Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உயிரின் நிலை!
 
பக்தி கதைகள்
உயிரின் நிலை!

மனம் எப்போது நண்பனாக இருக்கிறது; எப்போது பகைவனாகிறது என்று விவரித்த பகவான், எப்படி அதை முறைப்படுத்துவது என்று விவரிக்கிறார்.

பந்துராத்மாத்மாத்மநஸ்தஸ்ய
யேநாத்மைவாத்மநா ஜித:
அநாத்மநஸ்து ஸத்ருத்வே
வர்த்தேதாத்மைவ ஸத்ருவத் (ஸ்ரீமத்பகவத்கீதை 6-6)

தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே நண்பன். தன்னைத்தான் வெல்லாதவனுக்குத் தானே பகைவன். தானே தனக்கு நண்பன். தானே தனக்குப் பகைவன் என்கிறார் பகவான். இது எப்படி ஸாத்தியமாகும்? ஒருவர் நண்பராக இருக்கலாம் அல்லது பகைவராக இருக்கலாம். ஆனால், ஒரேநேரத்தில் நண்பராகவும் பகைவராகவும் எப்படி இருக்க முடியும்? தான் என்பது இங்கு உடல்மனக் கூட்டமைப்பைக் குறிக்கும். தனது உடல், மனக்கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே அறமாகும். தன்னைக் கட்டுதல் அறம் என்பார் மகாகவி பாரதியார். உடலையும் மனதையும் பொறிகளையும் நண்பர்களாகக் கருதி, அவை கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், அவை நம்மை ஆளத் தொடங்கிவிடும். மனம் கேட்பதையெல்லாம் கொடுத்து, அதனைக் கெடுப்பவன் மிருகத்துக்கு ஒப்பானவன்.

துறவிகளை ஸ்வாமீ என்று அழைக்கிறோம். ஸ்வம் அமீ ஸ்வாமீ- தன்னை ஆள்பவருக்கே ஸ்வாமீ என்று பெயர். தனது உடலையும் உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் மிக அரிதான செயல் அதனால்தான், செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். என்று குறிப்பிட்டார் திருவள்ளுவர். நாவடக்கம் வேண்டும். நாவடங்க நாலும் அடங்கும் என்பர். உணவுக் கட்டுப்பாடும், பேசுகின்ற சொற்களில் கட்டுபாடும் மிகத் தேவை. பயனில சொல்லாமை, புறங்கூறாமை, வாய்மை, அடக்கமுடைமை எனப் பல்வேறு அதிகாரங்களைத் திருவள்ளுவர் அருளியிருக்கிறார்.

தனது உடலையும் உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாதவரால், வேறு எதையும் நிர்வகிக்க முடியாது. உடல், மனம், பொறிகள் அனைத்தும் கருவிகள். எந்தக் கருவியையும் ஆக்கத்துக்கும் பயன்படுத்த முடியும், அழிவுக்கும் பயன்படுத்த முடியும். கத்தி என்ற ஆயுதத்தைக் கொண்டு பழங்களை நறுக்கலாம்; ஒருவரது கையையும் வெட்டலாம். ஆயுதம் தன்னளவில் நல்லதுமல்ல; தீயதுமல்ல. அதை பயன்படுத்துபவரின் நோக்கத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் விளைகின்றன. கடோபநிஷத் வாழ்க்கையின் குறிக்கோளையும், அந்தக் குறிக்கோளை அடைவதற்குரிய வழிமுறையையும் ஒரு தேர்ப் பயணத்தோடு ஒப்பிட்டு உருவகப்படுத்துகிறது. உயிராகிய ஜீவாத்மாதான் பயணி. நிலையான பேரின்பமே பயணத்தின் குறிக்கோள். உடலே பயணத்துக்குரிய வாகனம். மெய், வாய், கண், மூக்கு, செவி- ஆகிய ஐம்பொறிகளே குதிரைகள். புத்தியே அந்தக் குதிரைகளைச் செலுத்துகின்ற ஸாரதி. மனமே கடிவாளக் கயிறு. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களாகிய விஷயங்களே பயணிக்கும் பாதை.

தேர் பயணத்தில் முக்கியமானவன் பயணிப்பவன். அவனுக்காகத்தான் பயணமே மேற்கொள்ளப்படுகிறது. பயணத்தின் குறிக்கோள் மிக முக்கியம். எங்கு செல்ல விரும்புகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். காரில் ஏறி, அமர்ந்துவிட்டு, எங்கோ போ என்று ஓட்டுனரிடம் நாம் சொல்வதில்லை. பயணி, பயணத்தின் குறிக்கோள். பயணத்துக்குரிய வாகனம், வாகனத்துக்குரிய பாதை, வாகனத்தைச் செலுத்துபவன் ஆகிய ஐந்தும் சரியாக இருந்தால்தான் பயணம் வெற்றிகரமாக அமையும். இதில் தெளிவான பார்வை இருக்க வேண்டும். புத்தியின் கட்டுப்பாட்டில் மனமும் பொறிகளும் இயங்க வேண்டும். உயிரானது இந்திரியங்களை ஒழுங்குபடுத்தி,  உடம்பையும், மனதையும் சரியாக வைத்துக்கொண்டால்தான் ஜீவாத்மாவே பரமாத்மா என்ற குறிக்கோளை உணர இயலும். உயிர் தன் கட்டுப்பாட்டில் புத்தி, மனம், உடல் இந்திரியங்களை வைத்திருக்குமானால் அவற்றுக்கு உடைமையாளனாகிறது. மாறாக இருந்தால் அவற்றுக்கு அது (உயிர்) அடிமையாகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar