Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் யார்?
 
பக்தி கதைகள்
ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் யார்?

பிரம்மபாந்தவர், வங்காளத்தின் சிறந்த தேச பக்தர். குருதேவர் மற்றும் சுவாமிஜியைப் பற்றி அவர் எழுதியதிலிருந்து. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சதேவரே! அனைத்து ஆன்மிகப் பொக்கிஷங்களாலும் முடிசூட்டப்பட்டிருப்பவர் நீங்களே என்பதை நான் கண்டு கொண்டேன். நீங்கள் ஓர் எளிய, ஏழை பிராம்மணர் போன்று வெளியே தோன்றுகிறீர்கள். ஆனாலும் பூரண தெய்விக அமைதி நிறைந்த உங்கள் கண்களிலிருந்து நீங்கள் யார்? என்பதை நான் கண்டு கொண்டேன். நீங்கள் படிப்பறிவற்றவர் போல் தோன்றினாலும், நீங்களே வேதங்களின் பாதுகாவலர் என நான் புரிந்துகொண்டேன். இல்லையென்றால் வேத வேதாந்தங்களின்  செய்தி, வேறு யாரிடமிருந்து இவ்விதம் அமுதமொழிகளாக ஊற்றெடுக்கும்?

இறைவனாகிய நீங்கள் எப்போதும் லீலையை விரும்புகிறீர்கள். நீங்கள் இந்த முறையும் சராசரி மனிதன் என்று உங்களை நாங்கள் நினைக்க வேண்டும் என்று விரும்பினீர்கள். ஆனால் உங்கள் லீலையை நாங்கள் இந்த முறை புரிந்துகொண்டோம். இறைவா, உங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம். நீங்களே ஸ்ரீராமகிருஷ்ணர் என்பது உண்மை. ஏனெனில் ராமரும் கிருஷ்ணரும் ஒன்றானவர் அல்லவா நீங்கள்? சகோதரர்களே! ஸ்ரீராமகிருஷ்ணர் யார்? என்று உங்களுக்குத் தெரியுமா? எப்போதெல்லாம் பழைய யுகம் அழிந்து புதிய யுகம் தோன்றுகிறதோ - அப்போதெல்லாம் பகவான் விஷ்ணு அவதாரம் செய்கிறார். இந்த அழிவற்ற உண்மையை துவாபரயுகத்தின் முடிவில் கலியுகத்தின் துவக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணா (கீதை-4.8) நமக்கு வழங்கினார்:

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன். இந்துக்களே! நீங்கள் அறிவீர்களா? ஸ்ரீராமகிருஷ்ணர்  என்று இன்று மக்களால் அறியப்படுபவரே அந்த பகவத்கீதை வாக்குறுதியின் நிறைவாக இந்த யுகத்தில் தோன்றியவர். நமது முயற்சிகளாலும் எல்லைக்குட்பட்ட நமது சக்தியாலும் அடைய இயலாத ஆன்மிகச் செல்வத்தை நமக்கு அளிப்பதற்காகவே. அவர் இந்த உலகத்திற்கு வந்தார். நமது இந்துக் கலாச்சாரம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. அது இந்த யுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதத் திருவடிகளுக்குக் கடன்பட்டிருக்கிறது. இந்துக்களின் லட்சியம், இந்துக்களின் ஞானம், இந்துக்களின் பண்பாடு ஆகியவற்றைத் தமது சொந்த வாழ்வில் வெளிப்படுத்துவதன் மூலம் அவற்றைப் புதுப்பிப்பதற்காகவே ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார்.

இதுதான் வேதாந்தத்தின் கொடி அமெரிக்காவில் உயர்ந்ததற்குக் காரணமாகும். இதுதான் இந்து சாஸ்திரங்கள் மேன்மேலும் மதிப்புடன் இங்கிலாந்தில் பார்க்கப்படுவதற்கும் காரணம். இந்துக்களே! உங்கள் இந்து சமுதாயத்தைப் பின் தொடர்ந்து வருவதற்கு எத்தனை ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் ஊக்கத்தோடும் ஆவலோடும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலேயர்களே! இது உங்கள் கல்வியால் - அடிமைகளை உருவாக்கும் உங்கள் கல்வியால் ஏற்படவில்லை. இவை எல்லாவற்றிற்கும் பின்னால், அந்த பிராம்மணரின் (ஸ்ரீராமகிருஷ்ணரின்) கருணை இருக்கிறது. என்பதை நிச்சயமாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சுவாமி விவேகானந்தர் நான் போல்பூருக்குச் சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அங்கிருந்து திரும்பும்போது, கொல்கத்தா, ஹௌரா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன். அப்போது யாரோ ஒருவர், சுவாமி விவேகானந்தர் நேற்று காலமாகிவிட்டார்! என்று கூறினார்.

அதைக் கேட்டதும், என் இதயத்தைக் கூர்மையான கத்தியால் குத்தியது போன்ற கடுமையான வலியை நான் உணர்ந்தேன் - இதை நான் சிறிது கூட மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அந்த வயலின் தீவிரம் சற்றுக் குறைந்தபோது நான், விவேகானந்தரின் பணி இனிமேல் எப்படித் தொடர்ந்து நடைபெறும்? ஏன்...? அவரிடம் நன்கு கல்வி கற்ற சக சீடர்கள். நன்கு பயிற்சி பெற்ற சீடர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் அவரது பணியைச் செய்வார்கள் என்றும் நினைத்தேன். இருந்தாலும் என் உள்ளத்தில் ஓர் உத்வேகம் தோன்றியது. என்னிடம் இருப்பதைக் கொண்டு சிறந்த முறையில் விவேகானந்தரின் கனவாகிய - மேலை நாட்டை ஆன்மிகத்தில் வெற்றி கொள்ளும் பணியை உடனே செயல்படுத்துவேன்! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.

அந்த விநாடியே, நான் இங்கிலாந்து செல்வேன் என ஒரு சபதம் எடுத்துக்கொண்டேன். அது நாள்வரை நான் இங்கிலாந்து செல்வது பற்றி, கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் அன்று ஹௌரா ரயில்வே ஸ்டேஷனில், நான் இங்கிலாந்துக்குக் கட்டாயம் சென்று, அங்கு வேதாந்தத்தை நிறுவ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அப்போதுதான் எனக்கு, சுவாமி விவேகானந்தர் யார்? என்று புரிந்தது. என்னைப் போன்ற மிகவும் சாதாரண ஒருவனை, கடல் கடந்து செல்வதற்குத் தூண்ட முடியுமானால் - அவர் உண்மையில் ஒரு சாதாரண மனிதர் அல்ல. வேதாந்தத்தின் தாக்கம்
விரைவில் நான் இங்கிலாந்துக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டேன். அப்போது என்னிடம், வெறும் இருபத்தேழு ரூபாய்தான் இருந்தது. இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் வேதாந்தம் குறித்துச் சொற்பொழிவுகள் செய்தேன். புகழ் பெற்ற பிரிட்டிஷ் அறிஞர்கள் அந்தச் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு, இந்து அறிஞர்களைப் பல்கலைக்கழகங்களில் நியமித்து வேதாந்தம் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளியிட்டார்கள்.

அந்த அறிஞர்கள் எனது வேதாந்தச் சொற்பொழிவுகளைப் பாராட்டி, எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள். அந்தப் பாராட்டுக் கடிதங்களை நான் இன்று வரையில் பிரசுரிக்கவில்லை. அந்தக் கடிதங்களை நான் வெளியிட்டிருந்தால், இங்கிலாந்தில் வேதாந்தத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன். இது போன்ற மகத்தான ஒரு பெரிய பணி என்னால் செய்து முடிக்கப்பட்டது என்பது ஒரு கனவுபோல் இருக்கிறது. எனக்குப் பின்னால் இருக்கும் விவேகானந்தரின் ஆற்றலும், அவரால் நான் பெற்ற எழுச்சியும் தான் இந்த அற்புதங்களை நடத்தியது என்று நான் நம்புகிறேன். அதனால்தான் சில சமயங்களில் நான், யார் இந்த விவேகானந்தர்? என எண்ணிப் பார்க்கிறேன். துணிச்சலுடன் அவர் ஆரம்பித்த பிரம்மாண்டமான பணியை நினைக்கும்போது அவரது பெருமையை அளவிடும் சக்தி எனக்கு இல்லை என்பதை உணர்கிறேன்.

விவேகானந்தரின் இதயம் ஒருமுறை நான், கல்கத்தாவில் ஹேதுவா பூங்கா அருகில் விவேகானந்தரைச் சந்தித்தேன். அப்போது நான்அவரிடம், சகோதரரே. ஏன்அமைதியாக இருக்கிறீர்கள்? கல்கத்தாவில் நீங்கள் வேதாந்த முழக்கம் செய்யுங்கள். நான் அதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். நீங்கள் வந்து மக்கள் மத்தியில் தோன்றினால் போதும்.... என்று கூறினேன். அதற்கு அவர் கவலையுடன் என்னிடம் சகோதரா, பவானி! நான் இந்த உலகில் நீண்ட நாள் வாழ மாட்டேன். (இந்த உரையாடல் அவர் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.) நான் ஸ்ரீராமகிருஷ்ணமடத்தை உருவாக்குவதிலும், அது நிலைத்திருப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதிலும் இப்போது மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு இப்போது ஓய்வு நேரம் இல்லை என்று கூறினார். அவரது சொற்களில் மனதை நெகிழச் செய்யும் உணர்வு இருந்தது. அதைக் கேட்டு நான், அவரது இதயம் நாட்டின் நன்மைக்காக மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டேன்.

யாருக்காக அவருடைய மனம் துடிதுடித்தது? யாருக்காக அவர் கவலைப்பட்டார். நாட்டின் நன்மைக்காக அவர் மனம் துடிதுடித்தது. நாட்டிற்காக அவர் கவலைப்பட்டார்? இந்துக்களின் ஞானமும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்தூலமாகவும் இந்து மதத்திற்கு எதிரானதாகவும் இருக்கக்கூடியவை சூட்சுமமான, உயர்ந்த இந்து மதத்தைச் சிறிது சிறிதாக வலிமை இழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எந்த எதிர்வினையும், கவலையும் இல்லாமல் இருக்கும் இந்தியர்களின் இந்த அலட்சியம் - விவேகானந்தரின் இதயத்தில் ஆழமான வலியை ஏற்படுத்தியது. அந்த அவரது மனவேதனை அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் மனசாட்சியைத் தொட்டுத் தாக்குமளவுக்கு ஆழமாக இருந்தது. விவேகானந்தர் தியானம்

விவேகானந்தர் அந்த வலியையும் உணர்ச்சியையும் பற்றி நான் நினைக்கும்போது, யார் இந்த விவேகானந்தர்? என்று நான் என்னைக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரிடம் தாய்நாட்டின் நன்மைகள் பற்றிய சிந்தனைகள் ஓர் உருவம் பெற்றால், அப்போது அவர் விவேகானந்தரைப் புரிந்து கொள்ள முடியும். சுவாமிஜி! நான் உங்கள் இளமைக்கால நண்பன். உங்களுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன்! உங்களுடன் நான் சுற்றுலா சென்றிருக்கிறேன். மணிக்கணக்காக உரையாடியிருக்கிறேன். ஆனால் அப்போது உங்கள் ஆன்மாவில் ஒரு சிங்கத்தின் ஆற்றல் இருந்ததும். இந்தியாவின் நன்மைக்காக உங்கள் உள்ளத்தில் ஒரு எரிமலையைப் போன்ற உணர்ச்சி இருந்ததும் எனக்குத் தெரியவே இல்லை.

நான் இன்று, மிகவும் பணிவுடன் உங்களைப் பின்பற்றுபவனாக இருக்கிறேன். இந்தக் கடுமையான போராட்டத்தில் எப்போதெல்லாம் நான் அலைக்கழிக்கப்படுகிறேனோ - எப்போதெல்லாம் மனம் சோர்ந்து போகிறேனோ - அப்போதெல்லாம் நான் உங்களால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் லட்சியத்தை என் மனக்கண்முன் நிறுத்தி, உங்களது சிங்கம் போன்ற ஆற்றலை நினைவு கூர்ந்து, உங்கள் வேதனையின் ஆழத்தின் மீது தியானம் செய்கிறேன். அப்போது என் சோர்வுகள் அனைத்தும் உடனே நீங்கிவிடும். எங்கிருந்தோ ஒரு தெய்வீக ஒளியும், தெய்விக ஆற்றலும் வந்து என் இதயத்தை நிரப்புகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar