Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குருவையே வென்ற சீடர்!
 
பக்தி கதைகள்
குருவையே வென்ற சீடர்!

கங்காதேவியின் மகனான பீஷ்மர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த திருமண சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி தேரில் ஏற்றிச்சென்றார் பீஷ்மர். அவர்களில் அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால், தன்னை அங்கே அனுப்பிவிடும் படி கூறினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்து விட்டான். மீண்டும் பீஷ்மரிடம் திரும்பிய அம்பை, தன்னை அவரே மணக்கும்படி வேண்டினாள். அவரோ தன் தந்தையின் நலன் கருதி திருமணமே செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்திருப்பவர். எனவே அவளை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி சென்றாள். பரசுராமரும் அவளை மணம் முடிக்கும்படி பீஷ்மரைக் கேட்டுக் கொண்டார். பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட பரசுராமர் தனது பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார். பீஷ்மரோ தன் குருவையே வென்று விட்டார். தோல்வியடைந்த பரசுராமர் அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார். குருவே சொன்னாலும்கூட ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு, பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு உதாரணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar