Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வந்தார் செல்வத் திருமகன்!
 
பக்தி கதைகள்
வந்தார் செல்வத் திருமகன்!

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். இவ்வேளையில் பூலோகத்தில்கலியுகம் தொடங்கியது.அநியாயங்கள் பெருகின. மீண்டும் பூமியில் அவதாரம் செய்ய வேண்டுமென திருமாலை வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்திக்குதருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். அங்கு சயனத்தில் இருந்த மகாவிஷ்ணு, பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் நடிக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். அப்போதும், திருமால் முனிவர் மீது கோபப்படவில்லை. மேலும், உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். திருமாலின் மார்பில் தான் மகாலட்சுமி குடியிருக்கிறாள். தன்னை உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி அவள்திருமாலிடம் சொல்லியும், அவர் மறுத்துவிட்டார். பொறுமை நிறைந்த திருமாலுக்கே யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.தன்னை உதைத்தும்நடவடிக்கை எடுக்காத திருமால் மீது வருத்தம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்து விட்டாள். சுவாமியும், அவளை தேடி மனித வடிவில் பூலோகம் வந்தார். பல தலங்களுக்கும் சென்றவர், வேங்கடமலைக்கு (திருப்பதி) வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார்.

அவருக்கு பசி ஏற்பட்டது.இதையறிந்த நாரதர்,மகாலட்சுமியிடம் சென்றுசுவாமியின் நிலை பற்றி கூறினார். மேலும், திருமாலின் பசியை போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார், அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் அவற்றை விற்கச் சென்றாள். மன்னனும் அவற்றை வாங்கிக் கொண்டான். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று திருமாலின் வாயில் பால் சொரிந்தது. பசுவை மேய்த்த இடையன் இதைக் கண்டான். தன் கோடரியால் பசுவை துரத்த முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், அங்கிருந்த வராக மூர்த்தி ஆஸ்ரமத்திற்கு சென்றார்.அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் வளர்ப்பு அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக்கண்டவுடன் பாசம் கொண்டாள். திருமாலும் அவளை அம்மா என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளையை ஸ்ரீனிவாசா (செல்வம் பொருந்தியவர்) என்று அழைத்தாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசி தீர கனிகளைத் தந்தாள். அந்நாளில், சந்திரகிரி என்ற பகுதியை ஆகாசராஜன்என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்குபத்மாவதி என்று பெயரிட்டு வளர்த்தான். அவளைஸ்ரீனிவாசர் மணந்து கொண்டார். கலியுகம் முடியும் வரை, தன் தேவியை மார்பில் தாங்கி சிலை வடிவாக வேங்கட மலையிலேயே தங்க முடிவு செய்தார். அந்தச் செல்வத்திருமகன் இன்று வரை திருப்பதி திருமலையில் தங்கியிருக்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar