Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்மதேவதை வழங்கிய தீர்ப்பு!
 
பக்தி கதைகள்
தர்மதேவதை வழங்கிய தீர்ப்பு!

ஒரு நல்ல அரசர் இருந்தார். அவர் எப்போதும் பொதுமக்களுக்கு நன்மை தரும் பணிகளைக் கவனமாகச் செய்வது வழக்கம். அவர் தெரிந்து எந்தத் தவறும் செய்ததில்லை. தினந்தோறும் அந்த அரசரே அண்டாவிலிருந்து உணவு எடுத்து ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பார். அவ்விதம் அவர் ஒரு நாள் அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு கருடன், ஒரு பாம்பைத் துõக்கிக்கொண்டு பறந்து சென்றது. பாம்பு,  கருடனிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்த முயற்சியில் பாம்பின் வாயில்இருந்து வெளிப்பட்ட விஷம், அரசர் உணவு எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த அண்டாவில் விழுந்தது. இது யாருக்கும் தெரியாது. அரசர் பாம்பின் விஷம் விழுந்த பகுதியில் இருந்த உணவை எடுத்து, ஓர் அந்தணருக்குக் கொடுத்தார். அரசர் அளித்த உணவைப் பெற்ற அந்தணர், அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட்டு முடித்ததும் மயங்கி விழுந்து இறந்து போனார்.

அந்தணர் இறந்த செய்தி, அன்னதானம் செய்துகொண்டிருந்த அரசருக்குத் தெரிய வந்தது. அவர், அந்தணர் இறந்து போனதற்கு தான்தான் காரணம் என்று நினைத்து மிகவும் மனம் வருந்தினார். இப்போது அந்தணர் இறந்து போனதற்கான பாவத்தை யார் தலையில் சுமத்துவது? என்ற தர்மசங்கடம் தர்மதேவதைக்கு ஏற்பட்டது. தர்மதேவதை, அரசர் நல்ல எண்ணத்தில்தான் அன்னதானம் செய்தார். அதனால் அந்தணர் இறந்ததற்கான பாவத்தை அரசர் மீது சுமத்துவது நியாயமில்லை. இந்தப் பாவத்தை வேறு யார் தலையிலாவது சுமத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கும் வரையில் இந்த ஊரிலேயே சிறிது காலம் காத்திருப்போம் என்று நினைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களுக்குப் பிறகு, வெளியூரிலிருந்து நான்கு அந்தணர்கள் அரசரிடம் தானம் பெற வந்தார்கள். அவர்களுக்கு அரசர் இருப்பிடம் செல்வதற்கு வழி தெரியவில்லை. அவர்கள் ஓர் இடத்தில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தியைப் பார்த்தார்கள். அவரிடம் சென்று, நாங்கள் வெளியூர்க்காரர்கள். உங்கள் அரசரிடம் தானம் பெறுவதற்காக வந்திருக்கிறோம்.

அவரைப் பார்க்க நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும்? என்று வினவினார்கள். மூதாட்டி, அந்தணர்களிடம் அரசர் இருக்கும் இடம் செல்வதற்கு வழி கூறினாள். அதோடு நிறுத்தாமல் அவள் அவர்களிடம், அரசரிடம் உணவு பெற்ற அந்தணர் இறந்து போனதை மனதில் வைத்து, அரசர் மிகவும் நல்லவர்தான். ஆனால் தானம் கொடுத்தபிறகு, தன்னிடம் தானம் பெற்றவரைக் கொன்றுவிடுவார், என்றும் கூறினாள். மூதாட்டி கூறியதைக் கேட்டு அந்தணர்களுக்குத் துõக்கி வாரிப் போட்டது. அவர்கள் இப்போது அரசரிடம் செல்லவே பயந்தார்கள். ஆதலால், தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இதைப் பார்த்த தர்மதேவதை, அரசரைப் பற்றிய தவறான எண்ணத்தை அந்தணர்களுக்கு அளித்த மூதாட்டியின் தலையில், பாம்பின் விஷஉணவு சாப்பிட்ட அந்தணர் இறந்து போனதற்கான பாவத்தைச் சுமத்துவது என்று முடிவு செய்தது. அப்படியே அந்தணர் இறந்துபோன பாவம் முழுவதும் இப்போது மூதாட்டியைச் சென்றடைந்தது. அவளே அந்தணர்  இறந்ததற்கான நுõறு சதவிகிதம் பாவத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. நாம் ஒருவரைப் பற்றி அரைகுறையாக ஏதோ கேள்விப்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை வைத்து நாம் அந்த ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தினால், நுõறு சதவீத பாவமும் நம்மை வந்து சேரும்.

ஒருவர் தவறு செய்தவர் என்பது உண்மையாகவே இருக்கும். அது உண்மையாகவே இருந்தாலும் கூட, அதைப் பற்றி பிறரிடம் புறங்கூறுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அவர் செய்த பாவத்தில் ஐம்பது சதவீத பாவம் நம்மை வந்தடையும். இதன் மூலம் ஒருவரைப் பற்றி புறங்கூறினாலும் பாவம் ஏற்படும் என்பதை அறிகிறோம். எனவே மற்றவர்களை விமர்சிப்பதன் மூலம் நம்மை அறியாமலேயே நாம் பாவம் செய்துகொண்டிருக்கிறோம், பாவ மூட்டைகளைச் சுமந்துகொண்டிருக்கி றோம்; இதனால் நேரடியாக நாம் பாவம் செய்யாவிட்டாலும், நம்மை பாவம் வந்து சேருகிறது என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.எனவே புறங்கூறுவதையும், கண்ணால் நேரில் பார்த்தது போல் இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து சொல்வதையும் நாம் அறவே தவிர்க்க வேண்டும். அதனால் நம்மிடம் பாவம் அணுகுவதை தவிர்க்க முடியும். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் என்கிறது உலகநீதி என்னும் நுõல்.

புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறம் கூறும் ஆக்கம் தரும், என்கிறார் வள்ளுவர். அதாவது, ஒருவனைப் பார்க்காதபோது இகழ்ந்து பேசி, அவனைப் பார்த்தபோது அவனிடம் அன்புடையவன் போல பொய்யாக நடித்து வாழ்வதைக் காட்டிலும் இறப்பது மேலானது என்பது அற வழியாகும். பிறருடைய குற்றங்களைப் பற்றி பேசுவதில் தன் காலத்தைச் செலவிடுபவன், காலத்தை வீணாக்கிய வன் ஆகிறான். அப்படி செலவிடப்பட்ட காலம், தன்னைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ சிந்திக்கப்படாமல், பிறரைப் பற்றி எந்த ஒரு பயனும் இல்லாமல் சிந்திக்கப்பட்டது, என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். குறை சொல்வதை அடியோடு விட்டுவிட வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறுவதே சர்வ நாசத்திற்கும் மூலகாரணம். பிறரை ரகசியமாக நிந்திப்பது பெரும் பாவம். இதை அடியோடு விட்டுவிட வேண்டும், என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar