 |
| வானத்தில் மிக உயரத்தில் கருடன் ஒன்று பெருமிதமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கிளிகள் அதைப் பார்த்தன. கருடனைப் போல அவ்வளவு உயரத்தில் பறக்க முடியவில்லையே என்று ஏக்கம் அடைந்தது ஒரு கிளி. இன்னொரு கிளி நமக்கு இறக்கைகள் இருந்து என்ன பயன்? பறந்தால் அந்தக் கருடனைப் போல அவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும். இல்லாவிடில் இறக்கைகள் இருந்து என்ன பயன்? என்று அலுத்துக்கொண்டது. அறிவும் அனுபவமும் நிறைந்த மற்றொரு கிளி, நண்பா! நாம் கிளிகளாகப் பிறந்திருக்கிறோம். இன்னொரு கிளியைப் பார்த்து ஏக்கம் கொள்வதில் பொருள் உள்ளது. கருடனைப் பார்த்துப் பொறாமைப்படுவதில் நியாயம் இல்லை. அதன் தேவை வேறு நம் தேவை வேறு நம்மைப்போல பறக்க முடியவில்லையே என்று வெட்டுக்கிளிகள் மனமொடிந்து விடவில்லை. உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் என்ன கிடைத்தாலும் திருப்தி பெறமாட்டார்கள். அவர்கள் வாழ்வு நிம்மதியாகவும் இருக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட எண்ணத்தை விட்டுவிடுங்கள்! என்று அறிவுரை சொன்னது. |
|
|
|
|