Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடலில் நடந்த கல்யாணம்!
 
பக்தி கதைகள்
கடலில் நடந்த கல்யாணம்!

கோசல நாட்டை ஆண்டு வந்த அஜமகாராஜனின் மகன் தசரதன். வடகோசலத்து மன்னன் மகளான கவுசல்யாவை தசரதனுக்கு மணம் பேசி முடிக்கின்றனர். திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு இச்செய்தி எட்டுகிறது. நல்லதோ..... கெட்டதோ நான் இல்லாமல் எப்படி? என்ற முடிவுக்கு வந்த நாரதர், இத்திருமணச் செய்தியை யாரிடம் டோட்டுக் கொடுத்தால் (கலகம் செய்தால்) தனக்கு ஏதேனும் துப்புத் துலங்கும் என்று எண்ணினார். வான் வழியே பயணித்த போது இலங்கை மன்னன் ராவணனின் மணி மண்டபத்தில் பலர் அவலக் குரல் எழுப்பிடும் சப்தத்தைச் செவிமடுத்தார் நாரதர். அது என்னவென்று பார்த்து வர கீழே இறங்கினார். மூலவுலகையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ராவணேஸ்வரன், நவகிரகங்களையும் படிக்கட்டுகளாக மாற்றியமைத்துள்ளதை அறிந்தார். இங்கேயே நமது முதல் வேலை துவங்கட்டுமே என்று முடிவு செய்து, மெல்ல மெல்ல சூரியன், சந்திரன் முதலான நவகிரகங்களிடம் சென்று குசலம் விசாரித்தார். அங்கே சனி பகவானும் இருந்ததைக் கண்டவர், சனீஸ்வரா! உனக்குமா இந்தக் கதி? உன் பார்வையின் சக்தியினால் நீ யாரையும் அழிக்கலாமே! என்றார்.

எங்களைத் குப்புப்படுக்க வைத்து விட்டானே அந்த ராவணன். அப்படியிருக்க எப்படி என் பார்வை ராவணன் மீது படியும்? ஓஹோ அப்படியா! சரி, சரி நான் ஏதாவது செய்கிறேன், பயப்படாதீர்கள்! என்று நாரதர் சொல்லிக் கொண்டிருந்தபோதே அங்கே ராவணன் வந்து விட்டான். முனிவர் பெருமானே வருக! வருக! பார்த்தீர்களா எனது பராக்ரமத்தை! நவகிரகங்களுமே இன்று எனக்கு அடிமைப் பட்டுக்கிடக்கின்றனர்! என்றான். சற்றே யோசித்த நாரதர், ராவணேஸ்வரா! உன் பராக்ரமம் நான் அறியாததா? ஆனாலும் இந்த பாவப்பட்ட நவகிரகங்களை குப்புறப்படுக்க வைத்து முதுகில் நிற்பதை விட, அவர்களை நிமிர்த்திப் போட்டு அவர்கள் மார்பில் கால் வைப்பதுதானே உன் வீரத்திற்கு அழகு! என்õர். நாரதர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த ராவணன், ஆமாம் நாரதரே! நீர் சொல்வதுதான் சரி! அப்படியே செய்கிறேன். ஹே நவகிரகங்களே! எல்லாரும் இப்பாதே நிமிர்ந்து படுக்க வேண்டும் என்று ஆணையிடுகிறேன்! என்றான். அப்படியே எல்லாரும் படுத்தபோது, சனி பகவானின் நேர் பார்வை ராவணன் மீது விழுந்தது. அது முதற்கொண்டு ராவணனின் வாழ்வு இறங்குமுகமானது.

தனது அடுத்த கலகத்தையும் அங்கேயே துவங்கினார் நாரதர். ராவணேஸ்வரா! உனக்கு ஒரு செய்தி தெரியுமோ? தசரதனுக்கும் கவுசல்யாவுக்கு திருமணமாம். அவர்கள வயிற்றில் உதிக்கும் ராமபிரான் கையினால்தான் உனக்கு முடிவு காலம் என்று தேவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். மனம் கேட்கவில்லை. அதனால் உன்னிடம் சொன்னேன். நீ என்ன செய்ய போகிறாய்? என்று ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். சற்றே கலங்கிய ராவணன், சுதாரித்துக் கொண்டு, அப்படியா செய்தி? அந்தத் திருமணம் நடந்தால்தானே குழந்தை பிறந்து, வளர்ந்து என்னை எதிர்த்துப் போராட! நானே சென்று அத்திருமணத்தை நிறுத்தி விடுகிறேன் பாருங்கள்! என்றபோது, அதைச் செய் முதலில்! என்று சொல்லிட்டு, நாராயண... நாராயண என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டுச் சென்றார் நாரதர். அதே சமயம் நேராக அஜமகாராஜனிடமும் சென்ற நாரதர், ராவணனால் ஏற்படவிருக்கும் அராஜகம் பற்றியும் தெரிவித்துவிட்டார். இதைக் கேட்டவுடன் அஜமகாராஜன் தெளிவடைந்து, தசரதன்- கவுசல்யாவின் திருமணத்தை நடுக்கடலில் கப்பல்களை நிறுத்தி, அதிலேயே நடந்திடவும் ஏற்பாடு செய்துவிட்டார். அயோத்திக்கு வந்திறங்கிய ராவணன், நகர் முழுவதும் தேடியும் அத்தகைய திருமண்ம எதுவும் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததைக் கண்டதும், பாவம் பயந்து ஓடிவிட்டார்கள்! என்று கர்ஜித்தபடியே கைலாய மலை நோக்கிப் பயணமானபோது நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நிற்பதைக் கண்டான். அங்கே சென்றான். ஒரு கப்பலில் கவுசல்யா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவள் அழகில் மயங்கி, அவளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, கடலுக்குள் இருந்த ஒரு பெரிய திமிங்கலத்திடம் கொடுத்து இலங்கைக்குக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுச் சென்றான்.

வாயில் ஒரு பெரிய பெட்டியுடன் திமிங்கலம் வருவதைக் கண்ட மற்றொரு திமிங்கலம் அதனுடன் போரிட ஆயத்தமானது. பெட்டியை கடலுக்கு நடுவில் இருந்த சிறு குன்றின் மீது கொண்டுபோய் வைத்துவிட்டு சண்டை போட ஆரம்பித்தது அந்தத் திமிங்கலம். இதற்கிடையில் இன்னொரு கப்பலில் இருந்த தசரதன் இவ்விஷயத்தை அறிகிறான். தன்னுடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் குன்றை அடைந்து, பெட்டியில் இருந்த கவுசல்யாவை மீட்டுகிறான். உடனே அந்தக் குன்றிலேயே தசரதன்- கவுசல்யா திருமணத்தை நடத்தி முடிக்கிறார் அஜமகாராஜன். பின்னர் மண மாலைகளுடன் இருவரையும் அதே பெட்டிக்குள் வைத்து விட்டு பழையபடி தங்கள் கப்பலுக்கே சென்றுவிடுகின்றனர். மற்றொரு திமிங்கலத்துடனான சண்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு குன்றின்மீது வைத்திருந்த பெட்டியை வாயில் கவ்விக் கொண்டு இலங்கைக்குச் சென்று ராவணனிடம் அதை ஒப்படைக்கிறது திமிங்கலம். அதே சமயம் அங்கே நாரதரும் ஆஜரானார். வாருங்கள், நாரதரே! உங்கள் உதவிக்கு மிக்க நன்றி! தசரதன் திருமணம் இனி நடக்காது என்பது தெரியுமா? என்றான் ராவணன்.

அதெப்படி? என்று நாரதர் கேட்டபோது, நான் மணப்பெண்ணை இந்தப் பெட்டியில் வைத்து தூக்கி வந்துவிட்டேனே! ÷வ்ணடுமென்றால் நீங்களே பாருங்கள்! என்று அவர் முன்பாக பெட்டியைத் திறந்து காட்ட, அதில் மணக்கோலத்தில் தசரதவும் கவுசல்யாவும் இருந்ததைக் கண்டான். இதென்ன மாயம்! என்று அதிர்ந்தவன், சரி... இருவரையுமே தீர்த்துக் கட்டி விட்டால் எந்த பிரச்னையும் இல்லை! என்று சொல்லிக் கொண்டே தனது உடைவாளை உருவினான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மண்டோதரி, குறுக்கே வந்து நின்று தன் கணவனின் செயலைத் தடுத்து நிறுத்தினாள். வேண்டாம் பிரபு! புதுமணத் தம்பதிகளைக் கொல்வது பாவம். முன்பு தூணிலிருந்து புறப்பட்டு வந்து இரண்யனை சம்ஹாரம் செய்ததுபோல் இவள் வயிற்றிலிருந்து திருமால் வெளிப்பட்டால் உங்களுக்கே ஆபத்து! என்று கூறினாள். சற்றே யோசித்த ராவணன், சரி சரி பிழைத்துப் போங்கள்! என்று சொல்லி, இருவரையும் அயோத்திக்கு அனுப்பிவிட்டான். தான் வந்த காரியம் முடிந்ததை அறிந்த நாரதரும், நாராயண நாராயண என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar