Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொர்க்கம் - நரகம்!
 
பக்தி கதைகள்
சொர்க்கம் - நரகம்!

ஒருநாள் ஒருவர் கனவில் கடவுள் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். ஒரே ஒருமுறை நான் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட்டுத் திரும்பிவிட நினைக்கிறேன் என்றார் அவர். முதலில் எங்கு செல்ல விரும்புகிறாய்? என்று கேட்டார் கடவுள், நரகத்தையே பார்க்க விரும்புகிறேன் என்று அவர் சொல்ல, அழைத்துச் சென்றார் கடவுள். இப்போது இங்கே எல்லாரும் உணவுண்ண வருவர். நரகத்திற்குள்ளே செல்ல மானுடருக்கு அனுமதி கிடையாது. எனவே நீ இந்த சாளரம் மூலம் மட்டுமே அவர்களைப் பார்க்கலாம் என்றார். சாளரம் மூலம் அவர் பார்த்தபோது அங்கே ஒரு மிக நீண்ட அறையில், பெரிய பெரிய பாத்திரங்களில் விதவிதமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. மணி ஓசை கேட்டது. அந்த அறையின் நூற்றுக்கணக்கான கதவுகள் திறந்தன. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் முந்திக்கொண்டும் உணவைப் பார்த்தே பல நாட்கள் ஆனதுபோல் உணவை நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் எலும்பும் தோலுமாகக் காணப்பட்டனர். அவர்கள் அனைவரது கைகளும் கட்டப்பட்டிருந்தன. உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த அகப்பைகளோ ஐந்தடி நீளமிருந்தன. எனவே உணவை ஒருவரும் வாயினருகே எடுத்துச்செல்ல இயலவில்லை. சிலர் உணவை மேலே தூக்கி எறிந்து சாப்பிட முயன்றபோது அது அவருக்கு கிடைக்கவிடாமல் பலர் தடுத்தனர். அதன் காரணமாக ஏற்பட்ட சண்டையினால் அந்த இடமே ஒரு கலவர பூமியாய்த் திகழ்ந்தது.

அடுத்தது சொர்க்கம்..  அதையும் சாளரம் மூலம் மட்டுமே பார்க்க அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்கு உணவுண்ணும் நேரம். அங்கேயும் அதேபோன்று ஒரு மிக நீண்ட அறையில், பெரிய பெரிய பாத்திரங்களில் விதவிதமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. மணி ஓசை கேட்டது. அந்த அறையின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பேர் அமைதியாக உள்ளே வந்தனர். அவர்கள் அனைவருமே நல்ல உடற்கட்டுடன் காணப்பட்டனர், இங்கேயும் அவர்கள் அனைவரது கைகளும் கட்டப்பட்டிருந்தன. உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த அகப்பைகள் ஐந்தடி நீளமிருந்தன. எனவே உணவை ஒருவரும் வாயின் அருகே எடுத்துச் செல்லமுடியாத நிலைதான். ஆனால் அவர்கள் செய்கை வித்தியாசமாய் இருந்து ஒருவர் உணவை கரண்டியால் எடுத்து ஐந்து அல்லது ஆறடி அடி தூரம் தள்ளியுள்ள மற்றொருவரின் வாயருகே எடுத்துச் சென்று ஊட்டிவிட்டார். இதைப்போலவே அனைவரும் ஒருவருக்கொருவர் உணவோடு அன்பையும் ஊட்டிவிட்டு அந்த இடத்தையே ஆனந்தமானதாக மாற்றிவிட்டார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar