SS சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்
சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்
சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்

(ஆதி சங்கர பகவத் பாதம் அருளிச் செய்தது)

இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்வது பரமேச்வரனுக்கு மானஸீகமாகப் பூஜை செய்வதாகும். இந்த ஸ்தோத்ரத்தின் முதல் ச்லோகம் ஐயனை ஸ்படிகம் போல் வெண்மையான ஆத்மலிங்கமாக வரவேற்று, இதயக்கமலத்தில் எழுந்தருளச் செய்து, நிர்மலமான சித்தம் என்ற ஜலத்தினால் அபிஷேகம் செய்து, த்யாநமாகிற மலர்களால், மீண்டும் பிறவா வரம் வேண்டி அர்ச்சிக்கின்றது.

ரத்தினப்பலகை, பன்னீரால் திருமஞ்சனம், பட்டாடை, ஆபரணங்கள், சந்தணம், மலர்கள், வில்வம், தூப-தீபங்கள் ஆகியன இரண்டாவது ச்லோகத்தினால் மனத்தளவில் நேர்ந்துகொண்டு அளிக்கப்படுகின்றன. ரத்தினங்கள் இழைத்த பொன் வட்டில்களில் நெய், பாயசம், ஐவகை பக்ஷணங்கள், பால், தயிர், வாழைப்பழம், பானகம், காய்கனி வகைகள், நல்ல குடிநீர், பச்சைக் கற்பூரம் கலந்த தாம்பூலம் ஆகியவை மூன்றாவது ச்லோகத்தினால் அளிக்கப்படுகின்றன. நான்காவது ச்லோகம் மானஸீகமாக, குடை, சாமரம், விசிறி, கண்ணாடி இசைக்கருவிகளின் இன்னொலி, ஆடல்-பாடல் ஆகிய உபசாரங்களளித்து நமஸ்கரிக்கின்றது.

நம் உடலே ஐயனும் அம்மையும் எழுந்தருளியுள்ள திருக்கோயில், நாம் நுகர்வதனைத்தும் அவர்க்குச் செய்யும் வழிபாடுகளே, நம் உறக்கமே சமாதி நிலை வழிபாடு, நாம் நடந்து செல்வதெல்லாம் அவரை வலம் வருதல் போன்றே, நாம் பேசும் சொற்களெல்லாம் அவரை ஏத்தும் தோத்திரங்களே, நம் செயல்களனைத்தும் அவர்களது ஆராதனையே என்று பட்டியலிட்டுக் கூறும் ஐந்தாவது ச்லோகம், நம்மையே தவநிலைக்கு உயர்த்திச் செல்கின்றது. ஆறாவதான இறுதி ச்லோகம் மிகவும் பிரசித்தமான க்ஷமா பிரார்த்தனை. மங்கள வடிவான கருணைக் கடலாம் ஐயனை விளிக்கும் அந்த ச்லோகம், கை-கால்கள், சொல், செயல், செவி-வழி உணர்வு, பார்வை, மனத்தளவிலான சிந்தனைகள் ஆகிய அனைத்தினாலும் முறையாகவோ, முறையின்றியோ இழைத்திட்ட அனைத்துக் குற்றங்களையும் பொறுத்தருளுமாறு மன்றாடுகின்றது.

ஆராதயாமி மணிஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
ஸ்ரத்தாநதீ - விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதி குஸுமை: அபுநர்பவாய

ரத்னை: கல்பிதம் - ஆஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதாமோதாங்கிதம் சந்தநம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ந கண்ட ரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மநஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதநம்

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண - நயநஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் - அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

ஸ்ரீ ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar