Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முன் ஜென்ம வினை!
 
பக்தி கதைகள்
முன் ஜென்ம வினை!

அன்று அதிகாலையிலேயே எழுந்து, வில்லைத் தோளில் மாட்டிக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான் வேடன் அர்ஜுனகன். காடு தொடங்கும் இடத்தில் ஒரு அழகிய குடிலைக் கண்ட அவன், யாரோ ஒரு முனிவர் இங்கு விஜயம் செய்திருக்கிறார். அவரிடம் ஆசி பெறுவோம் என்று அக்குடிலுக்குள் நுழைந்தான். அங்கே, ஒரு பெண் இறந்த ஒரு சிறுவனை மடியில் கிடத்தி, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். தாயே! தாங்கள் யார்? இந்தச் சிறுவன் எப்படி, எப்போது இறந்தான்? எனக் கேட்டான். ஐயா, என் பெயர் கவுதமி. இவன் என் புதல்வன். இவன் மடிந்து சில நிமிடங்களே ஆகின்றன. பாம்பு தீண்டியதால் மடிந்தான் என்றாள் அப்பெண். கடித்த நாகத்தைக் கண்டுபிடித்துத் தூக்கி வந்தான் வேடுவன். அம்மணி! இதுதான் உங்கள் பிள்ளையைக் கொத்தியிருக்க வேண்டும். இதை தீயிலிட்டுப் பொசுக்கவா? தரையிலடித்துக் கொல்லவா? எனக் கேட்டான்.

இந்த சர்ப்பத்தைக் கொன்றாள் என் பிள்ளை உயிர் பெற்று எழுந்துவிடுவானா? உயிரைக் கொல்வது பாபம் என்று வேதம் சொல்கிறது. அதை விட்டு விடு என்றாள். கவுதமி. ஒரு ஜீவனைக் கொல்வது பாவம் என்றால் உங்கள் மைந்தனை இந்த சர்ப்பம் கொன்றது பாபமில்லையா? என வாதிட்டான் வேடன் அர்ஜுனகன். இதைக் கேட்ட நாகம், தாயே! தங்கள் மகனைக் கடித்தது நான்தான்! எமதர்மன் கட்டளைப்படிதான் நான் நடந்துகொண்டேன். பல உயிர்களை நித்தமும் வேட்டையாடிக் கொல்லும் வேடன் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுகிறான் எனப் பாம்பு நகைத்தது. எமன் கட்டளை உன்னைக் கொல்வது என நினத்துக்கொள். உணவுக்காக வேட்டையாடுவது என் தொழில், உன் நஞ்சை நீ பாழ் நிலத்திலோ, பாறையிலோ இறக்கியிருக்கலாமல்லவா? என சினத்தோடு கேட்டான் வேடுவேன்.

அப்போது பெரிய பிரகாசமொன்று குடிலுக்குள் தோன்ற, எமதர்மர் அங்கு வந்தார். வேடுவனே! இந்த நாகம் சொன்னது மெய். காலதேவரின் கட்டளைப்படியே நான் உயிர்களின் கணக்கைத் தீர்மானிக்கிறேன் என்றார் யமதர்மர். அடுத்த, விநாடி அங்கே காலதேவர் தோன்ற, வேடனும், கவுதமியும் அவரை வணங்கினர். வேடனே! எத்தீமையும் செய்யாத ஒரு அப்பாவியை இச்சிறுவன் போன பிறவியில் கொன்றதாலேயே அவனுக்கு இம்மரணம் வாய்ந்தது. அந்த அப்பாவியே இந்த நாகமாய் பிறந்திருக்கிறது. ஒரு ஜன்மாவில் செய்யும் பாப புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியும், மரணமும் வாய்க்கிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்ற உன் கருணை உள்ளமும், கவுதமியின் இரக்க சுபாவமும், போன பிறவியில் நீங்கள் இருவரும் செய்த நல்வினைகளும் எங்களின் தரிசனத்தைக் காணக் கொடுத்தது. சர்ப்பத்தை விட்டுவிடு என்றார் காலதேவர். வேடன் நாகத்தை விடுவித்தான். அன்று முதல் வேடன் அர்ஜுனகன் வேட்டையாடும் தொழிலை விட்டு, விறகு வெட்டிப் பிழைத்தான். கூடியவரை பிறருக்கு உதவினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar