Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாமஜபத்தின் பெருமை
 
பக்தி கதைகள்
நாமஜபத்தின் பெருமை

முன்பொரு காலத்தில் தன் குருநாதரின் ஆணைப்படி இறைவனின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்த எளிமையானவன் ஒருவன் இருந்தான். திடீரென்று ஒருநாள் நாமஜபத்தால் உண்டாகும் பயன்கள் பற்றிய ஐயம் அவனுள் எழுந்தது. உடனே தன் குருவிடம் சென்று, ஐயா நான் ஏன் இறைவனின் பெயரை ஜபித்துக் கொண்டிருக்கிறேன்? இதனால் அந்த இறைவனுக்கு எந்த இலாபமும் இல்லை. எனக்கு என்ன இலாபம் என்றும் தெரியவில்லை என்று கூறினான். தனது மாணவனின் எளிமையைக் கண்டு, புன்முறுவல் பூத்த அந்த குரு, அவனே அதன் பயனை அறிய வேண்டும் என்று எண்ணினார். எனவே அவர், என் அருமை மாணவனே! பகவான் பெயரை ஜபிப்பதன் சக்தியை அறிய, அதோ அங்கே அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் வெண்ணிறப் பறவையிடம் சென்று கேட்டுப்பார் என்று அவனிடம் கூறினார்.

அந்த மாணவனும் சிரத்தையுடன் தன் வீட்டிற்கு அருகில் ஒரு வெண்புறாவைக் கண்டான். அதனிடம் பகவானின் நாமத்தின் பெருமையைப் பாடினான். ஆனால் அந்தப் பறவை உடனே விழுந்து இறந்துவிட்டது. பயமும் குழப்பமுமாக தனது ஆசானிடம் ஓடி நடந்ததைக் கூறினான். ஆனாலும் தான் அதிர்ச்சியும் துக்கமும் அடைவதாக பாவனை செய்து அவனை சமாதானப்படுத்தினார். பிறகு வருந்தாதே. நீ உன் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்குச் செல். அங்கு ஒரு பசு மாடு இப்பொழுதுதான் ஒரு கன்று குட்டியை ஈன்று இருக்கிறது. அந்தக் கன்றிடம் உன் கேள்விக்கு பதில் கேள் என்றார். இம்முறை உற்சாகமிழந்த அந்த மாணவன், எங்கே முன்போலவே நிகழுமோ என்று அஞ்சினான். இருப்பினும் தன் ஆசிரியரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவ்வாறே செய்தான். அவன் பயந்ததைப் போலவே அந்தக் கன்றும் இறைவன் நாமத்தைக் கேட்டவுடன் இறந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த மாணவன், தன் ஆசிரியரிடம் ஓடினான். தேம்பியவாறே, ஐயா, கடவுளின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் அந்தக் கன்று இறந்துவிட்டது. நாமஜபத்தால் இரு உயிர்களைக் கொன்ற எனக்கு பாவமே கிட்டியது. நான் என்ன செய்வேன்? என்று புலம்பினான்.

ஆசானும் வருத்தப்பட்டு, அவனைச் சமாதானப்படுத்தினார். பின்பு, இருமுறை நீ ஏமாந்து போனதற்கு வருந்துகிறேன். இருப்பினும் உனக்குக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறேன். நீ அருகில் உள்ள அரசனின் அரண்மனைக்குச் செல். அங்கு அந்த அரச தம்பதியருக்குப் பிறந்துள்ள குழந்தையிடம் உன் கேள்வியைக் கூறு என்றார். இம்முறை மனதில் பயத்துடனும் நடையில் தள்ளாட்டத்துடனும் அந்த மாணவன் அரசனிடம் சென்று தனது ஆசானின் பெயரைக் கூறி, குழந்தையைக் காணவேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறினான். அந்த அரசனுக்கு அந்த குருவின் மேல் அதீத பக்தி உள்ளதால், உடனே அதற்கு சம்மதித்தார். மாணவனும் மெல்லக் குழந்தையின் தொட்டிலுக்கு அருகில் சென்று, மெதுவாக இறைவனின் பெயரை அக்குழந்தையின் காதில் கூறினான். அடுத்தகணம், அவன் பயந்ததைப் போலவே நடந்தது. அக்குழந்தை இறந்தது. கோபம் கொண்ட அரசன் தனது இளவரசன் இறந்ததற்குக் காரணமான அவனைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டார்.

அடக் கடவுளே! உன் பெயரை உச்சரிப்பதால் இப்படி எல்லோருக்கும் தீங்கு விளையும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த நாமஜபம் இல்லாமலே நான் நன்றாகத்தான் இருந்தேன் என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இதுபோன்ற எண்ணத்தில் இருந்தபோது ஒரு அதிசயம் நடந்தது. ஒரு அழகான ஒளி அந்த குழந்தையின் உடலிலிருந்து வெளிப்பட்டு ஒரு தேவதையாக உருப்பெற்று, அந்த மாணவனின் முன் தனது வணக்கத்தைச் சமர்ப்பித்தது. அதிர்ச்சியில் இருந்த மாணவனை நோக்கி, என் அருமை ஐயனே! நான் உனக்கும் உன் ஆசானுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஒரு சாபத்தால் நான் மூன்று பிறவிகள் எடுத்து இன்னலை அனுபவிக்க வேண்டி இருந்தது. உனது ஆசான் எனக்கு உதவ எண்ணினார். நான் பறவையாக இருந்தபோது உன்னை என்னிடம் அனுப்பினார். இறைவனின் நாமத்தை ஜபித்து எனக்கு விடுதலை அளித்தாய்.

மறுபடியும் கன்றாகப் பிறந்தபோது, நீ இறைவனின் பெயரைச் சொலலி என்னை விடுவித்தாய். இறுதியாக மனித உடல் தரித்த போதும் நீ மறுபடியும் வந்து நாமஜபத்தால் என்னை பந்தங்களிலிருந்து விடுவித்தாய். இறைவனின் நாமம் கொண்டுள்ள சக்தி அளவற்றது. கண்ணுக்குப் புலப்படாதது என்று கூறியது. இவ்வாறு கூறிய அந்த தேவதை அவர்களை ஆசிர்வதித்து, வானில் மறைந்தது. அரசனும் அவனை விடுவித்து, அவனுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பினார். மாணவனும் தொண்டை அடைக்க பேச்சற்றுத் தன் ஆசானிடம் ஓடினான். அவர் புன்னகையுடன் அவனை ஆசிர்வதித்து, இப்பொழுது தெரிந்ததா? இறைவனின் பெயரின் சக்தி என்னவென்று நாம் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் நன்மை பயப்பதாகும். ஆனால் அதன் செயல்பாடு மிகவும் சூட்சுமமானது என்று கூறினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar