Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பீஷ்மரின் ஆத்மா!
 
பக்தி கதைகள்
பீஷ்மரின் ஆத்மா!

அர்ஜுனன் உருவாக்கிய அம்புப்படுக்கையில் கங்கை மைந்தன் பீஷ்மர் படுத்திருந்தார். இவர், விரும்பியபடி மரணம் என்ற வரத்தைப் பெற்றவர். அதனால் உத்ராயண புண்யகாலத்தில் தனது இன்னுயிரை உடலிலிருந்து உதிர்க்க எண்ணியிருந்தார். அவரைச் சுற்றிலும் பஞ்சபாண்டவர்கள், முக்கியஸ்தர்கள் இருந்தனர். அவர்களிடம் தை அமாவாசை முடிந்த ஏழாவது நாளில் தாம் இம்மண்ணுலகை விட்டு செல்லப்போவதாகவும், தனது உடல் கன்னிபூமியில் (அதாவது அந்த பூமியில் வேறு எவரும் எரிக்கப் பட்டிருக்கக் கூடாது) எரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அவர் உயிர் பிரிந்ததும், உடலை எடுத்துப்போய் மயானத்திற்கு சற்று துõரத்தில் வைக்கச் செல்லும் போது ஒரு மரத்தில் அமர்ந்திருந்த புறா, புனிதமான இந்த உடலை இந்த இடத்தில் வைக்க வேண்டாம். இங்கே பல வீரர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றது. மற்றோர் இடத்தில் வைக்கச் சென்றபோது அங்கிருந்த ஒரு மண்புழு, இந்த இடத்தில் பல தர்மாத்மாக்கள் பஸ்மம் ஆகியிருக்கிறார்கள் என்றது. சரியென்று  அப்புனித உடலை மலையடிவாரத்திற்கு எடுத்துச் சென்றார்கள். இந்த யுகத்தில் மலையாக இருக்கின்ற அந்த இடம் சென்ற துவாபர யுகத்தில் நதிக்கரையாக இருந்தது. அப்போது, ஒரு பாரதப் போர் நடந்தது. அதில் பல பீஷ்மர்கள், பல அர்ஜுனர்கள், பல கர்ணர்கள் எரிக்கப்பட்ட இடம்தான் இது என்று அங்கிருந்த ஒரு விருட்சம் கூறியது. எந்த இடத்தில் எரிக்கச் சென்றாலும் யுகயுகமாய் யாரேனும் எரிக்கப்பட்ட இடமாக இருப்பதாக ஏதோ ஒரு ஜந்துவோ, மரமோ கூறின. என்ன செய்வதென தெரியாமல் திகைத்த அவர்கள், பகவான் கிருஷ்ணர் தான் வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள், கிருஷ்ணரை தியானம் செய்தனர். ஆபத்பாந்தவனான கிருஷ்ணன் பிரத்யட்சமானார். அவரே பீஷ்மரின் ஆத்மாவிடம் பேசினார்.

பீஷ்மரே ! என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் நான் உமக்கு மகனாக இருந்து கொள்ளி வைத்திருப்பேனே, என்றார். கிருஷ்ணா ! நான் செய்த ஒரு நாள் பாவத்தை எனக்கு நானே மன்னிக்க முடியவில்லை. ஆம் அன்று திரவுபதையை மானபங்கப்படுத்துகையில் கண்ணிருந்தும் குருடனாய், வாயிருந்தும் ஊமையாய், செவியிருந்தும் செவிடனாய் இருந்துவிட்டேன். நான் மட்டும் அதை அன்று தடுத்திருந்தால் என்னுடன் துரோணர், கிருபர், விதுரர் ஆகியோர் கை கொடுத்திருப்பார்கள். எந்த யுகத்திலும் நடைபெறாத அந்தக் கொடுமை நிகழ்ந்திருக்காது. பாரத யுத்தமும் நடைபெற்றிராது. இந்த மனவேதனையால்தான் <உன்னிடம் சொல்லவும், கேட்கவும் தோன்றவில்லை. என்னை மன்னித்து விடு என்று பீஷ்மரின்  ஆத்மா கதறி அழுதது. அப்போது கிருஷ்ணர், தேவ விரதா (பீஷ்மரின் நிஜப்பெயர்) எல்லாம் எனது சங்கல்ப படியே நடக்கிறது. அன்றொருநாள் பூமிதேவி என்னுடைய பாரத்தைக் குறையுங்கள் என்று வேண்டினாள். அவளின் பூபாரத்தைக் குறைக்கவே இப்பாரதப் போர் நடந்தது. இப்போர் நடக்க ஒவ்வொருவரும் ஒரு கருவியாய் இருந்து செயல்பட்டனர். அவ்வளவு தான், என்றார். உடனே பீமன், சகோதரர்களே ! நமது பிதாமகரின் புனித உடலை எனது கைகளில் வையுங்கள் என்று கூரி தனது கரங்களை பூமியில் வைத்தான். பீமனின் கரங்களில் பீஷ்மரின் உடலை வைக்க கிருஷ்ணர் தமது கரத்தால் கொள்ளியை வைத்த கணமே சடலம் எரிந்து சாம்பலானது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar