Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குரு மகிமை
 
பக்தி கதைகள்
குரு மகிமை

வாழ்க்கையில் முன்னேறணும், நற்கதியை அடையணும் என்றால் அதுக்கு குரு கடாட்சம் வேணும். கடவுள்கிட்ட இவர்களுக்கு நற்கதியை கொடு என்று கேட்பவர் குருதான். குருவை நாம் தெய்வமாக தான் பார்க்க வேண்டும். நமக்கு அறிவைக் கொடுப்பது நம் ஆசிரியர்கள், ஞானத்தைக் கொடுப்பது குருதான். பல சமயங்களில் குருவே ஆசிரியர்களாகவும் விளங்குவார்கள்.

நமக்கு எது சரி, எது தப்பு, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாதுன்னு தெரியாது. ஆனால், தெரிந்தே பல தப்புகளை நாம் செய்கிறோம். ஒரு தவறு பண்ணினோம் என்றால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். தண்டனை கிடைத்த பிறகு நாம் இப்படி பண்ணிட்டோமே என்று நினைத்து வேதனைப்படுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதெல்லாம் சரி; இதெல்லாம் தப்புன்னு நமக்கு யாரு சொல்லிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள் தான். குருவா இருந்து நாம் இதெல்லாம் கடைபிடிக்கணும் அவர்கள்தான் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கார்கள் அவர்கள் சொன்ன வழியில் அவர்கள் காட்டிய பாதையில் நாம் அப்படியே நடந்து போயிட்டா போதும்; வருத்தம் என்பதே வராது.

காஞ்சி மடத்தில் மகா பெரியவர் இருந்த சமயத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவருக்கு வாயில் புண்ணு வந்து அவரால் பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்தில் இருந்த ஒரு மாமி இப்படி பெரியவர் வாயில் புண்ணோடு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறதை பார்த்து, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதில் இருந்து வெண்ணெயை எடுத்து, வந்து பெரியவர்கிட்ட கொடுத்தாள். பெரியவர், என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே, எதுக்கு வெண்ணெய் என்று கேட்டார். நீங்க வாய் புண்ணோடு கஷ்டப்பட்டு இருக்கீங்க, இந்த வெண்ணையை நீங்க வாயில் வைத்தால் போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும் என்று வெண்ணெய் பண்ணி கொண்டு வந்தேன் என்று சொல்லி மாமி தொன்னையோடு இருந்த வெண்ணெய பெரியவர் முன்னாடி வைத்தாள். அப்போ திடீர் என்று ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும் ஓடி வந்து பெரியவரை பார்த்து சிரித்தது. பெரியவர் என்ன வேணும் என்று அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், அந்த வெண்ணெய் வேணும் என்று சொல்ல பெரியவர் அப்படியே தொன்னையோடு குழந்தைக் கிட்ட கொடுத்துவிட்டார்.

வெண்ணெய் கொண்டு வந்த மாமிக்கு கோபம், வருத்தம் எல்லாம் வருது. அங்க இருந்த சிப்பந்திகளுக்கும் கோபம், குழந்தை கேட்டா கொஞ்சமா கொடுத்திருக்கலாமே. அந்த குழந்தை பெரியவர் கொடுத்த வெண்ணையை சாப்பிட்டு விட்டு ஓடியே போய்விட்டது. எங்கே போனது, என்று யாருக்கும் தெரியலை. அடுத்த நாள் அதே மாமி மாலைநேரத்தில் மடத்துக்கு வந்தார். பெரியவர் மாமியை பார்த்து, என்வாய் புண் சரியாகி விட்டது. இப்போ எனக்கு நல்லா பேச முடியுது என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன என்று கேட்டார் பெரியவர். மத்தவங்க கஷ்டத்தை போக்கணும் நினைத்தாலே நம் கஷ்டம் போயிடும்.

குருவின் மீது சிரத்தையான பக்தி பண்ணனும். குரு அருள் கிடைச்சிட்டா போதும் திருவருள் நிச்சயம் கிடைச்சிடும். ஏகநாதருக்கு ஜனார்த்தன ஸ்வாமிநாதன் குரு. அப்படி ஒரு குரு பக்தி ஏகநாதருக்கு குரு என்ன சொல்றாரோ அதை அப்படியே கேட்பார். ஜனார்த்தன ஸ்வாமிக்கு அதனாலேயே ஏகநாதர் மேல் தனி பிரியம். கைங்கர்ய காரியங்களுக்கு அதனாலே ஏகநாதரை அவர் சேர்த்துக் கொண்டார். தினமும் அவர் வழிபடும் அவரோடு குருவான தத்தாத்ரேயர் சிலைக்கு தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்யுறதுக்கும் சரி; நிவேதனம் செய்ய தேவையான பலகாரம் செய்யுறதுக்கும் சரி; ஏகநாதரை கோதாவரிலேர்ந்து தண்ணீர் எடுத்து வர சொல்லி, அதனாலேயே கேட்பார்.

குரு வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டார் ஏகநாதர். குரு சொன்னதால் தினமும் பக்தி சிரத்தையோடு கோதாவரிலேர்ந்து பெரிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார் ஏகநாதர், இவ்ளோ சிரத்தையா இந்த சிஷ்யன் இருக்கிறானே, இவனுக்கு தெய்வ தரிசனத்தை காண்பிக்கனும் என்று முடிவு பண்ணி ஜனார்த்தன ஸ்வாமி, மானசீகமா தத்தாத்ரேயரை நினைத்து ஏகநாதர் போற வழியில் இருக்கும் ஆல மரத்தின் மீது நீங்க உட்கார்ந்து கொண்டு, ஏகநாதர் தண்ணீர் கொண்டு வரும்போது கீழே வந்து அவருக்கு தரிசனம் தரணும் என்று கேட்டார். அடுத்த நாள் ஏகநாதர் கோதாவரிலேர்ந்து தண்ணீர் எடுத்து கொண்டு வரும்போது தத்தாத்ரேயர் மரத்துலேர்ந்து கீழே குதித்து வந்து மூன்று முகத்தோடு (சிவன் பிரும்மா, விஷ்ணு) தரிசனம் தர ஏகநாதர், என் குருவுக்கு நான் தண்ணீர் எடுத்து கொண்டு போகணும், நேரம் ஆகிறது என்றார். உடனே தத்தாத்ரேயர் நான் யாரு என்று தெரியலையா என்று கேட்க, நீங்க யாரா இருந்தா எனக்கென்ன? என் குருவுக்கான பணிகளை செய்ய நான் போயிட்டு இருக்கேன் சொன்னார் ஏகநாதர். அவருடைய குரு பக்தியை மெச்சி, அவருக்கு ஆசி கொடுக்கிறார் தத்தாத்ரேயர்.

அன்னிக்கு அபிஷேகத்தை எல்லாம் முடித்துவிட்டு ஏகநாதரைப் பார்த்து, இன்னிக்கு தரிசனம் கிடைத்ததா என்று கேட்கிறார் ஜனார்த்தன ஸ்வாமி. நான் தான் தினமுமே பார்த்துட்டு இருக்கேனே என்று சொல்கிறார் ஏகநாதர். வழியில் மூன்று முகத்தோடு வந்தவரை நீ பார்க்க வில்லையா என்று அவர் கேட்க, ஏகநாதர் எனக்கு கடவுளே நீங்கதான் என்னிக்காவது கடவுளை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்து என்று நான் கேட்டிருக்கேனா? என்கிறார் ஏகநாதர். தத்தாத்ரேயர் தரிசனம் கிடைக்க தவமிருக்கா பல பேர், அந்த தத்தர் தரிசனம் தந்த போதும் தம் குரு சொல்லே முக்கியம் என்று இருந்தார் ஏகநாதர். அந்த குரு பக்திதான் தத்தாத்ரேயரை தரிசனம் தர வைத்தது. அப்படியொரு குரு பக்தி அனைவருக்கும் அமைந்தாலே அவர்களுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் அமையும். அவர்களுக்கு மட்டுமின்றி அனைவரோடு சந்ததிகளுக்கும் அமையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar