SS பஜனைப்பாடல்கள்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பஜனைப்பாடல்கள்!
பஜனைப்பாடல்கள்!
பஜனைப்பாடல்கள்!

கணேச நாமாவளிகள்

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய பாஹிமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்

ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

கௌரி நந்தானா கஜவதனா கணேச வரத மாம்பாஹி
அம்பிகைபாலா அன்பர்கள் சீலா தும்புருநாரதர் ஸேவித லோலா

பாரதமெழுதிய பரமசரித்ரா ஆரமுதருளிய ஐங்கர சித்ரா
லம்போதர கங்கா தரபுத்ரா அம்பாமுகபங் கேருகமித்ரா

அரஹர வரஹர வாதியனே அரனருள் விநாயக ஜோதியனே
கஜமுகத்தரசே கணபதியே கற்பகத்தருவே குணநிதியே

பிரணவப் பொருளே பெம்மானே பேசருமறை புகழ்எம்மானே
இபமாமுகனே இகமாவரதா சுபமாகவும் சுமுக அருள்வாய்

ஸ்ரீ ஜயசீல விநாயகனே தேவர் தொழும் தெய்வநாயகனே!

சபரியின் வர்ணிப்பு

என்ன மணக்குது? எங்கே மணக்குது?
எல்லாம் மணக்குது ஐயப்பன் மலையிலே

அத்தர் புனுகு வகை எங்கே மணக்குது?
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

அல்லிமலர் மணமும் எங்கே மணக்குது?
ஹரிஹர புத்திரன் மேலே மணக்குது

மல்லிகைப்பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது?
மரகதமூர்த்தியின் மேலே மணக்குது

முல்லைமலர் மணமும் எங்கே மணக்குது?
மோஹன பாலகனின் மேலே மணக்குது

சம்பங்கி ரோஜாவும் எங்கே மணக்குது?
சாஸ்தாவான பாலகனின் மேலே மணக்குது

காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது?
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

கொஞ்சு மனோரஞ்சிதமும் எங்கே மணக்குது?
பஞ்சலோக மூர்த்தியின் மேலே மணக்குது

பரிமள சாம்பிராணி எங்கே மணக்குது?
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

கற்பூர வாடையது எங்கே மணக்குது?
காந்தமலை ஜோதியின் மேலே மணக்குது

பாங்கான நெய்மணமும் எங்கே மணக்குது?
தேங்காயின் திரு உருவின் மேலே மணக்குது

சர்க்கரை ஏலம் பாயாசம் எங்கே மணக்குது?
சபரிமலை உச்சியின் மேலே மணக்குது

குங்குமப்பூ ஜவ்வாது எங்கே மணக்குது?
குழத்துப்புழை பாலகனின் மேலே மணக்குது

பன்னீரும் குல்கந்தும் எங்கே மணக்குது?
பந்தளச் செல்வனின் மேலே மணக்குது

மஞ்சள்பொடி மகிமை எங்கே மணக்குது?
மஞ்சமாதா சன்னதியின் மேலே மணக்குது

சந்தன வாசமது எங்கே மணக்குது?
சபரிகிரி மலையின் மேலே மணக்குது

நெய் தேங்காய் வாசமது எங்கே மணக்குது?
பரிமள ஹோம குண்டம் மேலே மணக்குது

சாம்பிராணி வாடையது எங்கே மணக்குது?
சாஸ்தாவின் சன்னதியின் மேலே மணக்குது

பஜனை செய்வோம்...

பஜனை செய்வோம் பஜனை செய்வோம்
ஐயப்பன் பஜனை செய்வோம்
மணிகண்டன் பஜனை செய்வோம்

1. அன்புடன் அழைப்போம் அன்பர்கள் நேசனை
அழைத்தால் வருவான் ஹரிஹர சுதனே (ப)

2. ஆரியங்காவினில் அமர்ந்திருப்போனே
ஆயிரம் ஆயிரம் சரணங்கள் சொல்லி (ப)

3. இருளை அகற்றி என் வாழ்வொளி வீசிட
இருமுடி பிரியனை இருகரம் குவிப்போம் (ப)

4. கருணைக் கடலே சுவாமி பொன் ஐயப்பா
காந்தமலை வாசா சரணம் பொன் ஐயப்பா (ப)

5. சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சுவாமியில்லா தொரு சரணம் இல்லையப்பா (ப)

6. பகவான் சரணம் பகவதி சரணம்
பகவதி சரணம் பகவான் சரணம் (ப)

மலையாம் மலை அழகாம்...

மலையாம் மலை அழகாம் ஏலேலோ ஐயப்பா
மலையைச் சுற்றி தோப்பழகாம் ஏலேலோ

1. ஏலேலோ ஐயப்பா என் குருவே ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா சரணம் சாமி ஐயப்பா

2. மூலப் பொருள் வாழும் மலை சாமி ஐயப்பா
மூங்கில் மரம் விளையும் மலை  சாமி ஐயப்பா

3. தேக்கு விளையும் மலை சாமி ஐயப்பா
தேவர்கள் கூடும் மலை சாமி ஐயப்பா

4. பாக்கு விளையும் மலை சாமி ஐயப்பா
பக்தர்கள் கூடும் மலை சாமி ஐயப்பா

5. பம்பா நதி ஓடும் மலை சாமி ஐயப்பா
பாவங்கள் தீரும் மலை சாமி ஐயப்பா

6. உத்திராட்சம் காய்க்கும் மலை சாமி ஐயப்பா
ஊமைகள் பேசும் மலை சாமி ஐயப்பா

7. ஏலம் விளையும் மலை சாமி ஐயப்பா
ஏகாந்தன் வாழும் மலை சாமி ஐயப்பா

8. சந்தனம் விளையும் மலை சாமி ஐயப்பா
சத்திய ரூபன் மலை சாமி ஐயப்பா

9. கானகம் நிறைந்த மலை சாமி ஐயப்பா
காந்தமலை தெரியும் மலை சாமி ஐயப்பா

10. கரடிபுலி வாழும் மலை சாமி ஐயப்பா
கற்பூரம் மணக்கும் மலை சாமி ஐயப்பா

11. யானைக் கூட்டம் தெரியும் மலை சாமி ஐயப்பா
ஞானஜோதி தெரியும் மலை சாமி ஐயப்பா

12. சபரிநாதன் வாழும் மலை சாமி ஐயப்பா
சரண கோஷம் கேட்கும் மலை சாமி ஐயப்பா

13. மாவீரன் வாழும் மலை சாமி ஐயப்பா
மகர ஜோதி தெரியும் மலை சாமி ஐயப்பா

14. ஐந்து மலை கடந்து வந்தோம் சாமி ஐயப்பா
ஐயப்பனை காண வந்தோம் சாமி ஐயப்பா

கருப்பர் வாரார்...

வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு

அள்ளி - முடிச்சகொண்டையப்பா அழகுமீசைதுள்ளுதப்பா
வல்ல - வேட்டிப் பட்டுடனே வாரார் - ஐயாராசாப்போலே (வா)

ஆளு - யரம் அரிவாளாம் அதுக் - கேத்த கம்பீரமாம்
காலிலே - முள்ளுச்செருப்பாம் கருப்பனுக்கே தனிச்சிறப்பாம்  (வா)

வீச்சரிவாள் கையிலுண்டு வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச் சுக்குமாந்தடியுமுண்டு  (வா)

இடுப்பினிலே சலங்கையுண்டு இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கினிலே வலிமையுண்டு வற்றாத கருணையுண்டு (வா)

கையிலே சவுக்குமுண்டு கனகமணிச்சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் நாமமுண்டு (வா)

சந்தனமுண்டு ஜவ்வாதுமுண்டு சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜாமுல்லை மணக்குதப்பா இங்கே இப்போ (வா)

சங்கிலிக் கருப்பர்...

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது
கச்சை வரிஞ்சுகட்டி கருங்கச்சை சொக்கமிட்டு

காலிரண்டில் சிலம்பு கொஞ்ச - வாராரய்யா கருப்பசாமி
அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது

வெள்ளைநல்ல குதிரையேறி வீச்சருவா கையில் கொண்டு
வீதிவலம் சுத்தியல்லோ வாராரய்யா கருப்பசாமி

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது
சங்கிலியில் கோத்தமணி கலகலென ஓசையிட

சத்திரத்து வீதியெல்லாம் தூள்பரக்க ஆடிவாரார்
அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது

நட்ட நடுநிசிதனிலே நல்ல சிவராத்திரியில்
கொட்டமெல்லாம் தானடக்க குதிரையிலே ஏறிவாரார்

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது
வேடுகட்டி பொட்டுமிட்டு வெள்ளிநல்ல பிரம்பெடுத்து

மாடுமனை செழிக்கவென்று மகிழ்ச்சியோடு வாராரய்யா
அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது

சங்கிலிக்க ருப்பனவன் சங்கடங்கள் போக்கவென்றே
தளையறுத்து ஓடிவாரார் தாளமோடு ஆடிவாரார்
அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி அங்கம் துடி துடிக்குது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar