Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாலாவதி!
 
பக்தி கதைகள்
மாலாவதி!

பிரம்மாவின் மடியிலிருந்து தோன்றியவர் நாரதர். அவர் இல்லறத்தை மறுத்ததால் நான்முகன் சினத்தோடு, கந்தர்வ குலத்தில் பிறந்து ஐம்பது ஸ்திரீகளோடு சம்சாரத்தில் உழலக்கடவது என சபித்தார். புஷ்கர க்ஷேத்திரத்தில் ஒரு கந்தர்வராஜனின் புத்திரனாகப் பிறந்தார் நாரதர். உபபர்ஹணன் என்று பெயரிட்டு வளர்த்தான் கந்தர்வராஜன். சித்ரரதன் என்ற கந்தர்வனுக்குப் பிறந்த ஐம்பது பெண்கள், உபபர்ஹணனின் சவுந்தர்யத்தில் மயங்கி, அவனை மணந்து கொண்டனர். மூத்தவள் பெயர் மாலாவதி. ஒரு சமயம், சத்யலோகம் சென்ற அவன், அங்கே நடனமாடிய ரம்பையைக் கண்டு மோகித்து அவளை ஆலிங்கனம் செய்தான். இதைக்கண்ட திசைமுகன், நீ கீழ்க்கடையாய் பிறப்பாய் என சபித்தார். பூலோகம் திரும்பிய உபபர்ஹணன், மறுபிறவியையும் அனுபவித்து முடிக்க, யோகத்தில் அமர்ந்து உயிரை விட்டான். அவனது பத்தினியருக்கு அவன் இப்படி உயிரைத் துறந்ததற்குக் காரணம் தெரியவில்லை. அஷ்டதிக்பாலர்களைத் தியானித்து கணவனுக்கு உயிரூட்டும்படி பிரார்த்தித்தனர்.

அவர்களில் மூத்தவளான மாலாவதியின் தவாக்கினியால் தவித்த அமரர்கள், பரந்தாமனைச் சரணடைந்தனர். மாலாவதி முன் தோன்றுங்கள். யாம் துணையிருப்போம் என்றார் ஸ்ரீஹரி. அஷ்டதிக்பாலகர்கள் உபபர்ஹணனின் பத்தினியர் முன் தோன்றினர். மாலாவதி அவர்களிடம், தன்பதியை எழுப்புமாறு வேண்டினாள். அப்போது மாதவனும் அங்கே வெளிப்பட்டார். மாலாவதி அவரிடம், ஸ்வாமி காலன், யமன், மிருத்யு கன்னிகை மூவரையும் தரிசிக்க விரும்புகிறேன் என்று கோரினாள். ஸ்ரீஹரி மூவரையும் அங்கே தோன்றும்படி ஆணையிட்டார். யமனிடம், என் மணாளனை பறித்துச் சென்றதன் காரணம் என்ன? என்று கேட்டாள் மாலாவதி. மிருத்யு கன்னிகை உத்தரவுப்படிதான் இது நடந்தது என்றார் யமதர்மன். தாயே! அகால மரணமடைய என் பதி செய்த பாபம் என்ன? என்று மிருத்யு கன்னிகை வினவ, கற்புக்கரசியே! காலம் கட்டளைப் படிதான் நான் பிள்ளைகளை ஏவுகிறேன். மோகமென்ற மைந்தன் உன் புருஷனின் மன உணர்வுகளைத் தூண்டினான். மற்றொரு புதல்வன் சதுர்முகன் நாவிலமர்ந்து சாபமிடத் தூண்டினான். இன்னொருவன் யோகத்தில் மூச்சைவிட உன் புருஷன் புத்தியை இயக்கினான். இவை இறை லீலை எனப் பெருமூச்சு விட்டாள் மிருத்யு கன்னிகை. பிரபோ, என் உயிரையும் காணிக்கையாக எடுத்துச் செல்ல ஆணை பிறப்பியுங்கள் என கண்ணீர் சொரிந்தாள் மாலாவதி. ஸ்ரீஹரி பிரம்மாவை நினைக்க, நான்முகன் தோன்றி, கமண்டல நீரை உபபர்ஹணன் மீது தெளிக்க, அவன் தூங்கி விழித்தது போல் எழுந்தான். மும்மூர்த்திகளையும் அஷ்டதிக் பாலர்களையும் போற்றித் தொழுதான். நெடுங்காலம் இன்புற வாழ்ந்து, மறு ஜென்மத்திலும் உபபர்ஹணனையே கணவனாக அடைய வேண்டும் என்று வேண்டியபடி, புஷ்கர ஹோம குண்டத்தில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள் பத்தினி மாலாவதி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar