Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ரஷ்ய விஞ்ஞானி!
 
பக்தி கதைகள்
ரஷ்ய விஞ்ஞானி!

ரஷ்ய நாட்டில் விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அவர் தனது பரிசோதனைக் கூடத்தில், ஏதேனும் ஓர் ஆராய்ச்சியில் சதா சர்வகாலமும் ஈடுபட்டிருப்பார்.ஒரு நாள், அந்த ஊரிலிருந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர், அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் விஞ்ஞானியிடம், நமது ஊரில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை இந்தத் தேதியில், இந்த இடத்தில், மாலை ஆறு மணிக்கு நாங்கள் நடத்த இருக்கிறோம். அந்த நிகழ்ச்சியில் நீங்கள் சிறப்பு விருந்தினராக அவசியம் கலந்து கொள்ள வேண்டும், என்று, கேட்டுக்கொண்டார்கள். விஞ்ஞானி அவர்களிடம், நான் எப்போதும் என் பரிசோதனைக் கூடத்தில், ஏதேனும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவன். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள இயலாது, என்று, தன்னுடைய உண்மை நிலையை எடுத்துக்கூறினார். ஆனால், வந்தவர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரை வற்புறுத்தி, குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குச் சம்மதிக்கச் செய்தனர்.

நிகழ்ச்சி நடைபெற வேண்டிய அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது. விஞ்ஞானி வழக்கம்போல் அன்றைய தினமும், பரிசோதனைக்கூடத்தில் தனது ஆராய்ச்சியில் ­மூழ்கியிருந்தார். திடீரென்று அவருக்கு, தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற நினைவு வந்தது. அப்போதே மாலை மணி ஆறு ஆகியிருந்தது. ஆறு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும். நிகழ்ச்சி பற்றி அடியோடு மறந்து போயிருந்த அவர், அது பற்றி நினைவு வந்ததும், அவசர அவசரமாக ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும் அவர், சற்று தூரத்தில் ஒரு குதிரை வண்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் அவசர அவசரமாக ஏறிக்கொண்டு வண்டிக்காரனிடம், ம்... சீக்கிரம் வண்டியை ஓட்டு, என்று கூறிவிட்டு, மீண்டும் தன் விஞ்ஞான ஆராய்ச்சியைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். வண்டிக்காரன், ஐயா! எங்கே போக வேண்டும்? என்று விஞ்ஞானியிடம் கேட்டான். அவ்விதம் குதிரை வண்டிக்காரன் கேட்டது,  தன் ஆராய்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியின் காதில் விழவே இல்லை.

அவருக்குக் குதிரை வண்டிக்காரன் ஏதோ கேட்கிறான் என்று மட்டும் லேசாகப் புரிந்தது. அவன் கேட்ட எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விஞ்ஞானி மீண்டும், எதுவும் பேசாதே! சீக்கிரம் வண்டியை ஓட்டு! என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு, மீண்டும் ஆராய்ச்சி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். குதிரை வண்டி சிறிது துõரம் ஓடியது. மீண்டும் வண்டிக்காரன், ஐயா! எங்கே போக வேண்டும்? என்று விஞ்ஞானியிடம் வினவினான். விஞ்ஞானியோ ¬முன்பு போலவே ஏதோ சிந்தித்தபடி, நேரமாகி விட்டது! சீக்கிரம் வண்டியை ஓட்டு! சீக்கிரம்! என்று வண்டிக்காரனை விரட்டினார். அவனும், விஞ்ஞானி கூறியபடியே வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றான். இடையிடையே குதிரை வண்டிக்காரன் விஞ்ஞானியிடம், ஐயா! எங்கே போக வேண்டும்? என்று கேட்டுக்கொண்டே தான் இருந்தான். விஞ்ஞானியும் தன்னுடைய சிந்தனையை விட்டு மீளாமல், சீக்கிரம் ஓட்டு! என்ற பல்லவியையே திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்தார். இவ்விதம் வண்டி நீண்ட நேரம் ஓடியது. விஞ்ஞானிக்கு ஒரு வழியாக சுயநினைவு வந்தபோது, அவர் குறிப்பிட்ட ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி, அந்த இடம் வந்துவிட்டதா? என்று வண்டிக்காரனிடம் கேட்டார்.

அதற்கு குதிரை வண்டிக்காரன் அவரிடம், நீங்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், சீக்கிரம் வண்டியை ஓட்டு! சீக்கிரம் வண்டியை ஓட்டு! என்று மட்டும் தான் கூறினீர்கள். வண்டி ஓட ஆரம்பித்ததிலிருந்து நானும் அவ்வப்போது, எங்கே போக வேண்டும்? என்று உங்களிடம் கேட்டுக்கொண்டே தான் இருந்தேன். ஆனால், நீங்களோ நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், சீக்கிரம் வண்டியை ஓட்டு! சீக்கிரம் வண்டியை ஓட்டு! என்று மட்டும்தான் கூறினீர்கள்.இப்போதுதான் நீங்கள் இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த இடம் வந்துவிட்டதா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நாம் வரவில்லை. எங்கே போக வேண்டும்? என்று ¬முதலிலேயே சொல்லாமல், இப்போது நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டதா என்று கேட்டால், அந்த இடம் எப்படி வரும்? என்று கேட்டான். இதுபோல் தான் வாழ்க்கையில் உன்னத லட்சியம் என்று எதுவும் இல்லாமல், நம்மில் பெரும்பாலானவர்கள் எங்கோ, எதற்கோ பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று லட்சியம் எதுவும் இல்லாமல் குதிரை வண்டி ஓடியது. அவ்விதம் இல்லாமல், ஏதேனும் ஓர் உயர்ந்த லட்சியத்தை வைத்துக்கொண்டு, அதை நோக்கிச் செல்வதாக நமது வாழ்க்கை அமைய வேண்டும். இது மிகவும் முக்கியம். துரதிருஷ்டவசமாக இந்த மக்களில் பெரும்பாலானவர்கள்  லட்சியம் ஏதும் இல்லாமல், இருளடைந்த வாழ்க்கைப் பாதையில் தட்டுத் தடுமாறிச் சென்று  கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன், ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும்  இல்லாமல்  வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் லட்சியத்தைக்கொண்டிருப்பது மேலானது, என்கிறார் விவேகானந்தர் .- இன்னும் கேட்போம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar