Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொர்க்கம் உங்கள் பகுதியில்!
 
பக்தி கதைகள்
சொர்க்கம் உங்கள் பகுதியில்!

நம்மை பெற்றெடுத்த தாயும், தந்தையும் தெய்வமாக கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் அறிவோம்.  பெற்றோர்களுக்கு அடுத்ததாக இடம் பெறுபவர் குரு. அந்தக் காலத்தில் மாணவர்கள் குருகுலத்தில் தங்கி பாடங்களை படிப்பார்கள். இன்றைய பாட முறையில் நம் மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குருக்கள் அமைகிறார்கள். இவர்களில் சிலர் மட்டும் நம் மனதில் ஆழ்ந்து பதிகிறார்கள். மற்ற குருக்களை காலப்போக்கில் மறந்து விடுகிறோம். குரு என்பவர் யார்? தெய்வத்திற்கும் மேலே மகத்துவம் பெற்றவர். பூஜிக்கத் தகுந்தவர். பள்ளிகள், கல்லுõரிகள் என்றில்லாமல் மற்ற வகையில் நமக்கு ஒருவர் குருவாக இருக்க முடியுமா? இந்த நினைப்புடன் நான் வீடு திரும்பும் பொழுது என்னை வரவேற்க தன்னுடைய நாலு காலுடன் நின்று கொண்டிருந்தான் என்னுடைய வளர்ப்பு மகன் லக்கி. தன்னுடைய சந்தோஷத்தையும், வரவேற்பையும் எனக்கு உணர்த்த அந்த வாயில்லாத ஜீவன் தன் வாலை மிகவேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் ஆட்டுகிற ஆட்டில் வால் உடைந்து போய் விடுமோ என்று நினைத்துக்கொண்டே அவனை தடவிக்கொடுத்து சிறிது நேரம் கொஞ்சினேன்.

அவனுக்கு தண்ணீரும், பாலும் கொடுத்தேன். என் காலையே சுற்றிக்கொண்டு அவன் என்னை கூர்ந்து கவனித்ததை நான் உணர்ந்தபோது என்னுடைய குரு யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்த மாதிரி இருந்தது. பாசம், நன்றி, விழிப்புணர்வு, சுறுசுறுப்பு ஆகியவற்றை எனக்கு கற்றுத் தந்த லக்கியே ஏன் என்னுடைய குருவாக இருக்க முடியாது! அப்படியானால், அவனுக்கு நான் தெய்வத்தை விட ஏன் உயர்ந்த இடத்தை கொடுக்கவில்லை? என் மகன் வீட்டுப் பாடமாக ஏதாவது ஒரு பிராணியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று சொல்லிக்கொண்டு என் உதவி கேட்டு வந்தான். நாய்களைப் பற்றி அவன் முன்பே எழுதியிருந்ததால், வேறு எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கும் பொழுது ஒரு சிலந்தி வலை கண்ணில் பட்டது. எவ்வளவு சிரமப்பட்டு வித விதமான வலைகளை தன்னுடைய சொந்த முயற்சியால் அது தயார் செய்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சிறு வயதில் படித்த ஸ்காட்லாந்து மன்னர் ராபர்ட் த ப்ரூஸ் கதை ஞாபகத்திற்கு வந்தது.  இங்கிலாந்து மன்னருடன் ஆறு முறை போர் நடந்தபோது, ப்ரூஸ் தோல்வி அடைந்தார். தன்னுடைய படைகளையும், நம்பிக்கையையும் இழந்த ப்ரூஸ் மனம் தளர்ந்து, காட்டில் ஒரு குகையில் தங்கி இருந்தார். அந்தக் குகையில், ஒரு சிலந்தி வலை கட்ட முயற்சிப்பதை நோக்கினார். குகையின் ஒரு சுவரிலிருந்து மற்றொரு சுவர் வரைக்கும் தன்னுடைய வலையைப் பொருத்த முயன்று கொண்டிருந்தது. ஆனால், ஆறு முறை முயற்சித்தும் சிலந்தியின் நுõல் போதாமல் அறுந்து விழுந்தது.

முயற்சியை விடாமல் ஏழாவது முறையாக முயன்று சிலந்தி தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற்றது. ஆம்... விடாமுயற்சியால், சிலந்தி தன் செயலில் வெற்றி பெற்றது. பகவானே! சிலந்தி என்ற ஒரு குருவை என்னிடம் அனுப்பிவைத்து, முயற்சியை கை விடாதே என்று கூறுகிறாயா! என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அவர், தைரியத்துடன் ஆட்களை திரட்டி ஏழாவது போரில் வெற்றி பெற்றார். முயற்சியை கை விடாதே என்ற பாடத்தை போதித்த சிலந்தியும் அந்த ஸ்காட்லாந்து மன்னரின் குரு தானே! என் மகனுக்கு வீட்டுப் பாடம் எழுத விஷயம் கிடைத்து விட்டது. ஆனாலும் இவர்களை விட உயர்ந்த குரு யார் என்ற என் கேள்விக்கு எனக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. தனக்கென்று ஒன்றுமே வைத்துக் கொள்ளாமல் நாம் கல்லை எறிந்தால் கூட அந்த வலியைத் தாங்கிக் கொண்டு நமக்கு பழங்களை அள்ளித் தரும் மரங்கள், மலையில் உற்பத்திஆகி எல்லாருக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனையுடன் பெருக்கெடுத்து வரும் நதிகள் ஆகியவையும் நமக்கு குரு தானே! நம்மை சுற்றி நிறைய குருக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். நாம் நம்முடைய கண்களைத் திறந்தது அக்கறையுடன் தேடினால், நம் குருவை கண்டுபிடிக்க முடியும்! ஏன் நம்முடைய மனைவியோ, கணவனோ அல்லது குழந்தைகளோ, நம்முடன் வேலை செய்பவர்களோ, படிப்பவர்களோ, நம் வேலைக்காரர்களோ கூட நமக்கு குருவாக அமையக் கூடும். கொக்கு நமக்கு பொறுமையையும், கழுகு கூர்மையான தொலைநோக்கையும் கற்றுத் தருகிறது. சுறுசுறுப்பையும், கடும் உழைப்பையும் எறும்பு நமக்கு உணர்த்துகிறது. நாம் குருவை எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான குருக்கள் நமக்கு உபதேசம் செய்ய, உதாரணத்தை எடுத்து காண்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக பாடங்களை கற்று, இந்த உலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் வழிகளை நாம் அறிந்து கொள்ளலாமே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar