SS முருகப்பெருமான் தமிழ் போற்றிகள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> முருகப்பெருமான் தமிழ் போற்றிகள்
முருகப்பெருமான் தமிழ் போற்றிகள்
முருகப்பெருமான் தமிழ் போற்றிகள்

ஓம் அகத்தமரும் முருகா போற்றி
ஓம் அழகுத் தெய்வமே போற்றி
ஓம் அறுவர் பயந்த செல்வா போற்றி
ஓம் அந்தணர் வெறுக்கையே போற்றி
ஓம் அறிந்தோர் சொன்மலையே போற்றி
ஓம் அலந்தோர் துணையே போற்றி
ஓம் அழகிய மொழியாய் போற்றி
ஓம் அமரர் இடர் தீர்த்தாய் போற்றி
ஓம் அசுரகுல காலா போற்றி
ஓம் அலங்கல் திருமார்பா போற்றி

ஓம் அயில்வேல் அரசே போற்றி
ஓம் அமராவதிக் காவலா போற்றி
ஓம் அருணாசல அழகா போற்றி
ஓம் அழகிய மணாளா போற்றி
ஓம் அயன்தனைப் புடைத்தாய் போற்றி
ஓம் அகத்தியர்க்கு அருளினாய் போற்றி
ஓம் அக்கினியின் கையிலிருந்தவனே போற்றி
ஓம் அன்பர்க்கருள்வோய் போற்றி
ஓம் அருணகிரியார்க்கு அருளினாய் போற்றி
ஓம் அருள் கனிந்தவனே போற்றி

ஓம் அன்புருவானவனே போற்றி
ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி
ஓம் அண்டினவர்க்கருளும் முருகா போற்றி
ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
ஓம் அழகர் மலையோனே போற்றி
ஓம் அறுபடை வீடுடையோனே போற்றி
ஓம் அசுரர்கிளை வென்ற வேலா போற்றி
ஓம் அரி மருகனே போற்றி
ஓம் அரவக் குன்றத்து அப்பா போற்றி
ஓம் அழல் நிறத்தோய் போற்றி

ஓம் அழிவிலாக் கந்தனே போற்றி
ஓம் அஃகுதல் இல்லா அறிவே போற்றி
ஓம் அறுவுரு அமைந்தாய் போற்றி
ஓம் அறுமீன் பாலுண்ட அமரா போற்றி
ஓம் அங்கன் குறிஞ்சிக்கரசே போற்றி
ஓம் அரும்பொருள் இசைத்தாய் போற்றி
ஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
ஓம் அருவா போற்றி
ஓம் அன்னமலை முருகா போற்றி
ஓம் அனைத்துலகுமானாய் போற்றி

ஓம் அதோ முகம் கொண்டவனே போற்றி
ஓம் அறுமுகப் பரமா போற்றி
ஓம் அழகிய வேலா போற்றி
ஓம் அம்பிகை பாலா போற்றி
ஓம் அடியவர்க்கு அமுதே போற்றி
ஓம் அளவிலாப் பெருமையனே போற்றி
ஓம் அந்தணர் தலைவா போற்றி
ஓம் அடியவர் தம்பிரானே போற்றி
ஓம் அமரர் பிரானே போற்றி
ஓம் அரி மருகோனே போற்றி

ஓம் அசுரர் சேனை கொன்றாய் போற்றி
ஓம் அமரேசர் பெருமானே போற்றி
ஓம் அடியார்க் கெளியனே போற்றி
ஓம் அந்தரி பாலா போற்றி
ஓம் அடியார்பால் அருள் ஈவாய் போற்றி
ஓம் அழகுலாவிய விசாகா போற்றி
ஓம் அடியர் ஆவிக்குள் நின்றாய் போற்றி
ஓம் அமரர் பணி ஐயனே போற்றி
ஓம் அணி மார்பா போற்றி
ஓம் அங்கை வேலா போற்றி

ஓம் அறுவர்க்கு ஒரு சேயே போற்றி
ஓம் அறுமுகங்கரந்த கள்வன் போற்றி
ஓம் அருட்கடல் வள்ளல் போற்றி
ஓம் அடியவர் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அறுமா முகத்து நம்பியே போற்றி
ஓம் அழகிய மயிலனே போற்றி
ஓம் அயிலை பொருந்தும் ஐயா போற்றி
ஓம் அருவினை அறிபவர் அரசே போற்றி
ஓம் அருணையில் அமர்ந்தருள் அழகா போற்றி
ஓம் அந்தன்மறை வேள்வி காவலா போற்றி

ஓம் அஞ்சலி செய்வோர்கள் நேயா போற்றி
ஓம் அண்டர் உபகார சேவலாய் போற்றி
ஓம் அழல் விழியில் உதித்தாய் போற்றி
ஓம் அத்தி மகள் கோனே போற்றி
ஓம் அருக்கொணா மலையாய் போற்றி
ஓம் அனகா போற்றி
ஓம் அருணகிரிப் பெருமானே போற்றி
ஓம் அதிகை மாநகர் அமர்ந்தாய் போற்றி
ஓம் அம்பர்வளர் தம்பிரானே போற்றி
ஓம் அத்திப்பட்டில் உறை அன்பா போற்றி

ஓம் அத்திக்கரையின் அணியே போற்றி
ஓம் அவிநாசி அண்ணலே போற்றி
ஓம் அலகுமலை அரசே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியனே போற்றி
ஓம் அமுதம் நிகர் அன்பா போற்றி
ஓம் அங்கயற் கண்ணி சேயே போற்றி
ஓம் அனுவாவியுறை அழகா போற்றி
ஓம் ஆதிபுரி வாழ்வே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் ஆனை முகவற் கிளையவா போற்றி

ஓம் ஆதி குருவே போற்றி
ஓம் ஆதிபகவா போற்றி
ஓம் ஆதி அந்தம் இல்லானே போற்றி
ஓம் ஆதி யமராவதி அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆதி யருணாசலம் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறுமுகத்தெந்தாய் போற்றி
ஓம் ஆறெழுத்துடையாய் போற்றி
ஓம் ஆவினன் குடியாய் போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறு சமயங்களும் ஆனாய் போற்றி

ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்பவனே போற்றி
ஓம் ஆறமர் செல்வா போற்றி
ஓம் ஆழ்கெழுகடவுட் புதல்வா போற்றி
ஓம் ஆறுபடை முருகா போற்றி
ஓம் ஆயி மைந்தனே போற்றி
ஓம் ஆறிரு மொய்ம்புடையோனே போற்றி
ஓம் ஆகம விதி அருளினாய் போற்றி
ஓம் ஆடல் வேற்கை நாயக போற்றி
ஓம் ஆலமுண்டவர் சேயே போற்றி

ஓம் ஆறுதிருப்பதி உறை அழகா போற்றி
ஓம் ஆனைக்காவில் உறை அழகா போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அத்தா போற்றி
ஓம் ஆய்க்குடி அமுதே போற்றி
ஓம் ஆடானை அன்பா போற்றி
ஓம் ஆனந்தம் அருள்வாய் போற்றி
ஓம் ஆரூரர்தம் புதல்வா போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் இசைபெறு வேள்வி இன்முகா போற்றி
ஓம் இன்பார் இளைய எந்தாய் போற்றி

ஓம் இளையோனே போற்றி
ஓம் இன்சொல் விசாகனே போற்றி
ஓம் இந்திரபுரிக் காவலனே போற்றி
ஓம் இமையோர் பெருமானே போற்றி
ஓம் இளம் பூரணனே போற்றி
ஓம் இந்திரர்கள் தம்பிரானே போற்றி
ஓம் இந்திரன் சிறை களைந்தாய் போற்றி
ஓம் இரத்தின வேலனே போற்றி
ஓம் இமையவள் மைந்தா போற்றி
ஓம் இடர் களையும் முருகா போற்றி

ஓம் இருள் கெடுத்து இன்பருள்பவனே போற்றி
ஓம் இடும்பனுக்கு அருளிய இளையாய் போற்றி
ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
ஓம் இலஞ்சிக் காவலனே போற்றி
ஓம் இபமா முகனுக்கிளையோய் போற்றி
ஓம் இரத்தின கிரியோய் போற்றி
ஓம் இமையவன் அருள் பாலனே போற்றி
ஓம் இதஞ்செய்பவனே போற்றி
ஓம் இணையில் கந்தா போற்றி
ஓம் இந்திரன் மகளை மணந்தோய் போற்றி

ஓம் இந்திரன் மருகா போற்றி
ஓம் இடும்பன் தலைவா போற்றி
ஓம் இஞ்சிக்குடிவாழ் இளையாய் போற்றி
ஓம் இடைமருகில் ஏகநாயகா போற்றி
ஓம் இராச புரத்து இரத்தினமே போற்றி
ஓம் இராமேசுவரத்துக் குகனே போற்றி
ஓம் இந்தம் பயத்து எழிலே போற்றி
ஓம் இகபரம் அளிப்பவனே போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இனியனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி

ஓம் ஈசற்கினிய சேயே போற்றி
ஓம் ஈராறு தோளுடையாய் போற்றி
ஓம் ஈராறு கரத்தாய் போற்றி
ஓம் ஈங்கோய் மலையாய் போற்றி
ஓம் உம்பர்க் கொரு நாதா போற்றி
ஓம் உரவோனே போற்றி
ஓம் உத்தம சற்குணனே போற்றி
ஓம் உமைபாலா போற்றி
ஓம் உமையாள் குமாரனே போற்றி
ஓம் உறுநர்த்தாங்கும் உறவோய் போற்றி

ஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி
ஓம் உத்தமி பாலா போற்றி
ஓம் உணர்வார் உள்ளத்தானே போற்றி
ஓம் உலகம் புரக்கும் ஒருவா போற்றி
ஓம் உடையானே போற்றி
ஓம் உடைகோவண முடுத்தாய் போற்றி
ஓம் உருகெழு நெடுவேளே போற்றி
ஓம் உலகுக்கருள் இறைவா போற்றி
ஓம் உயர் பரமனே போற்றி
ஓம் உமைக்கொரு முத்தே போற்றி

ஓம் உலகை வலம்வந்தோய் போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உருத்திர பாலகனே போற்றி
ஓம் உறுநர்த்தாங்கும் ஒருவா போற்றி
ஓம் உருகும் அடியார் உளத்தாய் போற்றி
ஓம் உத்திரமேரூர் உறைவாய் போற்றி
ஓம் உத்திர கோச மங்கை ஒளியே போற்றி
ஓம் ஊனில் ஆவியாய் உள்ளாய் போற்றி
ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றி
ஓம் ஊழி நாயகனே போற்றி

ஓம் ஊதி மலை உறைவோய் போற்றி
ஓம் ஊழி முதல்வன் புதல்வா போற்றி
ஓம் எழில் வேலா போற்றி
ஓம் எறிவேலா போற்றி
ஓம் எழில்கொல் இன்ப வாரிதியே போற்றி
ஓம் என்றும் இளைய ஏறே போற்றி
ஓம் எட்டுக்குடி வேலனே போற்றி
ஓம் எந்தாய் போற்றி
ஓம் எழில் குமரனே போற்றி
ஓம் எழில் சிங்காரனே போற்றி

ஓம் எண்கண் முருகா போற்றி
ஓம் எழுகரை நாட்டவர் தம்பிரானே போற்றி
ஓம் என்றும் அருளும் எழிலே போற்றி
ஓம் எழிலெலாம் திரண்ட ஒருவா போற்றி
ஓம் எழில்மிகு வேளே போற்றி
ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி
ஓம் ஏழுலகும் தொழும் இறைவா போற்றி
ஓம் ஏரகத்து உறைவோனே போற்றி
ஓம் ஏர்மிகு இளஞ்சேயே போற்றி
ஓம் ஏறு ஊர்ந்தாய் ஏறே போற்றி

ஓம் எழுதிருப்பதி எந்தாய் போற்றி
ஓம் ஏத்தம் அடியார்க்கு இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஐந்தமுது உகந்தாய் போற்றி
ஓம் ஐயாறுறை ஐயா போற்றி
ஓம் ஒள்ளிணர்க் கடப்பந் தாரோய் போற்றி
ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
ஓம் ஒளியெலாமானாய் போற்றி

ஓம் ஒளியெலாம் திரண்ட ஒருவா போற்றி
ஓம் ஒடுக்கத்துச் செறிவாய் உறைவாய் போற்றி
ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி
ஓம் ஓங்காரத்து ஒளியே போற்றி
ஓம் ஓராறுமா முகனே போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளே போற்றி
ஓம் ஓதிமலை உறைவோய் போற்றி
ஓம் ஓதும் அடியார்க்கு ஒளியே போற்றி
ஓம் ஒளவைக்கு அருளினோய் போற்றி

ஓம் கல்வி தருபவனே போற்றி
ஓம் கந்தன் குடி முருகா போற்றி
ஓம் கதிர் காமனே போற்றி
ஓம் கழுகு மலை உறையும் கந்தா போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தபுரி வாழ்பவனே போற்றி
ஓம் கதிர் காமத்து அருவனே போற்றி
ஓம் கந்தசாமியே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்பனே போற்றி
ஓம் கந்த கோட்டா முருகா போற்றி

ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
ஓம் கன்னித் தமிழ் முருகனே போற்றி
ஓம் கந்த சுகந்தனே போற்றி
ஓம் கணபதிக்கு இளையோனே போற்றி
ஓம் கங்கை தரித்தார் மைந்தனே போற்றி
ஓம் கடற் சூர் தடிந்தாய் போற்றி
ஓம் கச்சினனே போற்றி
ஓம் கழலினனே போற்றி
ஓம் கடம்ப மாலை சூடினாய் போற்றி
ஓம் கங்கையின் மைந்தா போற்றி

ஓம் கழல் வீரா போற்றி
ஓம் கரிமுகன் துணைவா போற்றி
ஓம் கயிலை மலைச் சிறுவா போற்றி
ஓம் கருணை மேருவே போற்றி
ஓம் கந்த வேலவா போற்றி
ஓம் கடம்பணி காளையே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கருணை வெள்ளமே போற்றி
ஓம் கமலச் சேவடியாய் போற்றி
ஓம் கந்த வேளே போற்றி

ஓம் கதியே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கடம்புத் தொடையாய் போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கடம்பந்தாராய் போற்றி
ஓம் கண்டிக் கதிர் வேலா போற்றி
ஓம் கடம்ப மாலையனே போற்றி
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி
ஓம் கதித்த மலைக்கனியே போற்றி
ஓம் கருணை வடிவே போற்றி

ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கந்தபுரி வேளே போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் ஆனாய் போற்றி
ஓம் கருவாய் இருக்கும் கந்தா போற்றி
ஓம் கந்தக் கடம்பனே போற்றி
ஓம் கவிராசனே போற்றி
ஓம் கலப மயில் விசாகனே போற்றி
ஓம் கனகமலைக் காந்தா போற்றி
ஓம் கற்குடி மலையாய் போற்றி
ஓம் கச்சிப்பதியாய் போற்றி

ஓம் கருவூர் உறை கற்பகமே போற்றி
ஓம் கடம்பூர்க் கனியே போற்றி
ஓம் கரிய வனகர்க் கருணையே போற்றி
ஓம் கடவூர் உறையும் கருத்தே போற்றி
ஓம் கந்தன் குடி களிறே போற்றி
ஓம் கன்னபுரத்துச் சேயே போற்றி
ஓம் கந்தனூர் எந்தையே போற்றி
ஓம் கச்சி மாவடியாய் போற்றி
ஓம் கச்சிக் கச்சாலையாய் போற்றி
ஓம் காலிற் கழலினை உடையோய் போற்றி

ஓம் காங்கேய நல்லூர் முருகா போற்றி
ஓம் கான வள்ளியின் கணவா போற்றி
ஓம் காவலனே போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் காப்பவனே போற்றி
ஓம் கானவர் தலைவா போற்றி
ஓம் காவடிப் பிரியனே போற்றி
ஓம் காம தேனுவே போற்றி
ஓம் கார்த்திகை மாதர் மகனே போற்றி
ஓம் காவளூர்க் கனியே போற்றி

ஓம் காசி கங்கையில் மேவினாய் போற்றி
ஓம் காமாத்தூர் உறை கருணையே போற்றி
ஓம் கிரியோனே போற்றி
ஓம் கிரிதோறும் மகிழ்வாய் போற்றி
ஓம் கிளரொளியே போற்றி
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி
ஓம் கிரௌஞ்ச மலை பிளந்தோய் போற்றி
ஓம் கீரனூர் உறைவாய் போற்றி
ஓம் கீரனுக்கு அருளினாய் போற்றி
ஓம் கீதக் கிண்கிணி பாதா போற்றி

ஓம் கீர்த்தியனே போற்றி
ஓம் குகவேலா போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமாரா போற்றி
ஓம் குருமணியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குருநாதா போற்றி
ஓம் குன்றக்குடி குமரா போற்றி
ஓம் குமரேசா போற்றி
ஓம் குகமூர்த்தியே போற்றி

ஓம் குறத்தி கணவனே போற்றி
ஓம் குன்றங் கொன்றாய் போற்றி
ஓம் குன்றாக் கொற்றத்தாய் போற்றி
ஓம் குறிஞ்சிக் கிழவா போற்றி
ஓம் குன்றம் எறிந்தாய் போற்றி
ஓம் குன்றப் போர் செய்தாய் போற்றி
ஓம் குன்று துளைத்த குகனே போற்றி
ஓம் குன்றுதோறாடு குமரா போற்றி
ஓம் குழகனே போற்றி
ஓம் குமரக் கடவுளே போற்றி

ஓம் குன்றக் கடவுளே போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவனே போற்றி
ஓம் குருநாதக் குழந்தாய் போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குமர குருபரனே போற்றி
ஓம் குமரகுருபரற்கருளினை போற்றி
ஓம் குறத்தி திறத்தோனே போற்றி
ஓம் குமர நாயகனே போற்றி
ஓம் குகேசனே போற்றி

ஓம் குறவர் மருகா போற்றி
ஓம் குறிஞ்சி நிலத்துக் கோனே போற்றி
ஓம் குறவர் கோவே போற்றி
ஓம் குராவடி வேலவனே போற்றி
ஓம் குன்றக் குறவர் கோமானே போற்றி
ஓம் குளிர் மலைவாழ் குணமே போற்றி
ஓம் குருபரனாக வந்தாய் போற்றி
ஓம் குழைந்தோன் குமரா போற்றி
ஓம் குன்றுதோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் குன்று தோறும் நின்றாய் போற்றி

ஓம் குரு சீலத்தோனே போற்றி
ஓம் குஞ்சரி கணவா போற்றி
ஓம் குன்றுநவ ஏவும் வேளேபோற்றி
ஓம் குருடி மலைக் குமரா போற்றி
ஓம் குமரக் கோட்டத்துறை கோவே போற்றி
ஓம் குடசை மாநகர் குகனே போற்றி
ஓம் குடந்தை உறையும் குழகா போற்றி
ஓம் குரங்காடு துறை கூத்தா போற்றி
ஓம் குறட்டி உறையும் குகனே போற்றி
ஓம் குளந்தை நகர் குழந்தாய் போற்றி

ஓம் குற்றாலத்துறை கோனே போற்றி
ஓம் குமரன் குன்றம் குடி கொண்டாய் போற்றி
ஓம் குருந்த மலை விருந்தே போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் கூர்வேற் குமரனே போற்றி
ஓம் கூந்தலூர் முருகா போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் கூடல் குமரா போற்றி
ஓம் கூடலை யாற்றூர்க் குகனே போற்றி
ஓம் கூடல் ஆலவாயிலாய் போற்றி

ஓம் கேடிலியே போற்றி
ஓம் கேசவன் மருகா போற்றி
ஓம் கைவேல் கொண்டவனே போற்றி
ஓம் கொன்னவிலும் வேலை உடையாய் போற்றி
ஓம் கொற்றவா போற்றி
ஓம் கொடுங்குன்றில் உறை கோமானே போற்றி
ஓம் கொல்லிமலை வேடனே போற்றி
ஓம் கொற்ற வேலா போற்றி
ஓம் கொல்லிமலை நாடனே போற்றி
ஓம் கொடிமாடச்செங்குன்றூரா போற்றி

ஓம் கொந்தவிழ் கடம்பா போற்றி
ஓம் கொங்குவை காவூர் நன்னாடா போற்றி
ஓம் கொங்கனகிரி குகனே போற்றி
ஓம் கொட்டையூர்க் குமரனே போற்றி
ஓம் கொடுமுடிக் குமரா போற்றி
ஓம் கொடும்பை நகர்க் கொழுந்தே போற்றி
ஓம் கோலப்பா போற்றி
ஓம் கோல நெடுவேற் குமரா போற்றி
ஓம் கோதிலா மாதவத்தோன் போற்றி
ஓம் கோழிக் கொடியோனே போற்றி

ஓம் கோலாகல வீரா போற்றி
ஓம் கோழிக் கொடிக் கோவே போற்றி
ஓம் கோசைநகர் வாழ்வே போற்றி
ஓம் கோடை நகர்க்கோவே போற்றி
ஓம் கோவை மாநகர்க் கோனே போற்றி
ஓம் கோடி நகர்க்குழகா போற்றி
ஓம் கௌமாரத் தலைவா போற்றி
ஓம் கௌமாரி புதல்வா போற்றி
ஓம் கௌமாரனே போற்றி
ஓம் சற்குண நேயா போற்றி

ஓம் சங்கத் தலைவனே போற்றி
ஓம் சரவணப் பெருமானே போற்றி
ஓம் சமரபுரி வேலா போற்றி
ஓம் சரவண குரவணி புயவேளே போற்றி
ஓம் சங்கரன் மதலாய் போற்றி
ஓம் சமர் புரிந்த முருகா போற்றி
ஓம் சந்தனச் சீதளனே போற்றி
ஓம் சண்முகத் தேவே போற்றி
ஓம் சமர சூரபன்மனைத் தடிந்தாய் போற்றி
ஓம் சங்கத் தமிழனே போற்றி

ஓம் சங்கத் திருந்தாய் போற்றி
ஓம் சங்கப் புலவனே போற்றி
ஓம் சக்தி வேலனே போற்றி
ஓம் சண்முக நாதனே போற்றி
ஓம் சக்திச் சரவணனே போற்றி
ஓம் சங்கபாணி மருகோனே போற்றி
ஓம் சங்கரபாணி மருகனே போற்றி
ஓம் சற்குரு நாதா போற்றி
ஓம் சம்புதரு பாலா போற்றி
ஓம் சக்தி தரித்தருள் பெருமானே போற்றி

ஓம் சங்கரற்குக் குருவே போற்றி
ஓம் சங்கரன் சேயே போற்றி
ஓம் சண்முகக் கடவுளே போற்றி
ஓம் சகல லோகர்க்கும் நண்பனே போற்றி
ஓம் சண்பைப் பதிமேவிய கந்தா போற்றி
ஓம் சக்கரப் பள்ளியாய் போற்றி
ஓம் சக்தி மலைச் சாமியே போற்றி
ஓம் சாந்தகுணசீலனே போற்றி
ஓம் சாந்த நாயகி புதல்வா போற்றி
ஓம் சாந்தமருள் குருவே போற்றி

ஓம் சிவந்த ஆடையனே போற்றி
ஓம் சித்தர்கள் குருவே போற்றி
ஓம் சிவன் சேயே போற்றி
ஓம் சிவாகமங்கள் பயில்வோனே போற்றி
ஓம் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிக்கல் நகராய் போற்றி
ஓம் சித்தத்துள் நிற்பாய் போற்றி
ஓம் சிவன்மலைச் சித்தா போற்றி
ஓம் சிவக்கொழுந்தே போற்றி
ஓம் சிவகுருநாதா போற்றி

ஓம் சிவகிரிக் குமரா போற்றி
ஓம் சிராமலைச் செல்வா போற்றி
ஓம் சிவகிரிப் பெருமானே போற்றி
ஓம் சிவசமயச் சிறுவா போற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் சிவலோகச் சேயே போற்றி
ஓம் சிந்தனைக் கினியாய் போற்றி
ஓம் சிவனார் மகிழும் சீலனே போற்றி
ஓம் சிவகலை ஆகம முடிவே போற்றி
ஓம் சிராப்பள்ளி வாழ்வே போற்றி

ஓம் சிறுவை நகர்ச் சீலா போற்றி
ஓம் சிகண்டியூர் உறை செவ்வேளே போற்றி
ஓம் சிவபுரத்துச் சிறுவா போற்றி
ஓம் சிங்கை நகர் சிறுவா போற்றி
ஓம் சிவகாசியுறை சேந்தா போற்றி
ஓம் சீரலைவாய் உறைவாய் போற்றி
ஓம் சீபுருடமங்கைச் சீரே போற்றி
ஓம் சீபரி பூரணனே போற்றி
ஓம் சுப்ரமணியனே போற்றி
ஓம் சுடர் வேலாய் போற்றி

ஓம் சுர பூபதியே போற்றி
ஓம் சுந்தரச் சோதியே போற்றி
ஓம் சுந்தரத் தோளனே போற்றி
ஓம் சுவாமி மலையானே போற்றி
ஓம் சுவாமி நாதனே போற்றி
ஓம் சுடரொளியோனே போற்றி
ஓம் சுத்த தத்துவனே போற்றி
ஓம் சுந்தரக் குகனே போற்றி
ஓம் சுடரொளிப் படையோய் போற்றி
ஓம் சுந்தரேசர் தந்த சுதனே போற்றி

ஓம் சூரனை வென்றாய் போற்றி
ஓம் சூரன்மாளத் தோன்றினாய் போற்றி
ஓம் சூலகரனே போற்றி
ஓம் சூரபன்மன் கடற்றே போற்றி
ஓம் சூரசங்கரனே போற்றி
ஓம் சூரர் குல காலா போற்றி
ஓம் சூர்ப்பகை அறுத்தாய் போற்றி
ஓம் சூரனை வதைத்தோய் போற்றி
ஓம் சூர் கடிந்த கொற்றவா போற்றி
ஓம் சூர் மருங்கு அறுத்தாய் போற்றி

ஓம் சூலபாணி பாலா போற்றி
ஓம் சூர்மா கடிந்த சுடரே போற்றி
ஓம் செவ்வேள் வினோதா போற்றி
ஓம் செவ்வேளே போற்றி
ஓம் செருவில் ஒருவா போற்றி
ஓம் செந்தில் வாழ்வே போற்றி
ஓம் செய்யனே போற்றி
ஓம் செச்சைக் கண்ணியனே போற்றி
ஓம் செஞ்சிலை வீரா போற்றி
ஓம் செங்கழு நீர் மாலையனே போற்றி

ஓம் செச்சையணி மார்பா போற்றி
ஓம் செங்கல்வராயனே போற்றி
ஓம் செந்தாமரைப் பாதனே போற்றி
ஓம் செம்பொருளே போற்றி
ஓம் செழுமணி மார்பா போற்றி
ஓம் செங்கோடனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தமிழ்ப் புலவா போற்றி
ஓம் சென்னிமலைச் சீலா போற்றி
ஓம் செச்சை அம் தாரோனே போற்றி

ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் சேவலோனே போற்றி
ஓம் சேப்படைச் சத்தியோனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாதிபதியே போற்றி
ஓம் சேவற் கொடியோனே போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்ந்தாய் போற்றி
ஓம் சேந்தனே போற்றி
ஓம் சேததண்ட விநோதா போற்றி
ஓம் சேலத்தமர் சேயோனே போற்றி

ஓம் சைவக் கொழுந்தே போற்றி
ஓம் சைல வாழ்வே போற்றி
ஓம் சொற்பொருள் கடந்தாய் போற்றி
ஓம் சோதியே போற்றி
ஓம் சோலைமலைக் கிழவனே போற்றி
ஓம் சோம நாதன் மடத்துச் சோதி போற்றி
ஓம் சோமீச்சரத்துச் சுடரே போற்றி
ஓம் சோணக்கிரியானே போற்றி
ஓம் சௌந்தர நாயகி புதல்வா போற்றி
ஓம் சௌந்தர வடிவா போற்றி

ஓம் சௌபாக்கியம் தருவோனே போற்றி
ஓம் ஞானசத்திநி பாதா போற்றி
ஓம் ஞான பண்டிதா போற்றி
ஓம் ஞானாம்பிகை மகனே போற்றி
ஓம் ஞான பூரணனே போற்றி
ஓம் ஞான சக்தி தரனே போற்றி
ஓம் ஞான தண்டாயுத பாணியே போற்றி
ஓம் ஞான குருவே போற்றி
ஓம் ஞான நெஞ்சினிற் பாலா போற்றி
ஓம் ஞான மலை நாதா போற்றி

ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் ஞானப்பரிதியே போற்றி
ஓம் ஞானக்கடலே போற்றி
ஓம் ஞானேசனே போற்றி
ஓம் ஞானப் பொருளே போற்றி
ஓம் தணிகை மலையானே போற்றி
ஓம் தத்துவ சொரூபனே போற்றி
ஓம் தணிகை மலைத் தலைவா போற்றி
ஓம் தண்டாயுத பாணியே போற்றி
ஓம் தமிழ் வேளே போற்றி

ஓம் தயாநிதியே போற்றி
ஓம் தண்டம் ஏந்திய தலைவா போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தனிச்சுடரே போற்றி
ஓம் தண்தார் பூண்ட கடம்பா போற்றி
ஓம் தந்தைக்கு வேதம் ஓதினோய் போற்றி
ஓம் தண்தார் வேலவா போற்றி
ஓம் தமிழ்க் கடவுளே போற்றி
ஓம் தந்தை நாதனே போற்றி
ஓம் தமிழுருவாய் நின்ற முருகா போற்றி

ஓம் தந்தியின் கொம்பைப் புணர்வோனே போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் தகர் கடாவும் தனிமுதலே போற்றி
ஓம் தச்சூர் அமர்ந்த தலைவா போற்றி
ஓம் தஞ்சை மாநகர் வேலா போற்றி
ஓம் தவத்துறைத் தலைவா போற்றி
ஓம் தணிச்சயத்துத் தவமே போற்றி
ஓம் தானைத் தலைவா போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி
ஓம் தான்தோன்றியுறை தலைவா போற்றி

ஓம் தாரகாந்தனே போற்றி
ஓம் தாரைவேல் தலைவா போற்றி
ஓம் தாயாகிக் காப்பாய் போற்றி
ஓம் திண்புய வேளே போற்றி
ஓம் திருமார்பா போற்றி
ஓம் திறல் வேலா போற்றி
ஓம் திருத்தணி வேலா போற்றி
ஓம் திருத்தாளனே போற்றி
ஓம் திருமால் மருகா போற்றி
ஓம் திருப்பரங்குன்ற வாழ்வே போற்றி

ஓம் திருவாவினன் குடிச் செல்வா போற்றி
ஓம் திருவேரகத் தெந்தாய் போற்றி
ஓம் திருத் தணிகை மலையாய் போற்றி
ஓம் திருக்கை வேலா போற்றி
ஓம் திருச்சீரலைவாய் உறைவாய் போற்றி
ஓம் திருத்தணிக் கிழவா போற்றி
ஓம் திருநெடுங் குமரா போற்றி
ஓம் திரைகடல் பருகும் வேலா போற்றி
ஓம் திருச்செந்தூர்த் தெய்வமே போற்றி
ஓம் திருமால் மருகோனே போற்றி

ஓம் திருவிலஞ்சிக் குமரா போற்றி
ஓம் திருச்செங்கோட்டு இறைவா போற்றி
ஓம் திருவல்லத்துத் திருவே போற்றி
ஓம் திருப்புகழோனே போற்றி
ஓம் திருமகள் மருகா போற்றி
ஓம் திருமுருகாற்றுப் படையுளாய் போற்றி
ஓம் திருப்பேரூர் முருகா போற்றி
ஓம் திருப்புகழ் வேளே போற்றி
ஓம் திருப்புகழ் பெற்றோய் போற்றி
ஓம் திருவருள் தருவோனே போற்றி

ஓம் திருவிடைக் கழித் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே போற்றி
ஓம் தித்திக்கும் அமுதே போற்றி
ஓம் திவ்ய ரூபனே போற்றி
ஓம் திகழ் புயனே போற்றி
ஓம் திறவோனே போற்றி
ஓம் திருத்தணிக் காவலனே போற்றி
ஓம் திருமாமணியே போற்றி
ஓம் திகழ் மார்போனே போற்றி
ஓம் திருப்புகழ் நாதா போற்றி

ஓம் திருத் தோளனே போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருளே போற்றி
ஓம் திருச்செந்தில் வளர் சேவகா போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் தேவா போற்றி
ஓம் திங்களின் ஒளிரும் சீர்முகா போற்றி
ஓம் திருப்பரங்கிரிதனில் உறைவாய் போற்றி
ஓம் திருமலைத் திருவே போற்றி
ஓம் திருவேங்கட மாமலையாய் போற்றி
ஓம் திரிமூர்த்திகள் தம்பிரானே போற்றி
ஓம் திருக்கழுக் குன்றத் திருவே போற்றி

ஓம் திருக்கோணமலைத் தேனே போற்றி
ஓம் திருக்காளத்தித் தேவா போற்றி
ஓம் திருவிரிஞ்சைத் திருவே போற்றி
ஓம் திருவாலங்காட்டுத் தெளிவே போற்றி
ஓம் திருவோத்தூர் தலைவா போற்றி
ஓம் திருவல்லிதாயம் உறைவாய் போற்றி
ஓம் திருவான்மியூர்த் தேனே போற்றி
ஓம் திருவொற்றியூரா போற்றி
ஓம் திருப்போரூருறை தேவா போற்றி
ஓம் திருவக்கரை உறைவோனே போற்றி

ஓம் திருவாமூர் வாழ்வே போற்றி
ஓம் திருவெண்ணெய் நல்லூராய் போற்றி
ஓம் திருவேற்களம் மேவிய தீரா போற்றி
ஓம் திருவரத்துறைத் தேனே போற்றி
ஓம் திருமுட்டத்துத் திகழொளியே போற்றி
ஓம் திருநல்லூர்த் தீங்கனியே போற்றி
ஓம் திருப்படித்தரைத் தேனே போற்றி
ஓம் திருவிடைக்கழிக் குமரா போற்றி
ஓம் திலதைப்பதித் தெளிவே போற்றி
ஓம் திருமாகாள நகர் முருகா போற்றி

ஓம் திருவாஞ்சியத்து அமரா போற்றி
ஓம் திரியம்பகபுரத்துத் தேனே போற்றி
ஓம் திருப்பெருந்துறையுறை குருவே போற்றி
ஓம் திருத்துருத்தி வாழ் முருகா போற்றி
ஓம் திருவீழி மிழலைவாழ் பெருமானே போற்றி
ஓம் திருவாவடுதுறை தேவா போற்றி
ஓம் திரிபுவனத்துத் தீரா போற்றி
ஓம் திருவலஞ்சுழி வாழ்வே போற்றி
ஓம் திருவாளிக் கூடற் பெருமானே போற்றி
ஓம் திருப்புத்தூர் அமர்ந்தாய் போற்றி

ஓம் தீர வேலா போற்றி
ஓம் தீப மங்கள சோதியானே போற்றி
ஓம் தீர்த்தமலைத் தீரனே போற்றி
ஓம் துதிக்கு உளம் மகிழ்வாய் போற்றி
ஓம் தூய அம்பல லீலா போற்றி
ஓம் தெய்வயானைத் துணைவா போற்றி
ஓம் தென்நாட்டுத் தெய்வமே போற்றி
ஓம் தென்பரங் குன்றனே போற்றி
ஓம் தெள்ளு தமிழே போற்றி
ஓம் தெளிந்தவர் தெய்வமே போற்றி

ஓம் பழனியப்பா போற்றி
ஓம் தென்றற்குரித் தேசிகனே போற்றி
ஓம் தெய்வயானை மணாளா போற்றி
ஓம் தென்சேரி கிரியாய் போற்றி
ஓம் தென்கடம்பந்துறையாய் போற்றி
ஓம் தேவ தேவே போற்றி
ஓம் தேவ சேனாதிபதியே போற்றி
ஓம் தேவர்கள் தம்பிரானே போற்றி
ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி
ஓம் தேசிகனே போற்றி

ஓம் தேவர்கள் சிறை மீட்டவனே போற்றி
ஓம் தேவர் கோவே போற்றி
ஓம் தேனே போற்றி
ஓம் தேவநாயகனே போற்றி
ஓம் தேவர்கள் பெருமானே போற்றி
ஓம் தேவகுஞ்சரி பாகா போற்றி
ஓம் தேவாதி தேவன் மைந்தா போற்றி
ஓம் தேவர்படைத் தலைவா போற்றி
ஓம் தேறுவார்க் கெளியாய் போற்றி
ஓம் தேவேலாய் ஆனாய் போற்றி

ஓம் தேனொடு தினைமா விளைந்தாய் போற்றி
ஓம் தேவனூர்த் தேவே போற்றி
ஓம் தைப்பூசம் உகந்தாய் போற்றி
ஓம் தொடியணி தோளா போற்றி
ஓம் தொல் புகழ் உடையோன் போற்றி
ஓம் தோகை மயிலோனே போற்றி
ஓம் நம்பி மருகனே போற்றி
ஓம் நற்றவ வேடம் பூண்டாய் போற்றி
ஓம் நவவீரர் தலைவா போற்றி
ஓம் நக்கீரர்க் குதவிய நாதா போற்றி

ஓம் நக்கீரர் பாடிய நம்பா போற்றி
ஓம் நஞ்சுண்டவர் பாலா போற்றி
ஓம் நவநீதன் மருகா போற்றி
ஓம் நடனங்கொள் வேலா போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நன்றெல்லாம் நல்கிடும் முருகா போற்றி
ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
ஓம் நவவீரர் நாயகனே போற்றி
ஓம் நல்லூர் உறையும் நண்பா போற்றி
ஓம் நான்மறை நாயகா போற்றி

ஓம் நாக பந்த மயூரா போற்றி
ஓம் நாரணன் மருகா போற்றி
ஓம் நாயகனே போற்றி
ஓம் நான்முகனைச் சிறையிட்டாய் போற்றி
ஓம் நாத விந்து கலாதீ போற்றி
ஓம் நாடாளு நாயகனே போற்றி
ஓம் நாகமலை நம்பீ போற்றி
ஓம் நாககிரி பெருமானே போற்றி
ஓம் நாவலூர் நம்பா போற்றி
ஓம் நாகபட்டினத்து நலமே போற்றி

ஓம் நாகேச்சரத்து நன்மணியே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிறைகலையோனே போற்றி
ஓம் நித்தியமானவனே போற்றி
ஓம் நிலவு புகழ் ஆனாய் போற்றி
ஓம் நிமர் செல்வனே போற்றி
ஓம் நித்திலக் கொழுந்தே போற்றி
ஓம் நிம்பபுர வாணனே போற்றி
ஓம் நீலகண்டன் மகனே போற்றி
ஓம் நீதி தாங்கிய தேவா போற்றி

ஓம் நீபத் தொங்கலாய் போற்றி
ஓம் நீல மயில் நேசனே போற்றி
ஓம் நீக்கமற நின்றாய் போற்றி
ஓம் நீலி பெற்ற நிமலா போற்றி
ஓம் நூலறி புலவா போற்றி
ஓம் நெற்றிக்கண்ணன் மைந்தனே போற்றி
ஓம் நெடிய பிரானே போற்றி
ஓம் நெடுவரைக் கிழவா போற்றி
ஓம் நெடுவே லுடையாய் போற்றி
ஓம் நெடுவேல் அண்ணலே போற்றி

ஓம் நெடுவாயில் வீற்றிருந்தாய் போற்றி
ஓம் நெய்த்தானத்து நிமலா போற்றி
ஓம் நெடுங்களத்து நின்மலா போற்றி
ஓம் நெருவை நகர் நீதியே போற்றி
ஓம் நைவேர்க்கருள் நம்பா போற்றி
ஓம் பன்னிரு கரத்தாய் போற்றி
ஓம் பதினெண் கண்ணாய் போற்றி
ஓம் பன்னிரு தோளா போற்றி
ஓம் பச்சை மயில் வீரனே போற்றி
ஓம் பழனி மலை அதிபதியே போற்றி

ஓம் பரம சிவன் மைந்தனே போற்றி
ஓம் பழையோள் குழவீ போற்றி
ஓம் பன்னிருகையனே போற்றி
ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் பழநிக் கரசே போற்றி
ஓம் பழனி அண்ணலே போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி
ஓம் படைகடல் தலைவா போற்றி
ஓம் பரங்குன்ற மர்ந்தாய் போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடையவனே போற்றி

ஓம் பல் வளமும் பணித்தருள்பவனே போற்றி
ஓம் பரனே போற்றி
ஓம் பல குன்றிலும் அமர்ந்தாய் போற்றி
ஓம் பழநிவாழ் முருகா போற்றி
ஓம் பழமுதிர் சோலைமலை கிழவனே போற்றி
ஓம் பலவளம் தரும் பரமா போற்றி
ஓம் பராசக்தி பாலனே போற்றி
ஓம் பழநி மலை வேலனே போற்றி
ஓம் பழநிக் கந்தனே போற்றி
ஓம் பதாம்புயனே போற்றி

ஓம் படைவேல் செம்மலே போற்றி
ஓம் பக்தருக்கெளியாய் போற்றி
ஓம் பவளவெற்பு அணையாய் போற்றி
ஓம் பலகலை சிவாகமங்கள் பயில்வோய் போற்றி
ஓம் பரம சீல சற்குண விலாசனே போற்றி
ஓம் பந்தணையில் வந்திடும் கந்தா போற்றி
ஓம் பனந்தாளுறையும் பாகே போற்றி
ஓம் பழையாரைப் பதியாய் போற்றி
ஓம் பழுவூர் உறையும் பரமா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பயனே போற்றி

ஓம் பட்டாலியூர்ப் பதியாய் போற்றி
ஓம் பங்குனி உத்திரம் உகந்தாய் போற்றி
ஓம் பாசமறுப்பாய் போற்றி
ஓம் பார்வதி மைந்தா போற்றி
ஓம் பாசங்கள் பறிப்போய் போற்றி
ஓம் பாலசுப்ரமணியா போற்றி
ஓம் பாக்கத்தில் உறையும் பண்பே போற்றி
ஓம் பாடலவள நகராய் போற்றி
ஓம் பாகைவள நகராய் போற்றி
ஓம் பிரம தேவர் வரதா போற்றி

ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரமனைச் சிறையிட்டவனே போற்றி
ஓம் பிரமனுக்குப் பிரணவம் அருளினாய் போற்றி
ஓம் பிரம குருவே போற்றி
ஓம் பிரமனைக் குட்டினோய் போற்றி
ஓம் பிரம்ம சாத்தானே போற்றி
ஓம் பிறை சூடி பிள்ளாய் போற்றி
ஓம் பீடுடையானே போற்றி
ஓம் பீதகவாடையானே போற்றி
ஓம் பீலி மயில் வாகனா போற்றி

ஓம் புலவர் ஏறே போற்றி
ஓம் புலவர் தலைவா போற்றி
ஓம் புலவோனே போற்றி
ஓம் புகழ் வேலா போற்றி
ஓம் புள்ளி மயில் புனிதா போற்றி
ஓம் புவி போற்றுபவனே போற்றி
ஓம் புகழ் சுவாமி மலையோனே போற்றி
ஓம் புகழி மலைப் புனிதா போற்றி
ஓம் புலியூர் உறை புகழே போற்றி
ஓம் பூதப் பொரு படையாய் போற்றி

ஓம் பூக்கும் கடம்பா போற்றி
ஓம் பூதலம் தனை ஆள்வாய் போற்றி
ஓம் பூம்பாறை உறைவாய் போற்றி
ஓம் பூந்துருத்திப் புனிதா போற்றி
ஓம் பூவாளூர்ப் புண்ணியனே போற்றி
ஓம் பெரியோனே போற்றி
ஓம் பெருமாளே போற்றி
ஓம் பெரிய நாயகி பெற்ற பிரானே போற்றி
ஓம் பெருஞ் செல்வா போற்றி
ஓம் பெரும் பெயர் முருகா போற்றி

ஓம் பெரும் பெயர்க் கடவுளே போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் பெருந்தகையே போற்றி
ஓம் பெருங்குடிப் பிரானே போற்றி
ஓம் பெரிய மடத்துப் பெருமானே போற்றி
ஓம் பெரும் புலியூர் வாழ்வே போற்றி
ஓம் பேறைநகர்ப் பெருமானே போற்றி
ஓம் பேரூர்ப் பெருமானே போற்றி
ஓம் பைந்தமிழ்த் தலைவா போற்றி
ஓம் பொருப்பைப் பொடித்தாய் போற்றி

ஓம் பொன்னே போற்றி
ஓம் பொருவிறல் மள்ளா போற்றி
ஓம் பொலம்பூண் சேயே போற்றி
ஓம் பொய்யிலா மனத்துள் புகுந்தாய் போற்றி
ஓம் பொன்னுலகை அருள்வோனே போற்றி
ஓம் பொருப்பிலுறை நாதா போற்றி
ஓம் பொன்னார் மணிமயில் ஏறினோய் போற்றி
ஓம் பொன்னார் திருவடியே போற்றி
ஓம் பொருவில் முருக நாதனே போற்றி
ஓம் பொதிய மலை முருகா போற்றி

ஓம் போர் மிகு பொருநனே போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் போதகம் திரு கோவே போற்றி
ஓம் பௌவம் கலக்கிய படையாய் போற்றி
ஓம் மயில் மீதாடி வருவோய் போற்றி
ஓம் மஞ்ஞை ஏறிய மணியே போற்றி
ஓம் மறைஞான முதல்வா போற்றி
ஓம் மணிமார்பனே போற்றி
ஓம் மறைவேள்வி காவற்காரனே போற்றி
ஓம் மதியாளனே போற்றி

ஓம் மரகதக் கொடியின் மகனே போற்றி
ஓம் மணிவேல் மைந்தா போற்றி
ஓம் மரகத மயில் வீரா போற்றி
ஓம் மயில் வாகனா போற்றி
ஓம் மயூரப் பிரியனே போற்றி
ஓம் மலைமகள் மகனே போற்றி
ஓம் மங்கைமார் இருவர் மணாளா போற்றி
ஓம் மதவலியே போற்றி
ஓம் மலைக் கிழவோனே போற்றி
ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி

ஓம் மது சூதன் மருகா போற்றி
ஓம் மலை வாழ்வே போற்றி
ஓம் மயில் வாழ்வே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மயிலம் வாழ்பவனே போற்றி
ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மயூரகிரி நாதனே போற்றி
ஓம் மங்கலப் பொருளே போற்றி
ஓம் மறைப் பொருளே போற்றி

ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் மணிமுடி அழகிய பெருமானே போற்றி
ஓம் மருதமலைக் குமரா போற்றி
ஓம் மயிலைப் பதிதனில் உறைவோனே போற்றி
ஓம் மதுராந்தகத்து மணியே போற்றி
ஓம் மயேந்திரத்து மரகதமே போற்றி
ஓம் மருத்துவக்குடி மாண்பே போற்றி
ஓம் மாலைத் தோளனே போற்றி
ஓம் மான்மகள் மணாளா போற்றி
ஓம் மாவறுத்தாய் போற்றி

ஓம் மாணிக்க வேலா போற்றி
ஓம் மால் மருகா போற்றி
ஓம் மலயனுக்கு அரியானே போற்றி
ஓம் மாதவரைப் பிரியானே போற்றி
ஓம் மாற்றோர் கூற்றே போற்றி
ஓம் மாலை மார்பா போற்றி
ஓம் மாயோன் மருகனே போற்றி
ஓம் மாமுருகா போற்றி
ஓம் மா மணிக்கிரி வாசா போற்றி
ஓம் மாமலைக் கோமானே போற்றி

ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் மர்முதல் தடிந்த மறவா போற்றி
ஓம் மான்மகள் கோனே போற்றி
ஓம் மாயாபுரி மைந்தா போற்றி
ஓம் மாடையம்பதி வாழ்வே போற்றி
ஓம் மாதை நகருறை மணியே போற்றி
ஓம் மாந்துறையுறையும் மதியே போற்றி
ஓம் மின்னேர் அனைய சுடரே போற்றி
ஓம் மின்வேல் ஏந்தினாய் போற்றி

ஓம் மின்னலொளி அண்ணலே போற்றி
ஓம் முருகேசா போற்றி
ஓம் முந்நான்கு தோளுடையோனே போற்றி
ஓம் முகங்களோர் ஆறுடையாய் போற்றி
ஓம் முக்கண் உடையோய் போற்றி
ஓம் முழுதருட் புரியும் முத்தே போற்றி
ஓம் முனிவர் தம்பிரானே போற்றி
ஓம் முத்திக்கொரு வித்தே போற்றி
ஓம் முருக வேளே போற்றி
ஓம் முத்துக் குமரா போற்றி

ஓம் முத்துவேல் முருகா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் முழு முதலே போற்றி
ஓம் முன்னவனே போற்றி
ஓம் முத்தமிழிற் பெரியோனே போற்றி
ஓம் முருகென்னும் அழகே போற்றி
ஓம் முத்து இரத்தினமே போற்றி
ஓம் முத்தமிழ் விரகா போற்றி
ஓம் முருகச் சுரபூபதியே போற்றி
ஓம் முத்து நகை புரிபவனே போற்றி

ஓம் முத்தமிழ் மாலை முடியோய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்பாய் போற்றி
ஓம் முகுந்தன் மருகா போற்றி
ஓம் முதுகிரியுறை முருகா போற்றி
ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
ஓம் முள்வாய் உறையும் முருகா போற்றி
ஓம் மூவர் போற்றும் முனிவா போற்றி
ஓம் மூவுலகாள்பவனே போற்றி
ஓம் மூலமந்திரப் பொருள் பகர்ந்தாய் போற்றி
ஓம் மெய்ஞ்ஞான அயிலோனே போற்றி

ஓம் மெய்ஞ்ஞானக் குகனே போற்றி
ஓம் மெய்ப்புலவர் கோவே போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் மைந்தர் ஏறே போற்றி
ஓம் மையனைய கண்டர் மகனே போற்றி
ஓம் மைவண்ணன் மருகா போற்றி
ஓம் மொழி முதற்பொருளே போற்றி
ஓம் மோட்சம் அருள்வோய் போற்றி
ஓம் மோஷாயன பட்டினத்து அரசே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி

ஓம் வடபழனி முருகா போற்றி
ஓம் வயலூர் வரதா போற்றி
ஓம் வரம் கொடுக்கும் வள்ளலே போற்றி
ஓம் வள்ளி மகிழ் மணாளா போற்றி
ஓம் வரதாமணியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வண்ணமயில் வாகனா போற்றி
ஓம் வயலூர்க் குமரா போற்றி
ஓம் வச்சிர வேலனே போற்றி
ஓம் வரிவில் வாளியனே போற்றி

ஓம் வற்றா அருள்சேர் குமரா போற்றி
ஓம் வள்ளி மலை வள்ளலே போற்றி
ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
ஓம் வயற் பழனி காக்கும் இறைவா போற்றி
ஓம் வளமையாளனே போற்றி
ஓம் வரை உறழ் திணி தோளா போற்றி
ஓம் வள்ளியூர் உறை பெருமானே போற்றி
ஓம் வடமலை வேலா போற்றி
ஓம் வயிரவி வனத்து வளவா போற்றி
ஓம் வடதிருமுல்லை வாயிலாய் போற்றி

ஓம் வளவா புரிவாழ்வே போற்றி
ஓம் வடுகூர் உறையும் வள்ளலே போற்றி
ஓம் வழுவூர் உறையும் வாழ்வே போற்றி
ஓம் வலிவலத்து வான் முகிலே போற்றி
ஓம் வானோர் தலைவா போற்றி
ஓம் வாரி கொடிய வினை தீர்த்தாய் போற்றி
ஓம் வானவர் தம்பிரானே போற்றி
ஓம் வானப் பைந்தொடி வாழ்வே போற்றி
ஓம் வாலிகொண்ட புரத்தாய் போற்றி
ஓம் வாகை மாநகர் வாழ்வே போற்றி

ஓம் வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் விராலி மலையானே போற்றி
ஓம் விமலனே போற்றி
ஓம் விகிர்தனே போற்றி
ஓம் வினை தீர்க்கும் வேலோய் போற்றி
ஓம் விண்ணவர் நாயகா போற்றி
ஓம் விண்ணவர் உலகங் காத்தோய் போற்றி
ஓம் விசாகத்து ஒளியே போற்றி
ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
ஓம் வில்லவனே போற்றி

ஓம் விளைவே போற்றி
ஓம் விநாயக மலை உறைவேலா போற்றி
ஓம் விற்குடியில் உறையும் வேந்தே போற்றி
ஓம் விசயபுரத்து வேந்தே போற்றி
ஓம் விசயமங்கலத்து வேளே போற்றி
ஓம் விசாவை உறையும் வேலா போற்றி
ஓம் வீர வேலா போற்றி
ஓம் வீரவாகு தோழா போற்றி
ஓம் வீறுகொண்ட விசாகா போற்றி
ஓம் வீடுபேற்றை அருளுவோய் போற்றி

ஓம் வீர கண்டனை கொள் வீரா போற்றி
ஓம் வெட்சி மாலையாய் போற்றி
ஓம் வெண்ணீறு அணிந்தாய் போற்றி
ஓம் வெள்ளி மலை வேந்தே போற்றி
ஓம் வெட்சித் தொடை புனைவாய் போற்றி
ஓம் வெற்றி வேலா போற்றி
ஓம் வெந்திறல் வேலோய்  போற்றி
ஓம் வென்றிடு வேற்படை உடையோய் போற்றி
ஓம் வெற்பைக் கூறுசெய்தாய் போற்றி
ஓம் வெற்பொடும் அவுணனை அழித்தோய் போற்றி

ஓம் வெற்பிலுறை விளக்கே போற்றி
ஓம் வெற்பெலாம் நின்றாய் போற்றி
ஓம் வெற்றி வேலாயுதனே போற்றி
ஓம் வெள்ளிகரத்து வேந்தே போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் வேளூர் வாழ் முருகா போற்றி
ஓம் வேல்கெழு தடக்கையாய் போற்றி
ஓம் வேல் ஏந்தும் வேளே போற்றி
ஓம் வேலப்பா போற்றி
ஓம் வேலாயுதனே போற்றி

ஓம் வேத நாயகனே போற்றி
ஓம் வேதப் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பயனே போற்றி
ஓம் வேலுமயிலுந் துணையருள்வாய் போற்றி
ஓம் வேதமந்திர சொரூபா போற்றி
ஓம் வேட்டுவக் கோலம் பூண்டாய் போற்றி
ஓம் வேங்கையின் உருவமானாய் போற்றி
ஓம் வேங்கை மலர் விருப்பா போற்றி
ஓம் வேற்படைவீரா போற்றி
ஓம் வேடுவர் கன்னித் தலைவா போற்றி

ஓம் வேடர் தங்கொடி மாலா போற்றி
ஓம் வேடர் நங்கை நாயகா போற்றி
ஓம் வேலும் கொடியும் உடையோய் போற்றி
ஓம் வேதப் பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் வேழ முகத்தோன் தோழா போற்றி
ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் வேந்தனே போற்றி
ஓம் வேல் வீரனே போற்றி
ஓம் வேற்கை முனிவா போற்றி
ஓம் வேற்படைத் தேவே போற்றி

ஓம் வேற்காடுறையும் விமலா போற்றி
ஓம் வேப்பூர் அமர்ந்த விதியே போற்றி
ஓம் வேப்பஞ் சந்திக் கந்தனே போற்றி
ஓம் வேதவனத்தமர்ந்த வேலா போற்றி
ஓம் வேலவனென்னும் வித்தகா போற்றி
ஓம் வைரவேல் அழகா போற்றி
ஓம் வைவேற் புங்கவா போற்றி
ஓம் வையாபுரிக்கரசே போற்றி

வேலும் மயிலும் துணை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar