Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிளம்பட்டும் ஒற்றுமை ஊர்வலம்!
 
பக்தி கதைகள்
கிளம்பட்டும் ஒற்றுமை ஊர்வலம்!

பெரியவர் ஒருவர், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஊர்வலத்தில் சிறிதும் பெரிதுமாகப் பல விநாயகர் திருவுருவங்கள் இடம் பெற்றிருந்தன. அவரவர், தங்கள் வீடுகளில் வைத்திருந்த களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் திருவுருவங்களை கொண்டு வந்திருந்தனர். நேரம் ஆக ஆக கும்பல் அதிகமாயிற்று. அப்போது, சிறுவன் ஒருவன் ஒரு விநாயகர் திருவுருவத்துடன், பெரியவரின் காலில் வந்து விழுந்தான். அவனைத் துõக்கி நிறுத்திய பெரியவர், அவனிடம், ஏன் காலில் விழுகிறாய்? என விசாரித்தார். அவனோ அழத் தொடங்கி விட்டான்.ஐயா! நான் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாதாம். நான் தாழ்த்தப்பட்டவனாம். எனவே என்னை ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது என சிலர் அடித்து விரட்டி விட்டார்கள், என்றான். அதைக்கேட்டதும் பெரியவரின் கண்கள் சிவந்தன.

சிறுவனுடன் கூட்டத்தின் முன்னால் போய் நின்றார். கம்பீரமான குரலில், இப்படி, நமக்குள்ளேயே ஜாதி பேதம் பார்த்துக் கொண்டிருக்கிற வரையில், ஒருக்காலும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது... இவனும் நம்முடன் ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும்,என்று விரிவாக ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தார். கம்பீரமும் கடுமையும் கலந்த அவர் குரலுக்கு, அனைவரும் மன்னிப்பு கேட்கும் முகமாக தலை குனிந்து மவுனம் காத்தார்கள்.உடனே அந்தச் சிறுவனை அழைத்த பெரியவர், உன்னை இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றார்கள் அல்லவா? அவர்களுக்கும் சேர்த்து, இந்த ஊர்வலத்தை நீயே தலைமை தாங்கி நடத்து! எல்லாரும் உன் பின்னால் வரட்டும், என்று சொல்லியபடியே அவனைத் துõக்கி முதல் வண்டியின் முன் பகுதியில் உட்கார வைத்தார்.

ஊர்வலம் புறப்பட்டது.அந்தப் பெரியவர் தான் பால கங்காதர திலகர். மகாராஷ்டிராவின் வீதியெங்கும் விநாயகர் வடிவத்தை வைத்து, விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு வழிபாடு செய்யும் பழக்கத்தை உண்டாக்கியவர் அவரே! வடக்கேயெல்லாம் காளி வழிபாடு தான் விமரிசையாக நடக்கும். அப்படியிருக்க, காளியை வைக்காமல் விநாயகரை ஏன் வைத்தார் திலகர்? விநாயகர் வடிவத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை முகம். ஒருபக்கம் தந்தம், மறு பக்கம் ஒடிந்திருக்கும். ஒடியாத தந்தம் உள்ள பகுதி ஆண் பகுதி; ஒடிந்த பகுதி பெண் பகுதி. கழுத்திற்கு கீழே மனித உடல். இவ்வாறு ஆண், பெண், அஃறிணை, உயர்திணை என அனைத்தும் இணைந்த ஒரு வடிவம் விநாயகர். அதனால் தான் விநாயக வடிவத்தை வைத்தார் திலகர். அதாவது ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை இல்லாத பட்சத்தில் எதையும் சாதிக்க முடியாது. இன்று, வீட்டிலும் வெளியிலும் நமது அவசரத் தேவை ஒற்றுமை. அதைக் குறிக்கக் கூடியதே விநாயகர் வழிபாடு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar