Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஓகவதி!
 
பக்தி கதைகள்
ஓகவதி!

இஷ்வாகு வம்சத்தில் உதித்த அம்பரீஷனின் பேரன் ஹரிதன். அவன் காலத்தில் பாதாள லோகத்தில் மௌனேயர் என்ற ஆறுகோடி கந்தர்வர்கள் வாழ்ந்தனர். அவர்கள் நாகர்களின் ஆட்சியையும், பொக்கிஷத்தையும் கவர்ந்து கொண்டனர். நாகர்கள் ஸ்ரீமந் நாராயணரிடம் தஞ்சம் புகுந்தனர். அவர் மாந்தாதாவின் புதல்வனான புருகுச்சனுக்கு நாகர்களின் சகோதரியான நர்மதையை மணமுடித்து உறவை பலப்படுத்தி இழந்ததை மீட்குமாறு கூறினார். நாகர்கள் அவர் கூறியபடியே நடக்க, உறவினர்களுக்காக புருகுச்சன் கந்தர்வர்களுடன் யுத்தம் புரிந்து, வென்று நாகர்களின் சொத்தை மீட்டுக் கொடுத்தான். நர்மதையின் பெயரை உச்சரித்தால் சர்ப்ப பயம் ஏற்படாது என்ற வரத்தை நாகர்கள் அளித்தனர். புருகுச்சன்- நர்மதை தம்பதியருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு சுதர்சனை எனப் பெயர் சூட்டினர். சுதர்சனை பருவமெய்தினாள். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்த அக்னி, அவளை மணக்க விரும்புவதாகச் சொன்னான். புருகுச்சன் மனம் மகிழ்ந்து, அக்னி-சுதர்சனை விவாகத்தைக் கோலாகலமாக நடத்தினான். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை சுதர்ஸனன். வேதங்களைப் பூரணமாகப் படித்தான்.

ஓகவான் என்ற வேந்தனின் குமாரியான ஓகவதியை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். சுதர்சனன் மனைவியிடம் யார் எதைக் கேட்டாலும் இல்லையெனாமல் வழங்கும் தருமமே நாம் இறந்த பின்பும் கூடவரும். இச்செயலில் நீ எனக்கு உறுதுணையாயிருக்க வேண்டும். அதிதியை அவமதித்த கணத்திலிருந்து நீ என் தர்மபத்தினி என்ற பதவியை இழப்பாய் எனக் கூறி விட்டான். ஓகவதியும் கணவன் சொல்படி அறம் தழுவி வாழ்ந்தாள். வாழ்க்கையில் மிக அதிகமாக எதிர்ப்படும் நிகழ்வு இது. தினமும் கோயிலுக்குப்போவது என்று தீர்மானித்தால், போக முடியாத சந்தர்ப்பம் வரும். ஒரு பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்று தீர்மானித்தால், அதை விட முடியாத நெருக்கடிகள் ஏற்படும். அதையும் மீறித்தான் அதே உறுதியைப் பின்பற்ற வேண்டும். அந்த வைராக்யம் நிச்சயமாக சோதனைக்கு உள்ளாகும். அப்படித்தான் ஆயிற்று ஓகவதிக்கும். இங்கே சோதிக்க வந்தவன் தர்மதேவன்.

ஒருநாள் சமித்துகள் சேகரிக்க சுதர்சனன் வெளியே சென்றிருந்த நேரம். தர்மதேவன் அழகிய யௌவன புருஷனாய் வந்து பசியென்று அவள் வீட்டு முன் நின்றான். உணவிட முன் வந்த ஓகவதியிடம் அவன் மோஹம் கொண்டான். ஓகவதி திகைத்தாள்; அறிவுரை சொன்னாள். வீண் பேச்சு வேண்டாம். எனக்கு நீதான் வேண்டும். முடியாதென்றால் நான் கிளம்புகிறேன் என்றான் தர்மவேன். கணவனின் சொல்லா? பெண்மையின் மேன்மையா? போராடியது மனம். சரி; இவன் தீண்டட்டும்; அதோடு இந்தத் தேகத்தை தீய்த்துக் கொள்கிறேன் என்றும் உறுதியானாள் ஓகவதி. அதேசமயம் பர்ணசாலை திரும்பிய சுதர்சனன் ஓகவதி, கால் கழுவ நீர் எடுத்து வா என்றான். ஓகவதி வாலிபனைப் பார்த்தாள். தருமதேவன், சுதர்சனா, விருந்தினனாக வந்த நான் பொன், பொருளை விடுத்து உன் மனைவியை யாசித்தேன். அவளும் ஈந்து விட்டாள். அவ்வாறிருக்க உன் ஏவலை அவள் எவ்வாறு ஏற்பாள்? என்று குரல் கொடுத்தான் உள்ளிருந்தவாறு! சுதர்சனன் அப்படியா? அது தெரியாது. என் பிழையைப் பொறுக்க வேண்டும் என்றான் சுதர்சனன். மறுகணம் தர்மதேவன் சுய வடிவுடன் வெளியே வந்தான். ஓகவதி, பதி சொல்தாண்டாத உன் வாக்கு இனி பலிக்கும். வாழ்க்கை நிறைவுற்றதும் நீ நதியாக ஓடி, மானிடரின் பாபத்தைப் போக்குவாய் என அருளி மறைந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar