Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுவாமி பிரசாதம்!
 
பக்தி கதைகள்
சுவாமி பிரசாதம்!

ராமானுஜர் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்றார். வழியில் உள்ள கிராமத்தில் வசித்த கார்பாசராம் என்னும் ஏழை அடியவர் வீட்டுக்குச் சென்றார். வாசலில் நின்று, ஓம் நமோநாராயணாய என்று கூவினர். கார்பாசராம் பிச்சை ஏற்க வெளியில் சென்றிருந்தார். மனைவி லட்சுமிபாய்உள்ளிருந்தபடி, சுவாமி! நான் மட்டும் தனித்திருக்கிறேன் என்று குரல் கொடுத்தாள். ராமானுஜருக்கு வீட்டு நிலைமை புரிந்தது. ஏழையான லட்சுமிபாயிடம் ஒரே புடவை தான் இருக்கும். அதுவும் ஈரமாக இருப்பதால் வெளியில் வரத் தயங்குகிறாள், என்பதை அறிந்தார். தன் ஆடையை துõக்கி வீட்டுக்குள் வீசினார். அதை உடுத்திக் கொண்ட லட்சுமிபாய் ஓடி வந்தாள். ராமானுஜர்பாதங்களில் விழுந்துவணங்கினாள். சுவாமி! எதிரிலுள்ள கோவில் குளக்கரையில் சற்று நேரம் இளைப்பாறுங்கள். இதோ நொடிப் பொழுதில் உணவு தயாரித்து வருகிறேன், என்றாள். அனைவரும் அங்கு சென்று அமர்ந்தனர். சமைக்க வீட்டில் ஏதுமில்லை. செய்வதறியாமல் திகைத்தாள், அருகிலுள்ள வியாபாரி வீட்டுக்கு ஓடினாள். அவனுக்கு லட்சுமிபாயின் மீது வெகுநாளாக ஒரு கண் இருந்தது.உன் அன்பை நாடும் என்னைத் தேடி வந்தாயே! என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். ஆனால், என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றான்.

லட்சுமிபாய், ஐயா! வீட்டுக்கு விருந்தினர்வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு சமைக்க அரிசி, பருப்பு அனைத்தும் தேவை. கொடுத்து உதவினால்,உங்கள் விருப்பம் இன்றே நிறைவேறும், என்றாள்.  வியாபாரியும்பொருட்களைக் கொடுத்தான். லட்சுமிபாய் வீட்டுக்குச் சென்று உணவு தயாரித்தாள். பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டு பரிமாறினாள். ராமானுஜர் உள்ளிட்ட அனைவரும் மந்திரம் ஜெபித்த பின் உண்டனர். மீண்டும் குளக்கரைக்குச் சென்றனர். இதற்கிடையில், கார்பாசராம் வீடு திரும்பினார். அவரிடம், நடந்த அனைத்தையும் லட்சுமிபாய் தெரிவித்தாள். அவரோ ராமானுஜரிடம் சொல்வோம். அவர் நல்வழி காட்டுவார், என்றார்.லட்சுமிபாயும் நடந்ததை விவரித்தாள். சுவாமி! கொடுத்த வாக்கும் முக்கியம். ஒரு பெண்ணுக்கு கற்பும் முக்கியம். இரண்டையும் காப்பாற்ற வழி செய்யுங்கள் என்று அழுதாள். ராமானுஜர், கலங்காதே! நான் சொல்வதைக் கேள். இன்றிரவு வியாபாரி வீட்டுக்குச் செல். சுவாமிக்கு நைவேத்யம் செய்த உணவை எடுத்துக் கொள். அதை அவனுக்குக் கொடு. அதன் பின் எல்லாம் நன்றாகவே நடக்கும், என்றார். லட்சுமிபாய் நைவேத்ய உணவுடன் வியாபாரியின் வீட்டிற்கு இரவில் புறப்பட்டாள். காத்திருந்த வியாபாரி மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றான். ஐயா! இந்த உணவை முதலில் சாப்பிடுங்கள், என்று பிரசாதத்தை லட்சுமிபாய் கொடுத்தாள்.அதை அவன் சாப்பிட்டதும், மனதில் நல்லெண்ணம் ஏற்பட்டது. மனம் திருந்திய நிலையில், அம்மா! நல்லவேளையாக நான் பிழைத்தேன்! பாவத்தில் இருந்து என்னைக் காத்தீர்கள் என்று சொல்லி லட்சுமிபாயிடம் மன்னிப்பு கேட்டான். ராமானுஜரின் கருணையை எண்ணி அவள் வியந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar