Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தியான ஸாதனங்கள்!
 
பக்தி கதைகள்
தியான ஸாதனங்கள்!

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தூய்மையான இடத்தில் தன்னுடைய ஆஸனத்தை உறுதியாக அமைத்துக்கொண்டு, அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்ந்ததாக இல்லாமலும், தர்ப்பை, அதன்மேல் தோல், அதன் மேல் துணி விரித்ததாக இருக்கை ஏற்படுத்திக் கொண்டு, அதில் அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம், இந்திரியங்கள் இவற்றின் செயல்களை அடக்கியவனாக, மனத்தூய்மைக்காக தியானத்தைப் பயில வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருளினார். தொடர்ந்து தியானத்துக்குரிய ஸாதனங்களைக் கூறுகிறார்.

ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசஸ்சாநவலோகயந்
(ஸ்ரீமத்பகவத்கீதை 6-13)

ப்ரஸாந்தாத்மா விகதபீ: ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்த: யுக்த ஆஸீத மத்பர:
(ஸ்ரீமத்பகவத்கீதை 6-14)

உடல், கழுத்து, தலை ஆகிய மூன்றøயும் நேர்க்கோட்டில் இருத்தி, அசையாமல் உறுதியாக அமர்ந்து எத்திசையையும் நோக்காமல் மூக்கின் நுனியை மட்டும் பார்த்தபடி, கடந்த காலம் வருங்காலம் குறித்த கவலைகளையும் பயங்களையும் நீக்கி, ப்ரஹ்மசர்யத்தில் நிலைபெற்று, மனதை நன்கு ஒழுங்குப்படுத்தி என்னிடத்திலேயே உள்ளத்தை இணைத்துக் கொண்டு, என்னையே குறிக்கோளாகக் கொண்டு தியானத்தில் அமர்வானாக! பகவான் தியானத்துக்குரிய ஸாதனங்களில் அடுத்து, தியானத்தின்போது உடலை எவ்வாறு இருத்த வேண்டும் என்று கூறுகிறார். தலை, கழுத்து, உடல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். மிருகங்கள் நான்கு கால் பிராணிகள். மனிதன் மட்டும்தான் செங்குத்தாக வளருகிறான். அதாவது உடலின் பாரம் முழுவதையும் முதுகெலும்பே ஏற்றுக்கொள்ள நேரிடுகிறது. ஆனால், முதுகை நேராக வைத்திராமல், தியானம் செய்ய முடியாது.

சிலர் எப்பொழுதும் கை கால்களை ஆட்டிக் கொண்டிருப்பர். உடலைத் தேவையின்றி அசைக்கக் கூடாது. மனம் அசைந்து கொண்டே இருப்பதன் வெளிப்பாடுதான் உடலின் தேவையற்ற அசைவு. தியானத்தின்போது, உடலை உறுதியாக, அசைவற்று வைத்திருக்க வேண்டும். பிறகு, மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். மனம் அமைதியடைய வேண்டுமென்றால், பொறிகள் அடங்க வேண்டும். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்பொறிகள் வழியாக உலகம் உள் நுழைகிறது. கண்களை மூடிக்கொள்ள வேண்டும். ஆனால் தியானத்தின் தொடக்கத்தில் கண்களை மூடிக்கொண்டால், அது உறக்கத்தில் நம்மை ஆழ்த்திவிடும். எனவே, கண்களால் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்க வேண்டும். வேறு எதையும் கவனிக்காது எத்திசையில் உள்ள எந்தப் பொருளின் மீதும் கவனம் செலுத்தாது. புருவத்தின் நடுப்பகுதியையோ மூக்கின் நுனியையோ பார்த்தவாறு அமர வேண்டும்.

ப்ரணாயாமம் என்பது மூச்சுக்காற்றை ஒழுங்கு படுத்துதல். ஆனால், அதற்கு முன்பாக, ப்ராண வீக்ஷணம், அதாவது மூச்சுக்காற்றை வெறுமனே கவனிக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நம் மனதில் கடந்த காலத்தைப் பற்றிய கவலைகளும், வருங்காலத்தைப் பற்றிய பயங்களும் இருக்கும். ஆனால் பொதுவாக, நாம் செயல்புரிந்து கொண்டிருக்கும்போது அவை வெளிப்பட மாட்டா. தியானத்தில் அமரும்போது ஆழ்மனதிலிருந்து அவை வெளிப்படும். ஓரளவு அமைதியுடன் மனமானது தியானத்தில் அமர வேண்டுமானால், கடந்த கால கவலைகளும் வருங்காலத்தை பற்றிய பயங்களும் அதில் இருக்கக் கூடாது. கடந்த காலத்தில் நமக்கு நேர்ந்தவை எவற்றையும் நம்மால் மாற்ற முடியாது என்பதை நன்குணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோபம், கவலை, வெறுப்பு, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் தியானத்துக்குத் தடைகளாகும். வெறுக்கப்படுபவரைக் காட்டிலும் வெறுப்பவரே அதிக துன்பத்துக்கு ஆளாகிறார். நம் வாழ்வின் கசப்பான அனுபவங்களுக்குக் காரணமானவர்களை மன்னித்து, மறந்து பழக வேண்டும். நம்முடைய மன அமைதிக்காக, நாம் தியானத்தில் வெற்றி பெறுவதற்காக, அவர்களை மன்னித்துவிட வேண்டும். அடுத்து, ப்ரஹ்மசர்ய விரதத்தில் நிலைபெறுதல் என்பது தியானத்துக்குரிய முக்கியத் தகுதி. வேத நெறிப்படி ஒழுகுபவனே ப்ரஹ்மசாரி. அவனுக்கு இறைவன், குரு, சாஸ்த்ரம் ஆகிய மூவருடன்தான் உறவு வேறு எவரோடும் அவன் உறவு கொள்வதில்லை. இல்லறத்தார் கூட, தியானம் பழகும்போது, தற்காலிகமாக உறவுகளைப் பற்றிய எண்ணங்களை விடுத்து, ப்ரஹ்மசர்யத்தில் நிலைபெற வேண்டும். அப்பொழுதுதான் தியானம் பயனளிக்கும். மனதை இவ்வாறு நன்கு நெறிப்படுத்தி, இறைவனைப் பற்றிய எண்ணங்களிலேயே அதனை ஆழச் செய்து, பரம்பொருளையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு பகவான் தியானம் செய்வதற்குரிய தகுதிகளைத் தெளிவாகக் கூறுகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar