Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உண்மைக்கு விலையில்லை!
 
பக்தி கதைகள்
உண்மைக்கு விலையில்லை!

காடம் என்ற இளைஞன் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டான். அவன் வாழ்ந்த ஊருக்கு வந்த ஞானி, மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். என்ன தான் இவர் சொல்கிறார் என்ற ஆர்வத்தில் திருடனும் கோயிலுக்குப் போனான். அவருடைய பேச்சில் மனதைப் பறி கொடுத்தான். தினமும் இதை வழக்கமாக்கினான். ஒருநாள் ஞானி திருடனிடம், நல்ல விஷயத்தை நாளும்கேட்கிறாயே. நீ திருடலாமா? தப்பு இல்லையா? என்று கேட்டார்.எப்படி சுவாமி!என்னால் விட முடியும்? வேறெதும் செய்து பிழைக்கத் தெரியாதே என்றான். உள்ளதை அப்படியே ஒளிக்காத திருடனைக் கண்டு ஞானி சிரித்தார். சரி... நீ திருட்டை விட வேண்டாம். எப்போதும் உண்மை பேசு. தினமும் கோயில் வழிபாடு செய், என்று கேட்டுக் கொண்டார். திருடனும், சரி சாமி!உங்கள் சொல்லுக்குகட்டுப்படுறேன் என்றான் பணிவுடன்.ஞானி அந்த ஊரை விட்டுக் கிளம்பினார். சிறிது நாள்கடந்ததும், திருடனுக்கு ஆள் அனுப்பி, தான் தங்கியிருக்கும் ஊரில் நடக்கும் கோயில்விழாவிற்கு வரும்படி அழைத்தார்.திருடன் மனதிற்குள்,அந்த மகான் இருக்கிற ஊர் ரொம்ப துõரமாச்சே. உடனே போகணும்னா அரண்மனை லாயத்தில உள்ள குதிரையைக் கிளப்பிக்கிட்டுப் போறது தான் வழி என்று முடிவுகட்டினான். லாயத்திற்குள் அவன் நுழைந்த போது காவலாளிகள், ஏய்! யார் நீ? என்றுசப்தமிட்டனர்.

ஞானியிடம் கொடுத்த வாக்கை மீற விரும்பாமல்,நான் ஒரு திருடன். குதிரையைத் திருடிப் போக வந்தேன் என்று உள்ளதைச் சொன்னான்.திருட வந்தவன்எவனாவது இப்படி சொல்வானா? இவன்தொழிலுக்குப் புதுசு போல என்று சொல்லி காவலாளிகள் தங்களுக்குள் சிரித்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன்குதிரை மீதேறி வேகமாகப் புறப்பட்டான்.செல்லும் வழியில் இருந்த கோயிலிலில் பூஜை மணி ஒலித்தது. ஞானியின்கட்டளைப்படி வழிபாடு செய்ய உள்ளே சென்றான்.குதிரையைத் தேடி வந்த காவலாளிகள் கோயில்வாசலில் குதிரை நிற்பதைக் கண்டனர்.  காவலாளிகள் குதிரையை நெருங்குவதற்கும், திருடன் அங்கு வருவதற்கும்சரியாக இருந்தது. அவர்களிடம்திருடன், என்னை மன்னியுங்கள்.என் குருநாதரின் கட்டளைப்படிஅவரைக் காணச் செல்கிறேன்.அவரைத் தரிசித்ததும், உங்களோடு வந்துவிடுகிறேன். அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டினான்.உள்ளதை மறைக்காததிருடனின் பேச்சில் நம்பிக்கை கொண்ட காவலாளிகளும் சம்மதித்தனர்.அதன்படியே எல்லோருமாக குருவிடம் சென்று விட்டு, மன்னரைக் காண வந்தனர். நடந்தது அனைத்தையும் மன்னரிடம் தெரிவித்தனர். உண்மைக்கு மதிப்பு தரும்திருடனைத் தண்டிக்க அவர் விரும்பவில்லை. மாறாக,திருடனுக்கு உதவவிரும்புவதாகத் தெரிவித்தார். திருடனும் மன்னரிடம், அரசே! இந்த குதிரையை எனக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று சொல்லி பெற்றுக் கொண்டான். விலை மதிப்பு இல்லாத உண்மையின் மேன்மை கண்ட திருடன் மனம் மாறினான்.திருடுவதைக் கை விட்டு வேலைக்குச் செல்லமுடிவெடுத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar