Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பைத் தேடி...!
 
பக்தி கதைகள்
அன்பைத் தேடி...!

ஜபல்பூரில் தேவநந்தன் என்ற இறைச்சி வியாபாரி இருந்தார். ஆடுகளை வெட்டும் போது கடவுள் பெயரை சொல்லி வெட்டுவார். மிஞ்சும் இறைச்சியை ஏழைகளுக்குக் கொடுப்பார். காலப்போக்கில், ஆடுகளைக் கொல்வது பாவம் என தோன்றியதால், அதைக் கை விடும் முடிவுக்கு வந்தார். ஆனால், வேறு தொழில் தெரியாத அவர், மற்ற வியாபாரிகளிடம், இறைச்சியை விலைக்கு வாங்கி, அதை விற்றுசம்பாதித்தார். இறைச்சியை எடை போட ஒரு கல்லை பயன்படுத்தினார். அந்தக் கல் பெருமாளின் அம்சமான சாளக்கிராம வகையைச் சேர்ந்தது. ஆனால், தேவநந்தனுக்கு இது தெரியாது. தினமும் காலையில் தராசையும், கல்லையும் நீரில் கழுவுவார்.ஒருநாள், அவரது கடை வழியாகச் சென்ற அந்தணர், தராசில் இருந்த சாளக்கிராமத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி,  இது விஷ்ணுவின் அம்சமான சாளக்கிராம கல்லாச்சே! தெய்வீகமான இந்த கல்லை  மாமிசம் எடை போடபயன்படுத்துவது பெரும்பாவம் அல்லவா?, என்றார்.ஐயா! இது சாமி கல்லுன்னு எனக்குத் தெரியாதே!. தெரிந்திருந்தால் இந்த தவறை செய்திருக்க மாட்டேன் என்று பதறினார் வியாபாரி.

அந்தணரும், மாமிசம் விற்கும் உனக்கு இது தெரியாமப் போனது நியாயம் தான். இதற்கு, தினமும் அபிஷேகம் செய்து, சந்தனம் இட்டு, துளசியால் அர்ச்சனை செய்யணும். இதெல்லாம் உன்னால் முடியாது. அதனால், என்னிடம் கொடுத்து விடு, என்றார்.வியாபாரியும் கல்லைக் காடுத்து விட்டார். அந்தணரும் சாளக்கிராம கல்லுக்கு பூஜையை முறையாகச் செய்தார். ஆனால், சாளக்கிராம கல்லில் இருந்தபெருமாளுக்கு,அந்த வீட்டில் இருக்கப்பிடிக்கவில்லை. அந்தணர் கனவில் தோன்றிய பெருமாள்,என்னை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? அந்தக் கசாப்புக் கடைக்காரன் எப்போதும் கிருஷ்ணா, கண்ணா, கோவிந்தா, கோபாலா என்று என் திருநாமங்களைச் சொல்லியபடி இருப்பான். வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசி அவர்களுக்குஉதவி செய்வான். அவர்களிடமும் என் லீலைகளைப் பெருமையாக எடுத்துச் சொல்வான். அந்த கசாப்புக் கடைக்காரனிடமே என்னைச் சேர்த்து விட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், என்றார். எந்த தொழில் செய்தாலும், பக்தி செய்யும் நல்லவரையே பெருமாள் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறார் என்பதை உணர்ந்த அந்தணர், சாளக்கிராம கல்லை கசாப்புக் கடைக்காரரிடமே கொண்டுபோய் சேர்த்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar