Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மூணே மூணு வார்த்தை!
 
பக்தி கதைகள்
மூணே மூணு வார்த்தை!

ஏழைச் சிறுவன் ஒருவன், கடைக்காரரிடம் போய் கை நீட்டி, ஐயா! ஒரு ரூபாய் கொடுங்கள்... பசிக்கிறது, என்றான்.அவர், நான் ஐந்து ரூபாய் தந்தால் என்ன செய்வாய்?கடையில் போய் உடனே ஒரு ரொட்டி வாங்கிசாப்பிடுவேன்...சரி... பத்து ரூபாய் கொடுத்தால்... கடைக்காரர் கேட்க பையனுக்குஎரிச்சலாக வந்தது. ஒரு ரூபாய் கேட்டால், கொடுத்து தொலைய வேண்டியது தானே... இதற்கு ஏன் இத்தனை ஆயிரம் கேள்வி கேட்கிறார்...இருப்பினும், பையன் பதில் சொன்னான்.என் அம்மாவுக்கும் சேர்த்து ஒரு ரொட்டி வாங்கிச் செல்வேன்...கடைக்காரர் விடவில்லை. நுõறு ரூபாய் தந்தால் என்ன செய்வாய்?பையன் டென்ஷன் ஆகி விட்டான். தன்னை அவர் கேலி செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு, ஒரு முறைப்புடன் அங்கிருந்து கிளம்பினான்.கடைக்காரர் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி விட்டார். பதில் சொல்லிட்டு போ... என்றவரிடம், உம்....நிறைய சாமான் வாங்கி ஒரு மடங்கு லாபம் வைத்து விற்பேன், உங்களை மாதிரி வியாபாரி ஆகிடுவேன், என்றான்.கடைக்காரர் அவனிடம் நுõறு ரூபாயை நீட்டினார்.சம்பவம் நடந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. ஒருநாள் கடைக்காரர் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார். ஒரு இளைஞன் ஓடி வந்து அவரது பாதங்களில் விழுந்தான்.நீ யாரப்பா? என்றார் கடைக்காரர்.என்னை நினைவில்லையா... பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், நான் உங்களிடம் ஒரு ரூபாய் கேட்டேன், நீங்கள் நுõறு ரூபாய் தந்தீர்கள்.. அதைக்கொண்டு, ஒரு கடை வைத்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்,.கடைக்காரர் அவனை ஆசிர்வதித்து கிளம்பினார்.ஏழையின் சிரிப்பில் இறைவன்....உழைப்பே உயர்வு தரும்...இதுபோன்ற மூணே மூணு வார்த்தை மந்திரங்கள் எல்லார் மனதிலும் இருந்தால், உலகில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar