Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தியான சூழல்
 
பக்தி கதைகள்
தியான சூழல்

பகவான் கிருஷ்ணர் யோகியின் இலக்கணத்தைக் கூறினார். அவைகளில் பஹிரங்க ஸாதனைகள் கூறப்பட்டன. பொதுவாக, எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய புலனடக்கம், ஸமத்வம், மெய்யறிவில் நிலைத்திருத்தல் முதலியவை பஹிரங்க ஸாதனைகளில் அடங்கும். அந்தரங்க ஸாதனை என்பது தியானம் செய்வதற்கு முன்னர், தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் ஸாதனை. அந்தரங்க ஸாதனையைப் பற்றி இனிக் கூறப் போகிறார்.

யோகீ யுஞ்ஜீத ஸததம் ஆத்மாநம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ:
        (ஸ்ரீமத் பகவத்கீதை 6-10)

தனியிடத்தில், தனிமையில் இருப்பவராய், உடலையும் மனதையும் கட்டுப்படுத்தியவராய், ஆசைகளை அறுத்தவராய், உடைமைப்பொருட்கள் அற்றவராய், யோகியானவர் யாண்டும் தனது மனதை தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். தியானம் செய்வதற்கு முன்னர் ஒருவர் கவனிக்க வேண்டிய எட்டு விஷயங்கள் இருக்கின்றன. இந்த எட்டு விஷயங்களும் சரியாக இருந்தால், தியானம் செய்வது எளிதாக இருக்கும். இவை முறையாக இல்லையெனில், தியானத்துக்கு அமர்ந்தாலும், தியானம் நிகழாது, தியானம் வெற்றி பெறாது, முழுமை அடையாது, பயனைத் தராது. முதலாவது, தேசம் -தியானம் செய்வதற்குரிய இடம். இரைச்சலற்ற அமைதியான, ஆளரவமற்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, தியானம் என்ற ஸாதனையை தனிமையில்தான் பழக வேண்டும். கூட்டுத் தியானம் என்பது வெறும் வெளி வேஷமாகிவிடும். எனவே, தனியாக, தனிமையான இடத்தில் தியானம் செய்ய அமர வேண்டும்.

தியானம் செய்கின்ற இடம் தூய்மையானதாக இருக்க வேண்டும். புறந்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மை உடையதாக, ஆன்மிகத்துக்கு உகந்ததாக அந்த இடம் இருக்க வேண்டும். இறைவனைப் பற்றிய எண்ணங்கள் மேலோங்கியிருக்கின்ற இடங்களான கோயில்கள், ஆச்ரமங்கள் முதலிய இடங்களில் தியானம் செய்யலாம். இயற்கையாகவே ஆன்மிக ஸாதனைகளுக்கு உகந்த இடங்கள், செயற்கையாக நாம் உண்டு பண்ணிக் கொள்ளும் சூழ்நிலைகள் பற்றி ஆதிசங்கரர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். கங்கைக்கரை போன்ற புனிதமான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். அதுபோன்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லையென்றால், இறை உருவங்களை, படங்களை வைத்து, விளக்கேற்றி வைத்து, அத்தகைய சூழ்நிலையை வீட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு தியானம் செய்யலாம்.

இரண்டாவதாக, நாம் கவனிக்க வேண்டிய விஷயம் காலம். தியானம் செய்வதற்கு ப்ரம்ம முஹுர்த்தம் எனப்படும் அதிகாலை நேரம் மிகவும் உகந்ததாகும். நேற்றைய கவலைகள் உறக்கத்தில் ஒடுங்கி, இன்றைய கவலைகள் தொடங்குவதற்குமுன், மனதில் எண்ண ஓட்டங்கள் அதிகரிப்பதற்குமுன் தியானத்தில் அமர்ந்துவிடுவது சிறந்தது. செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் இருந்தால், தியானம் செய்வதற்கு முன் அதனைப் படிக்கக்கூடாது. பிறகு, படித்த செய்திகளைத்தான் தியானம் செய்ய வேண்டியிருக்கும். புறவுலகச் சிந்தனைகளில் நாட்டமின்றி, விழிப்புணர்வுடன் கூடிய மனமே ஸாத்விக மனம். அதிகாலையில் மனதில் ஸத்வ குணம் மேலோங்கியிருப்பது இயல்பு. ஆழந்த உறக்கத்தினால் தமோ குணம் விலகி, ரஜோ குணம் தொடங்குவதற்குமுன், மனதில் ஸத்வகுணம் மேலோங்கியிருக்கும் அதிகாலை நேரத்தில் தியானம் பழக வேண்டும்.

சிலர், எத்தனை நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். தியானத்தைப் பொறுத்தவரை, நேர அளவைக் காட்டிலும், அதன் தரமே முக்கியம். தொடக்கத்தில் இருபது நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சிக்கலாம். மூன்றாவதாக, ஆஸனம் - அமரும் நிலை. உட்கார்ந்த நிலையில்தான் தியானம் செய்ய வேண்டும். நடந்து கொண்டு, ஓடிக்கொண்டு, ஊஞ்சலில் அமர்ந்தபடியெல்லாம் தியானம் செய்ய முடியாது. வலியின்றி நீண்ட நேரம் அமரக்கூடிய நிலையில் உடலை அமர்த்தி தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் செய்யும்போது, வெறுந்தரையில் அமரக்கூடாது. தர்ப்பையின் மீது துணி விரித்து, அதனை ஆஸனமாகப் பயன்படுத்த வேண்டும். அதில் அவர் மட்டுமே அமர வேண்டும். ஆஸனம் என்பது மிக மிருதுவாகவோ, மிகக் கடினமாகவோ இருக்கக்கூடாது. உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். நான்காவது, உடலை வைத்திருக்க வேண்டிய முறை (சரீர ஸ்திதி:) உடல், கழுத்து, தலை மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு அமர வேண்டும். கூன் போட்டுக்கொண்டோ, குனிந்து கொண்டோ அமரக் கூடாது. உடலை வளைக்கக் கூடாது. மிகவும் விறைப்பாகவும் உடலை வைத்திருக்கத் தேவையில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar