Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நெஞ்சில் நிறைந்தவர்!
 
பக்தி கதைகள்
நெஞ்சில் நிறைந்தவர்!

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களைபோதிக்கிறது. அவர் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். அவரது வாழ்வில் நடந்த நிகழ்வே இதற்கு ஒரு உதாரணம். விவேகானந்தருக்கு, அவரது தந்தை, விஸ்வநாத தத்தர் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.விவேகானந்தரோ,திருமணமா... முடியவே முடியாது என்று மறுத்தார்.ஒருமுறை அவரது மனதில் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று ஒரு படம் வரைந்து பார்த்தார். அது சரியாகப்படவில்லை. முடிவில் இதெல்லாம் வேண்டாம்... சத்தியசொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும், அதற்கு இல்லறம் சரி வராது. ஒரு காவிஆடையுடன், உலகம் முழுக்க சுற்றியேனும்கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.விஸ்வநாததத்தர் தன்மகனிடம், நரேன்!(விவேகானந்தரின் இளமைக்கால பெயர்) நான் இப்போது ஒரு பெரிய பணக்கார சம்பந்தம் பேசி முடிக்க இருக்கிறேன். அவர்கள் உன்னை ஐ.சி.எஸ். படிக்க இங்கிலாந்துக்கு அனுப்ப இருக்கிறார்கள். செலவுக்கு பணமும்தருகிறார்கள். இதுதவிர ஏராளமான வரதட்சணையும் தருகிறார்கள். பெண்ணும் பேரழகி. நீ படித்துஅதிகாரியாக வேண்டும். உன்னை இந்த ஊரே பாராட்ட வேண்டும், என்றார் கண்களில்கனவலைகள் மிதக்க!விவேகானந்தரோ,இல்லை தந்தையே!திருமணம் என்ற பந்தத்துக்குள் என்னைத் தள்ளாதீர்கள். ஐ.சி.எஸ். என்ற படிப்பு வெறும் சம்பளத்தையும், அதிகாரத்தையும் தான் தரும். நான் ஞானம் என்ற பெரிய படிப்பைக் கற்றுக் கொள்ளப்போகிறேன். என்னை என் வழியில் விட்டு விடுங்கள், என்று மறுத்து விட்டார். தான் எடுத்த முடிவில் தளராமல் நின்று வென்று காட்டினார். இன்றும் நம் நெஞ்சில் நிற்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar