Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துறவி வேடம்!
 
பக்தி கதைகள்
துறவி வேடம்!

ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்கள் பலருள் ஒருவனிடம் மட்டுமே முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பதை வழக்கமாகக் கெண்டிருந்தார். விருந்தினர்களை வரவேற்பது, சிறு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது என அவனை முதன்மைப்படுத்தினார். இது கண்டு பொறுக்காத மற்ற மாணவர்கள், எங்களிடம் ஏன் இந்த பாரபட்சம்? என வினா எழுப்ப, சமயம் வரும் போது சொல்கிறேன் என்றார் ஆசிரியர். ஒருநாள், பள்ளியில் நடந்த விழா ஒன்றில் ஆசிரியரிடம் நன்மதிப்பு பெற்ற மாணவன் ஒரு நாடகத்தில் துறவியாக வேடம் இட்டு நடித்தான். நாடகம் முடிந்ததும் சிறப்பாக நடித்தவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டது துறவியாக நடித்த மாணவனுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டது. எல்லோரும் வரிசையாக வந்து பரிசினைப் பெற்றுச் சென்றனர். ஆனால், துறவியாக நடித்த மாணவனது பெயர் அறிவிக்கப்பட்டும் அவன் வர சற்று தாமதமானது. வருகை புரிந்திருந்த சிறப்பு விருந்தினர் காத்திருந்தார்.

அதற்குள் சக மாணவர்கள், உங்களைக் காக்க வைக்கவேண்டும் என் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறான் என் கோரஸாக குரல் எழுப்பினார்கள். அவசர அவசரமாக ஓடி வந்தான் அந்த மாணவன். பரிசை வழங்குவதற்கு முன் அவனது தாமதத்திற்கு காரணம் கேட்டார் சிறப்பு விருந்தினர். அய்யா! அந்த நாடகத்தில் நான் பூண்டிந்தது, துறவி வேடம். துறவிக்கு எதிலும் பற்று கூடாது என்பதால், அந்த வேடத்தில் பரிசைப் பெறுவதற்கு என் மனம் ஒப்பவில்லை. அதனால் துறவி வேடத்தை துறந்து உடை மாற்றி வந்து பரிசைப் பெறவே சென்றேன். அதனால்தான் தாமதம், மன்னியுங்கள் எனச் சொல்ல, ஏற்ற பாத்திரத்தின் பெருமை உணர்ந்து செயல்பட்ட அவனது அறிவைப் பாராட்டினார் சிறப்பு விருந்தினர். அதேசமயம் ஆசிரியர் மற்ற மாணவர்களை அர்த்த புஷ்டியுடன் நோக்க, அன்றைய கேள்விக்கான பதில் இது என்பதை உணர்ந்த அவர்கள் தலை கவிழ்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar