Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தெய்வம் கூட உருகிப்போகும் தந்தையின் அன்பின் முன்னே!
 
பக்தி கதைகள்
தெய்வம் கூட உருகிப்போகும் தந்தையின் அன்பின் முன்னே!

திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜன் நல்லாட்சி புரிந்து வந்தான். தங்களுக்கு பிள்ளை இல்லாததை எண்ணி அவன் மனைவியர் மல்லமாதேவி, சல்லமாதேவி வருந்தினர். ஒருநாள் சிவனடியார் ஒருவர் வந்தார். உபசரித்த வல்லாளனிடம், மன்னா! எனக்கு பணிவிடை செய்ய ஒரு பெண் தேவை, என்றார். இதைக் கேட்ட சல்லமாதேவி,மன்னா! நானே பணிப்பெண்ணாகப் போகிறேன், என்றாள்.  மன்னன் அமைதி காத்தான். அன்றிரவு அடியவர் அரண்மனையில் தங்கினார். பணிப்பெண்ணாக இருந்த சல்லமாதேவி அடியவரின் திருவடிகளைப் பிடித்து விட முயன்றாள். ஆனால், அடியவர் மாயமாய் மறைந்து, குழந்தையாக மாறினார். சல்லமாதேவி வியந்து கத்தினாள். வல்லாளன் அங்கு வந்து குழந்தையை அள்ளி எடுத்து மகிழ்ந்தான். ஆனால், குழந்தையும் நொடிப்பொழுதில் மறைந்து போனது. அப்போது, மன்னா! உன் குறை தீர நானே அடியாராகவும், குழந்தையாகவும் காட்சியளித்தேன், என்று அண்ணாமலையாரின் வாக்கு அசரீரியாக ஒலித்தது.

சிவனே குழந்தையாக வந்தும், அதை கொஞ்சி மகிழும் பாக்கியம் இல்லாமல் போனதே, என மன்னன் வருந்தினான்.  உடனே சிவன், மன்னன் சாப்பிடும் நேரத்தில் குழந்தையாக வந்து தோளில் விளையாடியும், கையால் உணவைப் பிசைந்தும் பல வித திருவிளையாடல்களைப் புரிந்து வந்தார்.  ஒருநாள் சிவன் குழந்தையாக விளையாடி மறைந்தார். அப்போது கைகூப்பிய படி,அண்ணாமலையாருக்கு அரோஹரா என்று கூவியழைத்த மன்னனின் உயிர் பிரிந்தது. (வல்லாள மகாராஜாவை எதிரிகள் போரில் வஞ்சகமாகக் கொன்றதாகவும் ஒரு தகவல் உண்டு) அந்தக்கால வழக்கப்படி, மன்னரின் இறப்புச் செய்தி ஓலை, அண்ணாமலையாரின் முன் வாசிக்கப்பட்டது.  அப்போது அப்பா என்ற குரல் ஒலிக்க, ஒளிமயமான குழந்தை வடிவில் சிவன் ஓட்டமும், நடையுமாக கோபுர வாசல் வழியாக அரண்மனையைச் சென்றடைந்தார். ஈமச்சடங்குகளைத் தானே முன்னின்று நடத்தினார். ஜோதி வடிவாகி வானில் மறைந்தார். அண்ணாமலையாரே ஈமச்சடங்கு செய்ய வந்ததைக் கண்ட மக்கள் பரவசம் கொண்டனர்.  அதன்படி, இப்போதும் மாசிமகத்தன்று சம்பந்தனுõர்( தற்போது பள்ளி கொண்டாப்பட்டு) என்னுமிடத்தில் வல்லாள மகாராஜாவுக்கு, அண்ணாமலையார் சிராத்தம் செய்து வருகிறார். இது ஒரு விழாவாக நடத்தப்படுகிறது. காரைக்காலம்மையாரை அம்மா என்றும், வல்லாள மகாராஜாவை அப்பா என்றும் அழைத்த சிவன் நேரில் வந்த மாசிமக நாளில் (நாளை) நாமும் வணங்கும் பேறு பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar