 |
கபீர்தாசரிடம் ஒருவன், ஐயா! மனது சுத்தம் அடைந்தால் இறைவன் அருள் தானாக வரும் என்று போதிக்கிறார்கள். மனதை சுத்தம் செய்வது எப்படி? என்று கேட்டான். மனம் சாந்தம் அடைவதும், மரண பயம் நீங்குவதும், நடு நிலைமையில் இருத்தலுமே மனதை சுத்தப்படுத்துவதற்கான மிக முக்கியமான வழிகள். இவற்றால் மனம் தூய்மையாகி ஓர் உள்ளொளி புறப்பட்டு அது வெளியிலும் பரவும். இறைவன் அருள் தானாக வரும் என்றார் கபீர்தாசர்.
|
|
|
|