Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கஜேந்திரனின் ஆசை!
 
பக்தி கதைகள்
கஜேந்திரனின் ஆசை!

பகவான் செய்துக் காட்டி இருக்கும். செய்து காட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாடியும் விசேஷமான அர்த்தங்கள் நிச்சயம் இருக்கும். ஆனா, அதெல்லாம் நமக்குத்தான் அனேக சமயங்களில் புலப்படாமலேயே போய் விடுகிறது. பத்ரிகாஸ்ரமம் போனோம்னா அங்கே நரனாகவும், நாராயணனாகவும் சாட்சாத் அந்தப் பெருமாளேதான் காட்சி தருகிறார் நரன். என்கிற திருநாமம் நாராயணனையே குறிக்கும். நாராயணனுக்கு உட்கார வைத்து சொல்ல ஆள் கிடைக்கவில்லை. அதனால் தானே நரனாக உடகார்ந்து கொண்டார். நாராயணர் எட்டு எழுத்து மந்திரத்தை தன் சிஷ்யனான நரனுக்கு அங்கே உபதேசம் பண்ணார்.  கேட்ட வரத்தை எல்லாம் தரக்கூடியவர் ப்ருஹ்மா. அவரிடம் ராவணன் ஏகப்பட்ட வரங்களை வாங்கி வந்திருந்தான். எனக்கு மிருகங்களால் தேவர்களால், யக்ஷர்களால், ராட்ஷஸர்களால் மரணம் நேர்ந்து விடக்கூடாது. என வேண்டிக் கொண்டவன், மனிதனால் கொல்லப்பட கூடாது. என்று கேட்பதற்கு விட்டுவிட்டான். எறும்பு கடித்து நான்  சாகக் கூடாது என்று யாரும் வரமாக கேட்க மாட்டோமே; அப்படித்தான் அதுவும்.

ஹிரண்யகசிபு போடாத கண்டிஷன்களா? ப்ருஹ்மாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட யாராலும் கொல்லப்படக் கூடாதுன்னுதான் கேட்டானே தவிர, உம்மையே ஸ்ருஷ்டித்தவனால் கொல்லப்படக் கூடாதுன்னு அவன் கேட்கலியே பகவான் அவ்வளவு எளிமையானவர். கொஞ்சம் ஸ்தோத்திரம் பண்ணாலும் போதும் சந்தோஷப்படக் கூடியவர். இலை, பூ, பழம் ஜலம் என்று நீ எதை பக்தியோடு கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். எனக்கு இதுதான் வேணும். இப்படித்தான் வேணும்னு கேட்காதவர். ப்ரீதி ரொம்ப அதிகமாயிருச்சுனா நாம சாஸ்திரத்தை பார்க்கவே மாட்டோம். விட்டுடுவோம். குழந்தை ரொம்ப களைத்துப் போய். பசியோடு வந்து நின்னால். கைய அலம்பு, கால அலம்புன்னு ரொம்ப சொல்லிட்டே இருக்க மாட்டோம். கண்ணா சாப்பிடுறியா என்று தான் கேட்போம்.

எத்தனை எத்தனையோ குலங்கள் இருக்கும் போது ராமர் ஏன் இஷ்வாகு வம்சத்தில் பிறந்தார்னு ஒரு கேள்வி வரும். ராவணனை வதம் பண்ணுவது தேவ காரியம். அடுத்து தன் காரியத்தை தானே தீர்த்து கொள்வதற்காகவும்தான் ராமர் அவதாரம் பண்ணினார். கஜேந்திரன் என்கிற யானையை காப்பாற்ற பரமபதத்திலிருந்துதான் பகவான் வரணுமா? அங்கேயிருந்தே சங்கு, சக்ரத்தை விட்டிருக்கலாமே. அந்த யானை என்னன்னு ஆசைப்பட்டது தெரியுமா? தான் கையில வெச்சிருந்த அந்த புஷ்பத்தின் நிறம் மாறுவதுக்குள்ள அதை பெருமாள் பாதத்தில் சேர்த்துடனும் என்று ஆசைப்பட்டன.

அந்தப் பூ பழசாகுறதுக்குள்ள அதை பகவானின் பாதத்தில் சமர்பிக்கணும்னு நினைக்கிறது எந்த மாதிரியான பக்தி  சில வஸ்துக்கள் பழசா போனா அது பழையதுதான். விளக்கில் போடுறதிரியை கூட ஒரு நாள் உபயோகப்படுத்தினதை மறு நாள் எடுத்துவிடணும். புது திரியைத்தான் தினம் போடணும். துளசிக்கு மட்டும் பழையது என்கிற தோஷமே கிடையாது. நித்யசூரி அம்சம் அது. தாமரை பூவுக்கு ஒரு நாள் வரைக்கும் அந்த பழையது என்கிற தோஷம் கிடையாது. அந்த ஒரு நாளில் அந்த பூவை பெருமாளுக்கு சாத்திடணும் என்று தான் கஜேந்திரனுக்கு கவலையே. புஷ்பத்தை சமர்ப்பிக்கணும். அப்போது பகவானை பார்த்துடணும்னு அந்த கஜேந்திரன் ஆசைப்பட்டது. என்னை பார்க்கணும்னு ஆசைப்பட்ட யானைக்குக் காட்சி தரணுமேன்னு பறந்தோடி வந்தார். பகவான் அங்கே. ராமாவதாரத்தில் தன் ஆசையை தீர்த்துக்கொள்ளணும்னு வந்தார் பகவான்.

ரங்கநாத பெருமாளை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பல அரசர்கள் பூஜை பண்ணியிருக்காங்க, ஆனா, யாருமே பகவானை திருப்திபடுத்தும் விதமா பூஜை பண்ணலன்னு ஒரு குறை பகவானுக்கு என் பெருமைக்கு தக்கபடி பூஜை நடக்கலன்னு பகவான் நினைத்தார். 32 உபசாரம் பன்றேன்னு ஆரம்பிச்சு 64 அபசாரங்களை நாம் பண்ணிவிடுகிறோம். எம்பெருமானிடத்தில் பரிவு இருக்கணும். ராமானுஜர் ரங்கநாதரை சேவிக்க வருகிறார். பெருமாளின் முகம் கன்றி இருக்கு. என்னது இது பகவானின் முகம்  கன்றி, சிவந்து இருக்கு? என்ன அமுது செய்தீர் இன்னிக்கு’ ன்னு அவருக்குப் பிரசாதம் செய்யற முதலியாண்டானை பார்த்து ராமானுஜர் கேட்கிறார். ததியோனம் (தயிர் சாதம்) நாவல் பழம்’ ன்னார் அவர், உங்க வீட்டு குழந்தைக்கு இந்த ரெண்டையும் சேர்த்து கொடுத்தா சளி வராதா? அதான் எம்பெருமானுக்கு வந்துவிட்டது என்றார் ராமானுஜர் எவ்வளவு உசத்தியான பாவம் இது!

நம் பெருமைக்குத் தக்கபடி யாருமே பூஜை பண்ணலேன்னு நினைத்துதான் தானே தனக்கு பூஜை செய்துகொள்ள ராமனாக இஷ்வாகு குலத்தில் வந்துதித்தார். பகவான், இன்னொரு ஆச்சர்யம், வால்மீகியை ராமாயணம் எழுத பகவான் பணித்தது. இரு பட்சிகள் சேர்ந்திருந்தபோது அதில் ஒரு பட்சியை வேடன் அடித்தான். உடனே அந்த வேடனைப் பார்த்து வால்மீகி சாபம் கொடுக்கிறார். சாபம் கொடுத்ததும் கொடுத்துட்டோமே என மனம் வருந்துகிறார் அவர் ஏன்? பறவைகளை அடிப்பது தானே வேடனின் தர்மம்? அதற்கு எதற்கு சாபம்? இந்தக் காட்சி ஏன் ராமாயணத்தில் வருகிறது என்றால், ராமாயணத்தை எழுத வேண்டியவன் எப்படி இருக்க வேண்டும்? தாம் எழுதுவதில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். ராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமனின் கருணை விடுபடலை. கருணை உடையவராக வால்மீகி இருக்கிறாரா என்பதற்கு, அவருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்தான் அந்த வேடன் காட்சி  வால்மீகியின் சோகமே ராமாயணத்தின் மங்கள ஸ்லோகமானது  ஆக, சொல்லி சொல்லி எழுதப்பட்டது மகாபாரதம் ஒவ்வொரு காட்சிகளாகப் பார்த்துப் பார்த்தே எழுதப்பட்டது ராமாயணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar