SS தாரா வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தாரா வழிபாடு
தாரா வழிபாடு
தாரா வழிபாடு

விச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம் புஜன்ம ஸ்திதாம்
கர்த்ரீம் கட்க கபால நீல நளினை: ராஜத்கரா மிந்துபாம்
காஞ்சி குண்டல ஹார கங்கணலஸத் கேயூர மஞ்ஜீதாம்
ப்ராப்தைர்நாக வரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்யாம்
பிங்காக்ரை கஜடாம் லலத்ஸ்வரஸனாம் தம்ஷ்ட்ராகராளானனாம்
சர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்
அக்÷க்ஷõப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்
தாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்

பொருள்: உலகம் எங்கும் நிறைந்துள்ள சமுத்ர ஜலத்தில் உள்ள வெண் தாமரையில் உள்ளவளும், கத்தரிக்கோல், கத்தி, கபாலம், கருங்குவளைப்பூ இவற்றினை நான்கு கரங்களில் கொண்டவளும், சந்திரனைப் போன்று குளிர்ச்சியானவளும், நீலநிறத்தினளும், சிறந்த சர்ப்பங்களையே ஒட்டியாணம், குண்டலம், ஹாரம், கங்கணம், தோள்வளை, பாதச்சலங்கை இவற்றில் ஆபரணங்களாகக் கொண்டவளும், சிவந்த மூன்று கண்களையும் உடையவள். மஞ்சளும், சிவப்பும் கலந்த வர்ணம் கொண்ட முனையுடைய ஒற்றைச் சடையுடையவளும், அசையும் நாக்கினளும், தெத்துப் பற்களுடன் கூடிய விசாலமான முகத்தினளும், இடையில் யானைத் தோலாடை அணிந்தவளும், வெண்ணிறமான எலும்புகளை அணிந்த நெற்றியினளும், அ÷க்ஷõப்ய என்ற சர்ப்பத்தை (இவர் ஒரு ரிஷி சிவ ஸ்வரூபி, தாரா  மந்திரத்தை முதலில் ஜபம் செய்த மந்திரி ரிஹி. சர்ப்ப ரூபியாய் இருப்பவர்). தலையில் சூடியுள்ளவளும், புன்சிரிப்பு தவழும் தாமரை முகத்தினளும், சவத்தின் மார்பில் இருப்பவளும், கடினமான மார்பகமுள்ளவளும், மூவுலகிற்கும் தாயாய் இருப்பவளுமான ஸ்ரீ தாரா தேவியை வணங்குகிறேன்.

மூல மந்திரம்

ஐம் ஓம் ஹ்ரீம் ஸ்த்ரீம் ஹும் ப்பட்

காயத்திரி மந்திரம்

ஓம் தாராயை வித்மஹே உக்ரதாராயை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar