Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவிழ்த்த கூந்தலில் ஆண்டவன்!
 
பக்தி கதைகள்
அவிழ்த்த கூந்தலில் ஆண்டவன்!

பாண்டவர்களின் மனைவி திரவுபதி. இவள் ராதையையும், மீராவையும் விட கிருஷ்ணரின் மீது அதிக பாசமும் பக்தியும் கொண்டவள். அதனால் தான் கவுரவர் அவையில், இவள் சபையோர் முன்பு வஸ்திராபஹரணம் செய்யப்பட்ட போது, கண்ணன் வந்து காப்பாற்றினான். பீஷ்மர், துரோணர், விதுரர் போன்ற மகாத்மாக்களெல்லாம் கூடியிருந்தும் கூட, அவர்கள் தர்மத்தை மீறி கண்டும் காணாததும் போல் நடந்து கொண்டனர். நீதியை எடுத்துச் சொன்னார்களே ஒழிய, செஞ்சோற்றுக்கடன் என்ற வெற்றுகோஷத்தின் பெயரால், அவளைக் காப்பாற்ற முன்வரவில்லை. அப்போது, அவள் கோபாலகிருஷ்ணா, கோவிந்தா, புண்டரீகாக்ஷா (தாமரைக்கண்ணன்) என கூவியழைத்தாள். அப்போதே, பகவான் அவள் முன்பு தோன்றி உடை கொடுத்துக் காப்பாற்றினார். தன்னை அவமானப்படுத்தியவர்கள் போர்க்களத்தில் ரத்தம் சிந்தி சாகவேண்டும். அப்போது தான் என் கூந்தலை முடிப்பேன் என சபதமெடுத்தாள். பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்ற பிறகு, தன் சபதப்படி கூந்தலை அள்ளி முடிய வேண்டிய நேரம் வந்தது. ஆனால், நீண்டநாளாக எண்ணெய் தடவாததாலும், வாசனாதி திரவியங்கள் பூசாததாலும் அவளது கூந்தல் சிக்காகிப் போய் விட்டது. இந்நேரத்தில் கிருஷ்ணரின் அரண்மனையில் ருக்மணியும், சத்யபாமாவும் தங்கள் கணவருடன் பேசிக்கொண்டிருந்தனர். பதினெட்டு நாட்களாக போர்க்களத்திலேயே இருந்து விட்டீர்கள். பாசறையே கதியென கிடந்தீர்கள். இப்போது வீட்டுக்கும் வந்த பிறகும், ஏதோ சிந்தனையில் இருக்கிறீர்கள் ! என்றனர்.  பகவான் சிரித்தார். அன்புத்துணைவியரே! நான் என் சகோதரி திரவுபதியை நினைத்துக் கொண்டிருந்தேன். அவளது பக்தி மிக மிக உயர்ந்தது.

அதனால், அவளுக்கு நான் பல சமயங்களில் உதவி செய்தேன். முன்பொருமுறை, நான் குளத்தில் நீராடிய போது, என் கவுபீனத்தை (உள்ளாடை) நண்பர்கள் பறித்துக் கொண்டனர். மான உணர்வால், நான் தண்ணீரிலேயே நிற்க, திரவுபதி தான் தனது புடவையைக் கிழித்து உடையணிந்து கொள்ள உதவினாள். அதனால், அவளது துயிலுரியப்பட்ட போது, நான் உடை கொடுத்து காப்பாற்றினேன். மனிதர்கள் எனக்கு என்ன தருகிறார்களோ, அதை அவர்களுக்கு பல மடங்காக திருப்பியளிப்பேன், என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே ருக்மணியும், பாமாவும், அப்படியானால், உங்கள் மீதான எங்கள் பக்தியை குறைத்து மதிப்பிடுகிறீர்களா ? என செல்லமாகக் கோபித்துக் கொண்டனர். கிருஷ்ணர் சிரித்தபடியே, அவர்களை அழைத்துக் கொண்டு திரவுபதியின் இல்லத்துக்கு வந்தார். அங்கே துச்சாதனின் ரத்தத்தை தடவியதால் சிக்குபிடித்த தலையுடன் திரவுபதி போராடிக் கொண்டிருந்தாள். ருக்மணியும், பாமாவும் அவளுக்கு உதவி செய்தனர். அப்போது, அவளது ஒவ்வொரு ரோமத்தில் இருந்தும் கண்ணா... கண்ணா என்ற திருநாமம் எழுந்தது. அவர்கள் அசந்து போனார்கள். இவளது பக்தி உள்ளத்தில் மட்டுமல்ல, உடலில் மட்டுமல்ல... ரோமங்களில் கூட பரவிக்கிடக்கிறதே என்று மூக்கில் விரல் வைத்தனர். தாங்கள் தங்கள் கணவர் மீது கொண்டு உள்ள பக்தியைக் காட்டிலும், திரவுபதி கொண்டுள்ள பக்தி மேலானது என்பதைப் புரிந்து கொண்டனர். பக்தி முழுமையானதாக இருக்க வேண்டும். நமது எல்லாக் கஷ்டங்களையும் இறைவனின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். திரவுபதி போல, நமது ஒவ்வொரு அங்கத்தையும், அதன் அசைவையும் ஆண்டவனிடமே சமர்ப்பித்து விட வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar