Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் உங்கள் குரு!
 
பக்தி கதைகள்
யார் உங்கள் குரு!

நம்மை பெற்றெடுத்த தாயாரும், தகப்பனாரும் தெய்வமாக கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் அறிவோம். பெற்றோருக்கு அடுத்ததாக இடம் பெறுபவர் குரு. அந்தக்காலத்தில், மாணவர்கள் குருகுலத்தில் தங்கி, பாடங்களை குரு மூலம் கற்பார்கள். இன்றைய பாட முறையில் நம் மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குரு அமைகிறார். அவர்களில் சிலர் மட்டும் நம் மனதில் ஆழ்ந்து பதிகிறார்கள். மற்ற குருக்களை காலப்போக்கில் மறந்து விடுகிறோம். எப்படி இருப்பினும் குரு என்பவர் தெய்வத்திற்கும் மேலே மகத்துவம் பெற்றவர். ஆசிரியர்கள் மட்டும் தான் என்றில்லை...நம்மைச் சுற்றி நிறைய குருமார்கள் இருக்கிறார்கள். ஸ்காட்லாந்து மன்னர் ராபர்ட் த புரூஸ் கதையைக் கேளுங்கள். இங்கிலாந்து மன்னருடன் ஆறுமுறை போர் நடந்த போது புரூஸ் தோல்வி அடைந்தார். எல்லா நம்பிக்கைகளையும், படைகளையும் இழந்த புரூஸ் மனம் தளர்ந்து காட்டில் ஒரு குகையில் தங்கி இருக்கும் சமயம், அங்கு ஒரு சிலந்தி வலை கட்ட முயற்சிப்பதை பார்த்தார். குகையின் ஒரு சுவரிலிருந்து மற்றொரு சுவர் வரைக்கும் தன்னுடைய வலையைப் பொருத்த முயன்று கொண்டிருந்தது.

ஆறுமுறை சிலந்தியின் நுõல் போதவில்லை. முயற்சியை விடாமல், ஏழாவது முறையாக முயன்று சிலந்தி தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற்றது. ஆம்... தனது விடாமுயற்சியால், சிலந்தி குகையின் ஒரு பக்கத்திலிருந்து மறு சுவரில் தன்னுடைய வலையின் நுõலைப் பொருத்துவதில் வெற்றி பெற்றது. கடவுளே ஒரு சிலந்தி குருவை தன்னிடம் அனுப்பி வைத்து, முயற்சியை கை விடாதே என்று கூறுகிறார் என்று உணர்ந்து, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தன்னுடைய ஆட்களை திரட்டி இங்கிலாந்து மன்னருடன் ஏழாவது போரைத் தொடுத்து அவரை பின் வாங்க வைத்தார் புரூஸ். முயற்சியை கை விடாதே என்ற பாடத்தை போதித்த சிலந்தியே ஸ்காட்லாந்து மன்னரின் குரு ஆயிற்று. இன்று நமக்கு குரு கிடைக்க வில்லையே! அந்தக் காலத்தைப் போல ஒழுக்கமான மகான்களை அடையாளம் காண முடியவில்லையே என்று பலரும் திணறுகிறார்கள். இதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் நம்மைச் சுற்றியே பல குருமார்கள் இருக்கிறார்கள். நாம் தரும் உணவை உண்டு நம் மீது நன்றி காட்டி நீயும் நன்றி மறக்காதே என்று நமக்கு கற்றுத்தரும் நம் வீட்டு நாயும் ஒரு குரு தான்.

முயற்சியைக் கைவிடாதே என்று பாடம் கற்பிக்கும் சிலந்தியும் ஒரு தான். தனக்கு என்று ஒன்றுமே வைத்துக் கொள்ளாமல் நாம் கல் எறிந்தால் கூட, நமக்கு பழங்களை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அள்ளித் தரும் மரங்களும் நமக்கு குரு தான். மலையிலிருந்து உற்பத்தி ஆகி ஜீவ ராசிகள் எல்லாருக்கும் உதவும் சிந்தனையுடன் பெருக்கெடுத்து ஓடி வரும் நதிகளும் நமக்கு குரு தான். இப்படி நம்மை சுற்றி நிறைய குருக்கள் இருக்கிறார்கள். நாம் நம்முடைய கண்களைத் திறந்து அக்கறையுடன் தேடினால் நாம் குருவை கண்டுபிடிக்க முடியும். ஏன் நம்முடைய மனைவியோ, கணவனோ, குழந்தைகளோ, உடன் வேலை செய்பவர்களோ, படிப்பவர்களோ, நம் வேலைக்காரர்கள் கூட நமக்கு குருவாக அமையக் கூடும். விலங்குகள் கூட நமக்கு பாடம் கற்றுத் தருகின்றன. கொக்கு நமக்கு பொறுமையை விளக்குகிறது. கூர்மையான பார்வையுடைய கழுகு தொலைநோக்கு சிந்தனையையும், பாம்பு உடம்பில் மண் கூட ஒட்டாமல் பற்றற்ற நிலையையும் சொல்லித் தருகிறது. எறும்பு சுறுசுறுப்பையும், கடும் உழைப்பையும் கற்றுத் தருகிறது. ஆராய்ந்து பார்த்தால் எல்லா ஜீவராசிகளுமே நமக்கு குரு தான். அவற்றிற்கு மரியாதை அளித்து குருவாக மதித்து நடத்துவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar