Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாரதர் மஹரிஷி
 
பக்தி கதைகள்
நாரதர் மஹரிஷி

நம்மில் அநேகருக்கு நாரதர் என்ற பெயர் சொன்னதுமே ஏதோ விகடகவி எனும் நினைவுகள் வரும். குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் காமெடியன் என எண்ணி நகைப்பது வழக்கம். ஆனால் நாரதரை மகாவிஷ்ணுவே மிக உயர்ந்த ஸ்தானத்தில்தான் வைத்துள்ளார் என்பதை பல புராணங்கள் மூலம் நன்கு கூர்ந்து அறியும்போதுதான் புரிந்துகொள்ளமுடியும். வெள்ளித்திரையிலோ, நாடகங்களிலோ நாரதருக்கு செய்யும் ஒப்பனையும் அவ்விதம்தானே உள்ளது. ஆனால் க்ருஷ்ணனிடம் பக்தி செய்வதில் நாரதருக்கு எவரையும் ஒப்பிடமுடியாது என க்ருஷ்ணரே புராணங்களில் தெரிவிக்கிறார்.

புராணங்களில் இதிகாசங்களில் நாரதர் தோன்றும் பொழுது ஏதோ ஒரு நல்ல காரியம் உலகத்துக்கு நல்லது நடக்க ஒரு தந்திரம் இருக்கும். க்ருஷ்ணவதாரத்தின் போது கம்சன் தன்னைக் கொல்லப்போவது எட்டாவது குழந்தைதானே என அமைதியுடனிருந்தான். ஆனால் கம்சன் முன்தோன்றி கம்சனிடம் தந்திரமாக முதலிலிருந்து எட்டாவது குழந்தையா அல்லது கடைசி குழந்தையிலிருந்து எட்டாவது குழந்தையா சரியாக கேட்டு தெரிந்து செயல்படச் செய்தார். ஏனென்றால் முதல் ஆறு குழந்தைகளை கம்சன் கையினால் கொல்வதால் ஒரு தேவகாரியம் ஆக வேண்டியிருந்தது. கம்சனின் மனதிலும் நாரதர் கூறியபடி எட்டாவது என்ற எண் பூதாகாரமாக தோன்றி முதல் ஆறு குழந்தைகளை கொன்றான். அந்த ஆறு குழந்தைகளும் சாபவிமோசனமடைந்தது.

வேங்கடேசகல்யாணம் நடக்கும் முன் நாரதர் அங்கு தோன்ற பத்மாவதியை சந்தித்து ஸ்ரீநிவாசரைப் பற்றி வர்ணித்து அவனே உன் மணாளன். உன் கைகளில் உள்ள ரேகைகள் பவித்ரமான ரேகைகள் உள்ள வேங்கடேசனின் கரங்களுக்காகவே உள்ளவை. நீ ஸ்ரீநிவாச வேங்கடேசனுக்கே உரியவள் என ஒரு சாதாரண ப்ராமண வடிவில் நாரதரே வந்து நினைவூட்டி செல்கிறான். பிறகு ஸ்ரீநிவாச கல்யாணம் நடக்கிறது. இவ்விதம் வால்மீகி ருஷி வால்மீகத்தில் அமர்ந்து தவம் புரிந்து வந்தார். உத்தமரான மகான் வால்மீகி ராமாயணம் எழுத வேண்டுமே என தேவர்கள் கவலைப்பட்டனர். அப்போதும் நாரதர்தான். தானே வால்மீகி ருஷியிடம் சென்று அவர் இப்பூவுலகில் ஜனனம் ஆனது ஸ்ரீராமசரிதமான ராமாயணத்தை எழுதுவதற்கே தவிர வேறெதற்குமில்லை. ஆதலால் ராமாயணம் எழுத வேண்டும் எனக் கூறினார். ஆரம்பமும் நினைவுபடுத்தினார். எவ்வளவு பெரிய உதவி செய்து நாரதர் ராமாயணத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்.

முன் ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது கர்ப்பிணியாக இருந்த போதே சிசுப்ரஹ்லாதனுக்கு அஷ்டா க்ஷரமான ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை உபதேசித்து பாகவதோத்தமனான ப்ரஹ்லாதனுக்கு நினைவுறுத்தினார். சில சமயம் நாரதருக்கும் ஒரு கணம் தன் பக்தி மீதும் தன் சங்கீதத்தின் மீதும் தான் உயர்த்தி என்ற வண்ணம் வந்தது. தான் ஒருவனே மாயையில் சிக்காமல் வைராக்யமாக இருப்பதாக எண்ணம் தோன்றியது. அந்த இரு தவறுகளையுமே செய்து அதற்காக இன்னல்களை அனுபவிக்க வைத்து கிருஷ்ண பரமாத்மா உடனுக்குடன் தன் பக்தனை தடுத்தாட் கொண்டு கை கொடுத்து வெளியேற்றி விட்டான். நாரதருக்கு க்ருஷ்ணரிடம் அளவுக்கடங்காத திடபக்தி உள்ளது போல க்ருஷ்ணருக்கும் எப்போதும் நாரதரிடம் கருணையுண்டு.  அதனால் அவ்வப்போது அவர் தம் தர்ம நெறியில் வழுவ நேர்ந்தாலும் தம் அருள் கடாட்சத்தை சொரிந்து ரக்ஷிப்பது வழக்கம்.

நாரதர் தம் சிறிய வயதிலேயே பாகவதம் ஸ்ரவணம் செய்து பாகவதோத்தமர்களின் சேவை செய்து வைராக்ய வாழ்க்கை நடத்தியவர். நைஷ்டிக ப்ரம்மசர்ய வாழ்க்கையில் வாழ்ந்து இடைவிடாத நாம ஜபத்தை கடைப்பிடித்து நினைத்த மாத்திரத்தில் வைகுந்தம், ப்ரம்மலோகம். கைலாசம் தங்கு தடையின்றி பிரவேசிக்க அனுமதி பெற்றவர். குழந்தை த்ருவன் தவம் செய்ய கானகம் சென்றபோது தாமாகவே சென்று ஓம் நமோ பகவதே வாஸுதேவ எனும் மந்திர உபதேசம் செய்து பலனடையச் செய்தார். அவர் செல்லும் இடமெல்லாம் நன்மையே நடத்தி வைப்பார். நாரதர் க்ருஷ்ணரையும் விட்டுவைக்கவில்லை. க்ருஷ்ணரின் அரண்மனைகளுக்கும் சென்று க்ருஷ்ணர் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு கடமை ஆற்றி கொண்டிருந்ததை மூவுலகும் அறிய வைத்தார். ஏனென்றால் ஹரியே ஸர்வோத்தமன் ஸர்வவ்யாபி, தேவதேவன், அவனுக்கு இணையானவர் யாருமே இல்லை என்பதை அறிய வைத்தவர். பாரிஜாத மலரை இந்திர லோகத்திலிருந்து பூவுலகத்திற்கு கொணரும் பொருட்டு ருக்மிணி, சத்யபாமா இருவரிடையில் சச்சரவு ஏற்படுத்தி க்ருஷ்ணரையே தராசில் வைத்து துலாபாரம் போட்டு துளசியின் புனிதத்தை அறிய வைத்தார்.

நாரதரே இக்கலியில் புரந்தரதாஸராக அவதரித்து 24,75,000 பாடல்களை எழுத சங்கல்பம் செய்து கொண்டார். ஆயுட்காலம் முடிந்து விடவே தம்முடைய சிஷ்யரான விஜயதாஸர் மூலம் முடித்து வைத்தார்.

நாரதம் நாதலோலம் தம் அவதீர்ணம் ச மஹீதலே!
புரந்தர குரும்வந்தே பக்தானாம் மார்க தர்ஸனம்.

சில அரக்கர்கள் அவர்கள் பெற்ற வரங்களால் அவர்களே அழித்துக் கொள்ளும் விதமாக சமயோசிதமாக நாரதர் அறிவுரை கூறி எத்தனையோ க்ரூரமான அரக்கர்களை அழிய வைத்தார். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கொப்ப நாரதருக்கு தம் சங்கீதத்தில் எள்ளளவு மமதை தோன்ற தொடங்கியது. பகவானுக்கா தெரியாது! இராமாயணத்தின் இறுதி கட்டத்தில் அதாவது யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது நாரதரை புகழ்ந்து உங்களுக்கான விருந்து நடக்கட்டும் என ஸ்ரீராமர் ஆணையிட்டார். ஆனால் அங்கே நிறைந்திருந்த கூட்டத்தின் முன் என்னுடைய சங்கீதமா என்ற எண்ணத்தில் தான் என்ற அகம்பாவத்தில் பாட மறுத்தார். ஆனால் அமைதி உருவாய் தம் திருவடிகளின் பக்கம் அமர்ந்திருந்த ஹனுமாரை பாடச் சொன்னார். உடனே ஆஞ்சநேயர் பக்தி ரசம் ததும்ப இனிமையாக பாடினார். நாரதர் தம் கையிலிருந்த மகதி வீணையை தான் பாடல் ரசிக்க இடையூறளிப்பதாக எண்ணி அதை எடுத்து கல்மீது வைத்து விட்டு கண் மூடி பாடலை ரசித்தார். பாடல் முடிந்தது. விடைபெறும் தருணம் வந்தது.

வீணை கல்லுடன் உறைந்து போய்விட்டது. என்ன செய்தும் எடுக்க முடியாத நிலை. மீண்டும் ஆஞ்சநேயரை வேண்டி பாட வைக்க மீண்டும் கல்கறைந்து வீணை மீண்டது. இவ்விதமாக நாரதரின் மகிமை, அதே சமயம் பகவான் அவரை சோதனைக்குள்ளாக்கி ரட்சித்து அருள் பாலித்தது என எவ்வளவோ புராணக்கதைகள் உள்ளன. நாரதரின் பக்திக்கும், சமயோசித புத்திக்கும், ஞான, வைராக்யத்திற்கும், ப்ரம்ச்சர்யத்துக்கும் இணையெனயாருமே இல்லை எனலாம். ஆதலால் நாரதரின் மகிமையை உணர்ந்து போற்ற வேண்டுமே தவிர நகைப்பது தவறு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar