SS அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு
அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு
அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு

பொதுவாக மக்கள் செய்கின்ற நற்காரியங்களையும் தீயகாரியங்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக் கொண்டு அச்செயல்களுக்கு ஸாக்ஷியாக இருக்கின்றனர் என மஹாபாரதம் சொல்லும். எனவே மனிதன்,  தர்ம வடிவாயமைந்த அவர்களுடைய அருளைப் பெறுவதற்கும் தீயவற்றை யகற்றி, நற்காரியங்களைச் செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான் என்பது அச்செய்யுளின் கருத்தாகும்.  அஷ்டதிக் பாலகர்களைத் துதிப்பதால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.

இந்திரன்

இந்திரன் - இவனை யுபாசிப்பதால் மக்கள் ஐச்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறுகின்றனர்.

ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம்
ஸகஸ்ர நயநம் ஸக்ரம்
வஜ்ரபாணிம் விபாவயேத்

அக்னி

அக்நி- இவனையுபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும்
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸநம்

எமன்

எமன் -இவனையுபாசிப்பதால் தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவன் தர்மத்தின் வடிவினன்.

க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்

நிருதி

 நிருதி- இவனையிபாசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.

ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்

வருணன்

வருணன் - இவன் மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டுபண்ணி ஸூகத்தைக் கொடுப்பவன்.

நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம்
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம்

வாயு

வாயு- இவன் வடிவமற்றவன். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாயுள்ளவன். இவனை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.

ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம்

குபேரன்

குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவன்.

குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத்

ஈசானன்

ஈசாநன் - இவன் மங்கள வடிவினன். இவன் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவன்.

ஈஸாநம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம்
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar