Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனுமனின் பார்வை!
 
பக்தி கதைகள்
அனுமனின் பார்வை!

சமர்த்த ராமதாசர் ராமாயணம் எழுதிக் கொண்டே தனது சிஷ்யர்களுக்கு விளக்கமும் சொல்லி வந்தார். ராமாயணம் படிக்கும் இடங்களில் அனுமனும் அமர்ந்து கைகூப்பி கேட்டு மகிழ்வான் என்பது அனைவரும் அறிந்ததே, அவ்வாறு ராமதாசர் படித்து வருங்கால், எவர்க்கும் தெரியாமல் அதைக் கேட்டு மகிழ்ந்தான் அனுமன். ஒரு கட்டத்தில் ராமதாசர், அனுமன் அசோக வனத்தை அடைந்தபோது அங்கு வெண்ணிற மலர்கள் பலவற்றைக் கண்டான். எனப் படித்தார். இதைக் கேட்ட அனுமன், நேரில் வந்து, ஐயா, நான் கண்டது அனைத்தும் சிவப்பு மலர்கள்! தாங்கள் எழுதிப்படித்து வருவதைத் திருத்திக் கொள்ளுங்கள் என்றான். இதைக் கேட்ட ராமதாசர், நான் எழுதியிருப்பது சரியே எனக் கூறினார். அனுமனோ, நான் நேரில் சென்றவன். அங்கு நான் கண்ட மலர்கள் சிவப்பாக இருக்க, நீங்கள் எவ்வாறு வெள்ளை மலர்கள் என்று எழுதலாம். எனச் சற்று உரத்த குரலில் ஆட்சேபித்தார். முடிவில், இவ்வழக்கு ராமரிடம் சென்றது. ஸ்ரீராமர் அனுமனை விளித்து, ராமதாசர் படித்தவை அனைத்தும் உண்மையே! அசோகவனத்தில் நீ கண்ட மலர்கள் யாவும் வெண்மைதான். ஆனால், அப்போது உனது கண்கள் இரண்டும் கோபத்தால் சிவந்து காணப்பட்டன. அதனால் பூக்களின் நிறமும் உனக்கு சிவப்பாகவே தெரிந்தது. நாம் உலகை எந்த நோக்கத்தில் பார்க்கிறோமோ அப்படியே அது நமக்குத் தோற்றமளிக்கும். எனவே தான் யாவற்றிலும் சமநோக்குப் பார்வை வேண்டும். எனப் பெரியோர்கள் கூறியுள்ளனர். என விளக்கமளித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar