Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுமப்பதில் சுகம்!
 
பக்தி கதைகள்
சுமப்பதில் சுகம்!

மேற்கு வங்காளத்திலுள்ள பர்சிங்கா என்னும் கிராமத்தில் ரயில் நின்றது. அதிலிருந்து கோட்டும், சூட்டும் அணிந்த இளைஞன் ஒருவன் இறங்கினான். அவனுடைய சூட்கேஸ், படுக்கையை ரயிலில் இருந்து இறக்க கூலியாளைத் தேடினான். கூலி! கூலி! என்று கத்தினான். யாரையும் காணவில்லை. ரயில் கிளம்புவதற்குள் சுமையை இறக்க வேண்டுமே! என்ன செய்வது? என பரபரத்துக் கொண்டிருந்தான்.அப்போது வேட்டியும், துண்டும் அணிந்த ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். சுமையைரயிலில் இருந்து இறக்கி வைத்தார்.என்னப்பா இது! எவ்வளவு நேரமா கூலி! கூலி!ன்னு கத்துறேன்? மெதுவா வர்றியே! சரி...சரி..இதை எடுத்துகிட்டு புறப்படு என்று வெறுப்பும் அதிகாரமும் கலந்து பேசினான் இளைஞன். அவரும் துõக்கிக் கொண்டு நடந்தார். வீட்டை அடைந்ததும் இளைஞன் சில்லரை எடுக்க பைக்குள் கையை விட்டான்.கூலி வேண்டாம் என்றவர் சுமையை இறக்கி விட்டு திரும்பினார். அப்போது இளைஞனின் சகோதரரர் வெளியே வந்தார். தம்பி! என்ன காரியம் பண்ணுனே? இவர் தான் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். மிகப்பெரிய கல்வியாளர். இவரைப் போய் சுமை துõக்க வச்சிட்டியே! என்றார் வருத்தத்துடன். ஐயா! என்னை மன்னியுங்கள் என்று உருகி நின்றான் இளைஞன்.அப்போது அவர், நம்முடைய வேலையை நாமே செய்வதில் அவமானம் கிடையாது. ஏமாற்றிப் பிழைப்பது தான் கேவலம். உழைப்பில் உண்டாகும் சுகத்திற்கு இணை ஏதுமில்லை, என்று அறிவுறுத்தி விட்டு நடந்தார்.கல்லுõரிப் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பொதுப்பணி செய்வதற்காக தனது பணியை விட நேர்ந்தது. இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நண்பர்கள் கேட்டனர். தெருத்தெருவாய் காய்கறி விற்று கிடைக்கும் சொற்ப காசு எனக்கு போதும். பணத்தை விட பொதுப்பணியே பெரிது, என்றார் வித்யாசாகர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar