Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மீன் பெற்ற மான்!
 
பக்தி கதைகள்
மீன் பெற்ற மான்!

ஒருமுறை மதங்கமகரிஷி யமுனையில் நீராடிக் கொண்டுஇருந்தார். அங்கே புஞ்ஜிகஸ்தலை என்னும் தேவலோகப் பெண்ணும் நீராட வந்தாள். நீரில் மூழ்கியபடியேகுறும்புடன் மகரிஷியின் காலைப் பிடித்து இழுத்தாள். கோபித்த முனிவர், நீரில் மூழ்கி வந்து என் காலை இழுத்த நீ மீனாகக் கடவது, என சபித்தார்.அதன்படி புஞ்ஜிகஸ்தலை மீனாக யமுனை நதியில் வாழ்ந்தாள்.அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்தனர். யமுனை நதியில் வாழ்ந்த புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்ற அவள், விண்ணுலகம் அடைந்தாள். மீனுக்குப் பிறந்த ஆணுக்கு ஏகவீரன் என்றும், பெண்ணுக்கு சபரி என்றும் மதங்கர்பெயரிட்டார். ஆண் குழந்தையை உபரிசரன் என்னும் மன்னனிடமும், பெண் குழந்தையை மீனவர் ஒருவரிடமும் ஒப்படைத்தார். சபரி வளர்ந்துபெரியவளாகி, மதங்கரிடமே சிஷ்யையாக இருந்தாள்.தவ வாழ்வில் ஈடுபட்டாள்.பம்பா நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து மதங்கரிஷி சீடர்களுடன்தங்கினார். சபரியின் தவ மேன்மையைக் கண்ட மதங்கர்ஸ்ரீராம ஷடக்ஷரீ என்னும் மகாமந்திரத்தைஅவளுக்கு உபதேசித்தார். அதை பக்தியுடன் ஜெபித்த சபரிக்கு, கனவில் ராமதரிசனம் கிடைத்தது. அவளுக்கு நேரில் தரிசனம் தர விரும்பிய ராமர், மதங்கரின்ஆஸ்ரமத்திற்கு வந்தார். குருபக்தி, அடக்கம், வைராக்கியம் கொண்ட சபரியை ஆசிர்வதித்தார். ராமருக்காக சபரி சுவையுள்ள இலந்தைப் பழங்களை சேகரித்து வைத்திருந்தாள். அவற்றை ராமரிடம் அளித்தாள். அவற்றில் சில காய்ந்துபோயிருந்தன. அதைப் பொருட்படுத்தாத ராமர், அவள் அன்போடு தந்ததால் அதை ஏற்றார்.உன்னைப் போல் தவவாழ்வில் ஈடுபட்ட பெண்ணை இந்த உலகமே கண்டதில்லை. குருவுக்கு பணிவிடைசெய்ததால் இந்த பிறவியை பயனுள்ளதாக்கி விட்டாய். என்னையும் பக்தியுடன் பூஜித்ததால் விரும்பியஉலகத்தை அடைவாய், என்றார்.  அவள் தங்கியிருந்த மலைக்கு அவளது பெயர் சூட்டப்பட்டது. தர்மசாஸ்தா அருள்பாலிக்கும் சபரிமலையே அது. மீனுக்குப் பிறந்தாலும், பக்தி மானாக வாழ்ந்த சபரியைப் போல நல்வாழ்வு பெற முயல்வோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar