Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எல்லாம் இறைவன் செயல்!
 
பக்தி கதைகள்
எல்லாம் இறைவன் செயல்!

கடலில் சென்ற கப்பல் ஒன்று புயலில் சிக்கி மூழ்கியது. அதில் இருந்தவர்களுள் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறினான். தினமும், இறைவா! இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்தத் தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி - மக்களை பார்க்க வேண்டாமா? என்று பிரார்த்தித்தான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று ஒவ்வொருநாளும் எதிர்பார்த்து ஏமாந்தான் இப்படியே நாட்கள் ஓடின. தீவில் கிடைத்தவை உடைந்த கப்பலின் சில பாகங்களைக் கொண்டு சிறி குடிசை ஒன்றைக் கட்டினான். அதிர்ஷ்டவசமாக கப்பலில் இருந்து கிடைத்த தனது உடமைகள் சிலவற்றை அக்குடிசையில் வைத்து பத்திரப்படுத்தி, தானும் தங்கினான். மேலும் சில நாட்கள் நகர்ந்தன. கடவுள் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையோடு தினமும் பிரார்த்தனை செய்வதை மட்டும் அவன் விடவில்லை.

ஒரு நாள் அவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது அவன் கண்டகாட்சி அவனைத் திடுக்கிடவைத்தது. பட்ட காலிலே படும் என்பதுபோல, அவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும் வானுயர எழுந்த புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவன் அலறித் துடித்தான்.  எல்லாம் போய்விட்டது! இறைவா! காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையோடு வேண்டினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக்கொண்டாயே? என்று நெடுநேரம் கதறி அழுதான். அப்படியே தூங்கிபோனான். மறுநாள் காலை ஒரு கப்பலின் சத்தம் அவனை எழுப்பியது. அவன் இருந்த தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது. அப்பாடா ... தப்பித்தோம்! யாரோ நம்மைக் காப்பாற்ற வருகிறார்கள்! என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். கப்பல் சிப்பந்திகள் அவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்துச் சென்றார்கள். தான் இங்கே தீயில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படித் தெரியும் என்று அவர்களிடம் கேட்டான் அவன்.

தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதைப் பார்த்தோம் யாரோ தீவில் கரை ஒதுக்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம் வந்தோம்! என்றார்கள் அவர்கள். அப்போதுதான் இறைவன் அவனது குடிசையை எரித்த காரணம் அவனுக்குப் புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன்நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.  வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம். நம்மைக் காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நம் புரிந்துகொண்டால், எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆகவே, சோதனை என்றால், இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar