிகு லலிதா வாம் அம்பிகையாய் திகழ்வாளே போற்றி

எல்லாம் வல்ல அன்னையே போற்றி ஓம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar