Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுவாமி அத்புதானந்தர்
 
பக்தி கதைகள்
சுவாமி அத்புதானந்தர்

சத்தியத்தைத் தன் வாழ்வில் உணர்ந்த பிறகே சுவாமி விவேகானந்தர் ஆன்மிகப் போதனைகளைச் செய்தவர்.  நான் முதலில் அதை உணர்கிறேன். பின் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். தான் புரிந்து கொள்ளாமல், பிறருக்கு விளக்க முடியாது  என்று சுவாமிஜி கூறினார். சுவாமிஜி நன்கு உணர்ந்தால்தான் மக்கள் அவரது செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உன் பேச்சை மக்கள் ஏன் கேட்க வேண்டும்? முறையான அத்தாட்சி பெற்ற பிறகே ஒருவன் ஆசார்யனாக முடியும் அப்போதுதான் மக்கள் கேட்பார்கள் என்பது குருதேவரின் கூற்று அல்லவா! ஆம்! சுவாமிஜி அதைப் பெற்றவர். குருதேவர் அதை அவருக்கு அளித்தார். இறைவனிலேயே லயித்தவர்: சுவாமிஜியின் உள்ளம் இரவும் பகலும் இறைவனுக்காகவே கதறியது. அதை யாராலும் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. குருதேவர் மட்டுமே இதை அறிவார். ஒருநாள் சுவாமிஜி உரக்க அழுது கொண்டிருந்தார். இது குருதேவருக்குப் புரிந்தது. குருதேவர் சுவாமிஜியை அழைத்து, நீ சமாதி அனுபவம் பெறத்தானே அழுகிறாய்? என்று கேட்டார்

ஆம் என்றார் சுவாமிஜி. நான் உனக்கு மட்டும் அதைத் தருகிறேன். முதலில் நீ எனக்காகப் பாடுபடு. உனக்காக நான் எவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டிருக்கிறேன்! இப்போது நீ எனக்காகப் பாடுபடு. நான் உனக்காகச் செய்த சாதனைகளில் பதினாறில் ஒரு பங்கு அளவு மட்டும் நீ செய்தால், நான் உனக்குச் சவுகர்யமான மெத்தையை வழங்குகிறேன்  என்றார் குருதேவர். அவன் கடினமாக உழைக்க வேண்டும்: சுவாமிஜிக்குப் பிடித்த எந்த உணவை உண்ணவும் பருகவும் குருதேவர் ஒருபோதும் தடை விதித்ததில்லை. புகையிலை தயார் செய்வது, கால் கழுவ நீர் கொண்டு வருவது போன்ற எளிய சேவைகளை சுவாமிஜி செய்ய அவர் அனுமதிக்கமாட்டார். இந்த வேலைகளைச் செய்ய மற்றவர்கள் இருக்கிறார்கள். மிகச் சிறந்த பணிகளை சுவாமிஜி செய்ய வேண்டியிருந்தது. என்பதை குருதேவர் அறிந்திருந்தார்.

சுவையான உணவுப் பொருள்களைத் தந்து சுவாமிஜியை உண்ண வைப்பார். அவன் கடினமாக உழைக்க வேண்டும் என்பார் குருதேவர். யாரிடமும் கூறிவிடாதே இவன் அருமையை: குருதேவர் நரேனைப் பார்ப்பதற்காக அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்றார். நானும் (லாட்டு மகராஜ்) அவருடன் இருந்தேன். நான் வெளியில் செல்லப் புறப்பட்டேன். நீங்கள் தலா கூட்டுரோடு (சுவாமிஜி வீட்டிலிருந்து வெகுதொலைவிலுள்ள இடம் தலா) அருகில் வரும்போதே நான் உங்களை மனக்கண்ணால் பார்த்துவிட்டேன். அதனால்தான், நான் வெளியில் செல்லவில்லை என்றார் நரேன். இதைக் கேட்ட குருதேவர், இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று என்னிடம் கூறினார். ஆழ்ந்த தியானத்தால் சுவாமிஜி இந்த உன்னத நிலையைப் பெற்றிருந்தார். ஆம், அவரால் எதையும் பார்க்க முடியும்! தொலைதூரத்திலும் பிறர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறிவார்!

குருதேவருக்கு ஏன் இவ்வளவு அன்பு?

குருதேவரின் மகாசமாதிக்குப் பின் குருதேவர் உன்னைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசுவாரே! உன்னால் அதில் எதையாவது புரிந்துகொள்ள முடிந்ததா? என்று ஒவ்வொருவரும் சுவாமிஜியைக் கேட்டனர்! சுவாமிஜி, ஆம்! அவர் என்னைப் பற்றி உயர்வாகத்தான் பேசினார். மிகுந்த மரியாதையுடன் அவர் சொல்லை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுவரை நான் அதில் எதையும் புரிந்து கொள்ளவில்லை. முதலில் நான் புரிந்துகொண்டு, பின் உங்களுக்கு விளக்குகிறேன் என்றார். குருதேவரின் மறைவிற்குப் பிறகு சகோதரச் சீடர்களுள் பலர் வீடுகளுக்குத் திரும்ப யத்தனித்தனர். சுவாமிஜி அவர்களிடம், குருதேவர் உங்கள் எல்லோரையும் மிகவும் நேசித்தார். அதெல்லாம் நீங்கள் உலக வாழ்வை வாழ்வதற்காகவா என்ன? என்று கூறி மெதுவாக இழுத்து ஒவ்வொருவராக மீட்டுக் கொண்டு வந்து விட்டார். குருதேவரின் நரேன் பித்து: குருதேவரின் மறைவுக்குப் பின் நம் குருதேவருக்குத்தான் நரேனிடம் எவ்வளவு பித்து பிடித்துள்ளது? என்று கூறிய பலரும், சுவாமிஜி சிகாகோவில் உரையாற்றிய பிறகு குருதேவரின் கணிப்பு மிகவும் சரியானதே என்று புரிந்து கொண்டனர்.

ஸ்ரீசைதன்ய மகாபிரபு கூறியதற்கேற்ப நிதாய் வீடு தோறும் சென்று அன்பை வழங்கினார். ஜகாய் மற்றும் மதாய், பானையைக் கொண்டு அவர் தலையில் அடித்ததும் ரத்தம் பீறிட்டது. ஆனால் அவரோ எதையும் உணராமல் இறைநாமத்தைக் கூறிக்கொண்டிருந்தார். நீ எனக்கு நல்லதே செய்தாய்! ஹரியின் நாமத்தை ஒருமுறை கூறு. நடனமாடிக் கொண்டே என்னிடம் வா என்றார். அதுபோலத்தான். நீயும் நரேனின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல். நரேன் மட்டும் இல்லை என்றால், யார்தான் குருதேவரை உணர்ந்திருக்க இயலும்? அவர் மட்டுமே குருதேவரைச் சரியாகப் புரிந்துகொண்டவர் என்றேன் நான். (ஏன்? சுவாமிஜியைச் சரியாகப் புரிந்து கொண்டவர் குருதேவர் மட்டும்தான்.) நரேனுடையது ஆணவமல்ல, வீரம்: ஒருவர் குருதேவரிடம், நீங்கள் நரேந்திரனை மிகவும் நேசிக்கிறீர்கள். அதனால் அவன் ஆணவம் கொண்டு, தரையிலேயே கால் பதிப்பதில்லை என்றார்.

குருதேவர், அது ஆணவமில்லை, நரேனின் வீரம், அவன் மனம் கீழே இறங்குவதே இல்லை என்றார். நீ சரியாகத்தான் சொன்னாய்: ஒருமுறை சுவாமிஜி என்னிடம் சிரித்துக் கொண்டே, இதோ பார்! நான் குருதேவரின் பெயரை, அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் பரப்பிவிட்டேன். மேலைநாட்டவர்களெல்லாம் நமது மதத்திற்கு வருகின்றனர். ஓ! லேட்டோ, நீ என்ன சொல்கிறாய்? என்றார். சகோதரா! நீ என்ன புதிதாகச் செய்துவிட்டாய்? உனக்கு முன்னால், சங்கராச்சாரியரும், புத்தரும் போதித்தார்கள். நீ அவர்களுடைய வழியில் சென்றாய். அவ்வளவு தானே! என்று நான் சொன்னேன். உடனே சுவாமிஜி அகமுகமாகி, நீ சரியாகத்தான் சொன்னாய் என்றார். பிரம்மசர்யத்தில் நிலைத்தவர்: சுவாமிஜி அமெரிக்காவில் இருந்தபோது, அழகும், செல்வமும், நிறைந்த ஒருத்தி இவரை மணந்து கொள்ள விரும்பினாள்.

சுவாமிஜியோ, நீ என்னம்மா, சொல்கிறாய்? நான் ஒரு துறவி எல்லாப் பெண்களும் எனக்கு என் தாய் போன்றவர்கள். நான் பிரம்மசரிய விரதம் பூண்டவன். நான் திருமணம் செய்து கொள்வதா? மேலும், எனது குருநாதர் பெண்ணையோ, பொன்னையோ தொட்டதே கிடையாது  என்று பதிலளித்தார்.  எப்படிப்பட்ட தன்னடக்கம்! எவ்வளவு உயர்ந்த துறவறம்? அவரது போதனை- இவரது வாழ்க்கை: குருதேவர் மற்றும் சுவாமிஜியின் வாழ்க்கையை உற்றுப்பார். அவர்களுடைய அறிவுரைகளைக் கடைப்பிடி. எளிமையானதாகத் தோன்றினாலும் குருதேவரின் மொழிகள் யாவும் ஆழ்ந்த கருத்துடையவை. எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவை. இதெல்லாம் நாங்கள் முன்னம் அறியவே இல்லை. குருதேவர் கூறுவார். நாங்கள் கேட்போம்! அதனுள் இத்தனை ஆழமான பொருள் பொதிந்துள்ளதை அறியவே இல்லை. சுவாமிஜி அவற்றை எடுத்துக் கூறும்போது நாங்கள் வியந்து போனோம். அதனால்தான் கூறுகிறேன். குருதேவரின் அமுதமொழிகளைக் கேள், சுவாமிஜியின் வாழ்வைப் படித்து உணர். அதுவே உனக்கு நன்மை தரும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar