Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வழிகாட்டிய வானர வீரர்!
 
பக்தி கதைகள்
வழிகாட்டிய வானர வீரர்!

ராமர் கோவிலுக்குச் சென்ற துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்டநேரம் கழித்தே கண் விழித்தார். நள்ளிரவு ஆகி விட்டது. அதன் பின் காட்டுப்பாதையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு புளியமரத்தைக் கடக்கும் போது திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் அப்படியே நின்று விட்டார். துளசிதாசா.. பயப்படாதே என்று குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். ஏதும் தென்படவில்லை. நான் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டேன் என்றது அக்குரல் நீங்கள் யார் என்று கேட்டார் துளசிதாசர். நான் ஒரு வேதம் கற்ற அந்தணன். கற்ற வித்தையைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்காத பாவத்தால், பேயாய் அலைகிறேன். நீயும் என்னைப் போல வேத சாஸ்திரத்தில் வல்லவனாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமானால் செய்கிறேன், என்றது அந்தக் குரல். ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம், என்றார் துளசிதாசர். இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் ஒரு வழி சொல்கிறேன். நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. அங்கே முதியவர் வேடத்தில் ஆஞ்சநேயரும் தினமும் வருகிறார். . அவரைப் பார்த்தால் விருப்பம் நிறைவேறும் என்றது அக்குரல். துளசிதாசர் அந்த குரலுக்கு நன்றி சொன்னார்.

மறுநாளே நாராயண க்ஷேத்திரம் சென்றார். ராம பட்டாபிஷேக வர்ணனை நடந்தது. துளசிதாசர் அங்கு இருக்கும் கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். இவர் தான் ராமபக்தரான ஆஞ்சநேயர் என்று துளசிதாசரின் மனதிற்கு தோன்றியது. கூட்டம் கலைந்ததும், துளசிதாசர் முதியவரைப் பின் தொடர்ந்தார்.  அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள், என்று வேண்டினார். துளசிதாசருக்கு ஆசியளித்த முதியவர்,சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும் என்று சொல்லி மறைந்தார். அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திரகுகைக்குப் பயணமானார். அங்கு தங்கி ராமனை தியானித்து வந்தார். ஒருநாள் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், துளசிதாசா! நாளையே ராமனையே தரிசிக்கும் பேறு பெறுவாய் என ஆசியளித்தார். மறுநாள் அதிகாலையில் எழுந்த துளசிதாசர் நீராடி தயாரானார்.  சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து விட்டு வாசலில் காத்திருந்தார். அவரை நோக்கி கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவன் வடிவில் ராமனே நேரில் வந்தார்.  துளசிதாசர் மெய் மறந்து நின்றார். அவரிடம்,எனக்கு தாங்கள் சந்தனத் திலகம் இடுவீர்களா? என்று கேட்டான் சிறுவன். சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர், நெற்றியில் திலகமும் இட்டார். ராமரை தரிசிக்க தனக்கு வழி காட்டிய வானர வீரருக்கு மனதால் நன்றி சொன்ன துளசிதாசர், ராமசரித மானஸ் என்னும் ராõமயண காவியத்தை இந்தியில் எழுதினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar