SS வாஸவி கன்யகா பரமேஸ்வரி போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வாஸவி கன்யகா பரமேஸ்வரி போற்றி
வாஸவி கன்யகா பரமேஸ்வரி போற்றி
வாஸவி கன்யகா பரமேஸ்வரி போற்றி

ஓம் அருள் வடிவின் அன்னையே போற்றி
ஓம் ஆர்ய வைஸ்ய குல திலகமே போற்றி
ஓம் இன்பம் அருளும் தாயே போற்றி
ஓம் ஈடில்லா அழகின் தேவியே போற்றி
ஓம் உண்மை வடிவானாய் போற்றி
ஓம் ஊறிடும் அமுத ஊற்றே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த இறைவியே போற்றி
ஓம் ஏற்றம் தந்திடும் கருணையே போற்றி
ஓம் ஐந்தெழுத்தின் அன்னையே போற்றி
ஓம் ஒப்பரு ஞனாச் சுடரே போற்றி

ஓம் ஓம் எனும் ப்ரணவப் பொருளே போற்றி
ஓம் ஒளடத மாகும் கற்பகமே போற்றி
ஓம் பெனுகொண்டா நல்கியபெரிய நாயகியே போற்றி
ஓம் வைகாசி (வைசாக) வளர்பிறை தசமியில் உதித்தோய் போற்றி
ஓம் குசும ஸ்ரேஷ்ட்டர் செல்வியே போற்றி
ஓம் குசுமாம்பிகை தவ புத்ரியே போற்றி
ஓம் விரூபாக்ஷனுட னுதித்த வித்தகி போற்றி
ஓம் வாஸவி என வளர்ந்தாய் போற்றி
ஓம் அழகிய தோற்ற மமைந்தாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணின் தையலே போற்றி

ஓம் தாயுளம் மகிழ வளர்ந்தாய் போற்றி
ஓம் கலை பல கற்ற கலைமகளே போற்றி
ஓம் ஓதாது உணர்ந்த செல்வியே போற்றி
ஓம் அறிவுச் சுடரே ஒளிர்வாய் போற்றி
ஓம் கன்னிப் பருவங் கடந்தாய் போற்றி
ஓம் மிக்குயர் அழகாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் இளமை குன்றா எழிலே போற்றி
ஓம் பால நகரத்தார்க்குப் பரிந்தாய் போற்றி
ஓம் மனஉரம் கொண்ட மாதெ போற்றி
ஓம் ஆணவ அரசனை வென்றாய் போற்றி

ஓம் வானுயர் தோற்றம் காட்டினை போற்றி
ஓம் தீயில் நின்றுநீதி யுரைத்தாய் போற்றி
ஓம் பொன்னொளி கொண்டு பொலிவாய் போற்றி
ஓம் பொன்னார் மேனி பூவையே போற்றி
ஓம் கோடி சுடர் ஒளியானாய் போற்றி
ஓம் பசும் பொன்னாடை அணிந்தாய் போற்றி
ஓம் மஞ்சள் குங்குமம் தரித்தாய் போற்றி
ஓம் மங்கள உருவின் மாண்பே போற்றி
ஓம் அபய கரம் கொண்ட அன்னையே போற்றி
ஓம் வரத கரம் கொண்ட வனிதாமணியே போற்றி

ஓம் தாமரை ஏந்திய தையலே போற்றி
ஓம் கிளி ஏந்திய கிளி மொழியே போற்றி
ஓம் நவமணி பொன்முடி பூண்டாய் போற்றி
ஓம் உலகெலாம் பரந்த உருவே  போற்றி
ஓம் மலர் மாலைகள் அணிந்தாய் போற்றி
ஓம் மல்லிகை மகிழும் மாதே போற்றி
ஓம் நறுமண மலரை நயப்பாய் போற்றி
ஓம் அலரி மலரி லமர்வாய் போற்றி
ஓம் அருள்நகை புரியும் அமுதே போற்றி
ஓம் ஈரேழு புவனமு மாவாய் போற்றி

ஓம் உலகெலாம் ஈன்ற உத்தமியே போற்றி
ஓம் அகிலமெலாம் ஆளும் அரசியே போற்றி
ஓம் மூவர் தேவரின் முதல்வியே போற்றி
ஓம் முத்தொழில் வல்ல முதல்வியே போற்றி
ஓம் அயனரி அரனென ஆனாய் போற்றி
ஓம் உயர்நிலைக் கோயிலுள் உறைவாய் போற்றி
ஓம் பொன் மணிக் கோபுரம் கொண்டாய் போற்றி
ஓம் நான்மறைப் பொருளின் நாயகியே போற்றி
ஓம் தரணிக் கெல்லாம் தலைவியே போற்றி
ஓம் தஞ்சம் அடைந்தோர் சஞ்சலம் தீர்க்கும் தேவியே போற்றி

ஓம் அஞ்சேல்என அபயம் அளிக்கும் அம்மையே  போற்றி
ஓம் வேதமும் கீதமும் ஆனாய் போற்றி
ஓம் இசையில் மகிழும் இறைவியே போற்றி
ஓம் விண்ணிலும் மண்ணிலும் இருப்பாய் போற்றி
ஓம் நீரிலும் தீயிலும் நின்றாய் போற்றி
ஓம் காற்றிலும் காலத்திலும் கலந்திருப்பாய் போற்றி
ஓம் கற்பகம் வெல்லும் கொடையே போற்றி
ஓம் கருணைக் கடலின் கண்மணியே போற்றி
ஓம் அயன்அரி அரன்போற்றும் அம்மையே போற்றி
ஓம் உயர்ந்த ஆற்ற லுடையாய் போற்றி

ஓம் வெற்றி தந்திடும் வேதவல்லியே போற்றி
ஓம் அனைத் துயிருக்கும் அன்னையே போற்றி
ஓம் அண்டியவர் களிக்கும் அருளே போற்றி
ஓம் துயர்கள் அனைத்தும் துடைப்பாய் போற்றி
ஓம் துதிப்போர்க்கு அருளும் துணையே போற்றி
ஓம் மதிப்போர் மதியை வளர்ப்பாய் போற்றி
ஓம் பிறவிப் பிணியை போக்குவாய் போற்றி
ஓம் தீவினை யழிக்கும் தீயே போற்றி
ஓம் நல்வினை நயக்கும் நங்காய் போற்றி
ஓம் பெருங்குணம் படைத்தபெண்தெய்வமே போற்றி

ஓம் அறம் பல பயக்கும் அரிவையே போற்றி
ஓம் சத்தியம் காக்கும் சங்கரியே போற்றி
ஓம் அருமறைப் பலனை அளிப்பாய் போற்றி
ஓம் கலைவளர் மேன்மைக் கனியே போற்றி
ஓம் ஊதியம் அளிக்கும் உயர்வே போற்றி
ஓம் விரும்புவன அளிக்கும் விமலியே போற்றி
ஓம் செல்வம் தந்திடும் செல்வியே போற்றி
ஓம் அகிலம் காக்கும் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் நற்குண மெல்லாம் ஆனாய் போற்றி
ஓம் சற்குண மெல்லாம் அருள்வாய் போற்றி

ஓம் நினைப்பவர் நெஞ்சில் நிறைந்தாய் போற்றி
ஓம் பத்தியிற் சிறந்த பாவாய் போற்றி
ஓம் வைச்யர் வழிபடு வாஸவியே போற்றி
ஓம் கன்னியாய் தோன்றி காத்தாய் போற்றி
ஓம் திருமண மன்றிற் திகழ்வாய் போற்றி
ஓம் மங்கல நாண் அருளும் மகேஸ்வரியே போற்றி
ஓம் சந்தானம் அளிக்கும் ஸர்வேஸ்வரியே போற்றி
ஓம் வைச்யர் வழிமுறை வகுத்தாய் போற்றி
ஓம் வாணிப அறத்தை வளர்ப்பாய் போற்றி
ஓம் நிகரில்நம் குலத்து நிலைப்பாய் போற்றி

ஓம் குலப் புகழ் வளர்க்கும் கோதையே போற்றி
ஓம் வைச்யர் நெஞ்சத் தாமரையில் அமர்வாய் போற்றி
ஓம் மங்களம் அருளும் மாதே போற்றி
ஓம் சகலபாக்யமும் அருளும் சௌபாக்யவதியே போற்றி
ஓம் வீரம் அருளும் விமலியே போற்றி
ஓம் ஓங்காரத்துள் ஒளிர்வாய் போற்றி
ஓம் சீர்மிகு கன்னிச் சிலம்படி போற்றி
ஓம் சீர்பலநல்கும் கன்யகாபரமேச்வரியே போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar