Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ரதசப்தமி விரதம்!
 
பக்தி கதைகள்
ரதசப்தமி விரதம்!

ஆரோக்கியம்,நீண்ட ஆயுள், நோயின்மை, செல்வம், புத்திரப்பேறு, புண்ணியம், பகைவரை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் முதலிய அனைத்தையும் தரும்விரதம் ரத சப்தமி. என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கும்பிரச்னைகளுக்கு கூட,ரதசப்தமி விரதம் நல்ல தீர்வுக்கு வழிகாட்டும். ஒருமுறை ஜோதி வடிவான இறைவன், தான் ஒருவன் மட்டுமே சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். அதனால் சூரியன் என்னும் பெருஞ்சுடரை உருவாக்கினார்.புராண காலத்தில் சூரிய மண்டலம், தற்போது இருப்பதை விட பல மடங்கு பெரிதாக இருந்தது. உலகத்திற்கு வெளிச்சத்தையும், சுகத்தையும் கொடுத்தது. ரிஷிகளும், தேவர்களும் சூரியனைத் துதித்து வந்தார்கள். யுகங்கள் பல சென்றன. திடீரென சூரியனின் ஒளி மங்கத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பிரம்மனிடம், நான்முகக் கடவுளே! சூரிய ஒளி மீண்டும் முன் போல பிரகாசிக்க அருள்புரிய வேண்டும் என கேட்டனர்.பிரம்மாவின் தலைமையில் தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். விஸ்வகர்மா உதவியுடன், முன் போல சூரியன் ஒளி வீசுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தனர். விஸ்வகர்மாவும் அந்த முயற்சியில் வெற்றி பெற்றார். அதன்படி, சூரியனுக்கு ஒளியூட்டிய நாளேரதசப்தமி. (ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழையாலும், மார்கழியிலும், தை துவக்கத்திலும்பனியாலும் மேகம் கூடி இருண்டு கிடந்த வானம்,பளிச் என வானில் வெளிப்படுவதையே இப்படி ஒரு கதையாக்கி முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்) ஒளி பெற்ற சூரியனுக்கு விஷ்ணு ஒற்றைச் சக்கரம் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தைப் பரிசாகக் கொடுத்தார். சூரியன் தன் வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குவது தை முதல் நாள். ஆனால், உண்மையில் ரதசப்தமியன்று தான் இந்தப் பயணம் துவங்கும். சூரியனின் ரதம் திசை மாறும் நாள் என்பதாலேயே, இந்த நிகழ்வின் பெயரிலும் ரதம் சேர்ந்தது. தை மாத வளர்பிறை சப்தமியன்று ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதிகாலையில் சப்தமி இருந்தால் அன்றேவிரதத்தை மேற்கொள்ள வேண்டும். இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் சப்தமி இருந்தால், முதல்நாளே விரதம் துவங்கி விட வேண்டும். அன்று அதிகாலையில், ஏழு எருக்கு இலை, ஏழு இலந்தை இலைகளை எடுத்து ஒன்றாக அடுக்கி அவற்றுடன் அட்சதை, மஞ்சள்துõள் சேர்த்து பெண்கள் தங்களின் தலையில் வைத்தபடிநீராடுவது மரபு. ஆண்களுக்கு மஞ்சள்துõள் மட்டும்சேர்ப்பதில்லை. பெற்றோர் இல்லாதவர்கள் எருக்கு, இலந்தை இலையுடன் பச்சரிசி, எள் சேர்த்து தலையில் வைத்து நீராட வேண்டும். சூரியனைக் கோலமாக வரைந்தோ,சூரியனின் படத்தை வைத்தோ பூஜை செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் இந்த மூன்று உலோகத்தில் ஏதாவது ஒன்றினாலான விளக்கில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.ஒரு காலத்தில் இந்த தீபத்தை  புண்ணிய நதிகளில் விட்டார்கள் என்றால், நம் முன்னோரின் தர்மகுணத்தைப் பாருங்களேன்! இந்நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய செய்தால்ஏழு ஜென்மபாவம் கூடநம்மை விட்டுஓடி விடும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar