Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஏமாற்றினால் தண்டனை உறுதி!
 
பக்தி கதைகள்
ஏமாற்றினால் தண்டனை உறுதி!

திருமணம் நடைபெற்ற பிறகு இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர் ஒரு வேலைக்காரனுடன், கல்யாண மாப்பிள்ளை மட்டும் தனது மாமனார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது சில கிராமங்களில் வழக்கமாக இருக்கிறது. புதுமாப்பிள்ளை முத்தையா ஒரு வேலைக்காரனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான். அந்த வேலைக்காரன் மிகவும் கெட்டிக்காரன். தனக்கும் கல்யாண மாப்பிள்ளையைப் போன்று உடையலங்காரம் செய்தால் மட்டுமே வருவேன் என சொல்லி விட்டான். முத்தையாவும் வேறு வழியின்றி அவனுக்கு உடைகளை வாங்கிக் கொடுத்தான். இருவரும் உருவத்திலும் அநேகமாக ஒத்திருந்தனர். இருவரும் மாமனார் வீட்டுக்கு அருகே சென்றதும் வேலைக்காரன், முத்தையாவைச் சிறிதுநேரம் தாமதித்து வருமாறு கூறிவிட்டு, தான் முன்னே சென்று மாப்பிள்ளையின் வரவைத் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு முன்சென்றான். களங்கமற்ற முத்தையாவும் இதை நம்பினான். ஆனால், அங்கு சென்றதும் நான் தான் உங்கள் மாப்பிள்ளை என சொல்லிவிட்டான். உருவ ஒற்றுமையால் குழப்பமடைந்த மாமனார், மாமியாரும் வேலைக்காரனையே தங்கள் மாப்பிள்ளை என நம்பி விட்டனர். பின்னர் நிஜமாப்பிள்ளை அங்கு வர, அவனை வேலைக்காரனாக கருதி நடத்த துவங்கிவிட்டனர். முத்தையாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஒரு நாள் வீட்டில் விறகில்லாமல் இருந்தது. முத்தையாவை காட்டுக்கு அனுப்பி விறகு கொண்டு வரச் சொல்லி விட்டான் வேலைக்காரன். முத்தையா காட்டுக்குச் சென்று விறகைச் சேகரித்தான். அவற்றைக் கட்டி எடுத்துச்செல்ல கயிறு கொண்டுவர மறுந்து விட்டான். கஷ்டம் தாங்காமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓவென்று அவன் அழத்தொடங்கினான். இதுகேட்டு, சிவனும் பார்வதியும் அங்கு வந்தனர்.

முத்தையாவிடம் காரணம் கேட்டனர். அவன் நடந்ததை சொல்லவே, பரமசிவன் அவனை சமாதானப்படுத்தி, சிபக் மகாதேவ் ! என்று சொல். இந்த விறகுகள் மட்டுமல்ல, எது வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்துச் சென்றார். இந்தச் சொற்களைச் சொன்ன மாத்திரத்திலே விறகுகள் எல்லாம் ஒட்டிக் கொண்டன ! விறகுக் கட்டுடன் முத்தையா மாமனார் வீடு வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்ததும் தன் வேலைக்காரன் பால் குடிப்பதை முத்தையா கண்டான். சிபக் மகாதேவ் ! என்று அவனைப் பார்த்து முணு முணுத்தான் ! அவ்வளவுதான் ! பால் கிண்ணம் வேலைக்காரனின் உதட்டோடு ஒட்டிக்கொண்டது. கிண்ணத்தை வாயிலிருந்து எடுக்க முடியாமல் அவன் திண்டாடினான். அவனது பரிதாப நிலையைக் கண்ட மாமியார் பாத்திரத்தை அவன் வாயிலிருந்து எடுப்பதற்காக வந்தாள் ; அவள் தன் கையை அந்த கப்பின் மீது வைத்த உடனேயே, சிபக் மகாதேவ் என்று முத்தையா மெதுவாகக் கூறினான். அவளாலும் கையை எடுக்க முடியவில்லை.  ஒருவர் பின் ஒருவராகக் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் இந்த மந்திரத்தின் சக்தியால் சங்கிலித் தொடர் போன்று பரிதாப நிலையில் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் வசிக்கும் ஒரு புலவரை அழைத்து வரச் செய்தார்கள். அவர் குதிரையில் இவர்கள் இருக்கும் இடத்தை வந்தடைந்தார். குதிரையை விட்டுக் கீழே இறங்கிக் குதிரையின் வாலை தொட்டு நின்றார். உடனே முத்தையா அந்த மந்திரத்தை உச்சரித்தான் ! அவ்வளவுதான் ! குதிரையின் வாலைவிட்டுக் கையை எடுக்க முடியாமல் புலவர் தவித்தார். இதென்ன ஆச்சரியம் என்று யோசித்த புலவர் முத்தையாவைத் தவிர மற்றெல்லாரும் இந்த அதிசய ஒட்டுமானத்திற்கு இரையாகி நிற்பதைக் கண்டுகொண்டார். அவனை அழைத்து நடந்த விபரத்தைத் தெரிந்து கொண்டார். பின்னர், முத்தையா மீண்டும் பரமசிவனை வேண்ட எல்லோரது கையும் விடுபட்டது. வேலைக்காரனை கடுமையாக அடித்து வீட்டை விட்டுத் துரத்தினர். ஏமாற்ற முற்பட்டால் அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்பது உறுதி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar