Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என்ன காரணம்!
 
பக்தி கதைகள்
என்ன காரணம்!

வெகு காலத்திற்கு முன் சக்ரவர்த்தி என்ற அரசன் இருந்தார். நீதிநெறி தவறாத அவரின் நல்லாட்சியில், மக்கள் மகிழ்ச்சியாக  வாழ்ந்தனர். அவன் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தது. வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது வாரி, வாரி வழங்கினான்.
அவர் மனைவி அழகும், நற்பண்புகளும் நிறைந்தவளாக விளங்கினாள். புதல்வர்களும் அவனுக்கு மேலும், பெருமை சேர்த்தனர்"இவரைப் போன்ற பெருமை மிகுந்த அரசர் இதற்கு முன் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை என்று அவர் புகழ்  உலகெங்கும் பரவி இருந்தது. ஒருநாள்- அவர் தன்னைப் பற்றி சிந்தித்தார். "நான் இவ்வளவு பேரும் புகழும் பெற என்ன காரணம்?  முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என்று நினைத்தபடி இருந்தார். அவரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அப்போது வசிஷ்ட முனிவர் அவர் அரண் மனைக்கு வந்தார். அவரைச் சிறப்பாக, வரவேற்று வணங்கினார் அரசர். ""முனிவரே! தாங்கள்  முக்காலமும் உணர்ந்தவர். நான் இவ்வளவு பேரும் புகழும் பெற என்ன காரணம்? முற்பிறவி யில் என்ன தவம் செய்தேன்?  தாங்கள்தான் சொல்ல வேண்டும், என்று பணிவாகக் கேட்டான். ""சக்ரவர்த்தி! போன பிறவியில் நீ விறகு வெட்டியாக இருந்து,  வறுமையில் துன்பப் பட்டாய். ஒருமுறை நீ தலையில் விறகுக் கட்டுடன் பல இடங்களில் அலைந்தாய். யாருமே உன்னிடம் விறகை  வாங்கவில்லை. களைப்படைந்த நீ, விறகுக் கட்டை ஓரிடத்தில் இறக்கி வைத்தாய். அங்கேயே ஓய்வு எடுத்தாய்.

""அந்த இடத்திற்கு எதிரில் செல்வந்தன் ஒருவன் பெரிய வேள்வி செய்து கொண்டிருந்தான். வேள்வி முடிந்ததும், அவன் வந்தவர்களுக்கு  எல்லாம் வாரி வழங்கினான். ""இதைப் பார்த்த நீ, "என்னிடமும் செல்வம் இருந்தால் இவரைப் போல வாரி வழங்குவேன் என்று  நினைத்தாய். அந்தணர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொன்னும், மணியும் வாரி, வாரி வழங்கு வது போலக் கற்பனை செய்து மகிழ்ந்தாய்.  அதனால்தான் உனக்கு இந்தப் பிறவியில் அரசனாகும் நற்பேறு கிடைத்தது. ""இந்தப் பிறவியில் நீ வாரி வாரி வழங்குகிறாய். இப்படியே  தொடர்ந்து செய்து கொண்டிரு. நீ மேலும், மேலும், சிறப்புப் பெறுவாய். பேருடனும், புகழுடனும் விளங்குவாய், என்றார் முனிவர். அவரை மீண்டும் வணங்கிய அவர், ""முனிவரே! வாரி வழங்கும் இயல்பை நான் என்றும் விட மாட்டேன். தொடர்ந்து செய்து  கொண்டிருப்பேன், என்றார். அவரை வாழ்த்திவிட்டு, அங்கிருந்து சென்றார் முனிவர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar