Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரி கட்ட பயமாயிருக்கா! இந்த வரிகளை படியுங்க!
 
பக்தி கதைகள்
வரி கட்ட பயமாயிருக்கா! இந்த வரிகளை படியுங்க!

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய முன்கூட்டியே பதிவு செய்து டிக்கெட் வாங்குகிறோம். இப்போது ஒரு பயம்...பதிவு செய்த நாளில் பயணம் செய்ய முடியுமா? முடியாவிட்டால் பணம் போய்விடுமே! என்று. ஒரு வழியாய் கிளம்பி போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால், நேரத்திற்கு ரயிலை பிடித்து விடுவோமா என்று பயம்...ரயில் பயணம் செய்யும் பொழுது ஒரு ஸ்டேஷனில் வண்டி கால் மணி நேரம் நிற்கும் என்று அட்டவணை காண்பித்தாலும், பிளாட்பார கடையில் தயிர் சாத பொட்டலம் வாங்குவதற்குள் வண்டி கிளம்பி விடுமோ என்ற பயம்..! மேலே கூறியவை ஒன்று, இரண்டு உதாரணங்கள் தான். நம்முடைய வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் நமக்கு பயம் எப்பொழுதும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. நாம் ஏன் பயப்படவேண்டும்? எல்லாம் நல்ல படியாக முடியும் என்று ஏன் நம்மால் எண்ண முடியவில்லை? எல்லா விஷயத்திலும் பயத்தை அடைந்து நம்முடைய ரத்த அழுத்தத்தை ஏன் அதிகரித்துக் கொள்ளவேண்டும்?

ஒரு பெண் தன் கணவரைப்பற்றி, இந்த மனுஷன் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குக் கிளம்புவதற்கு முன் படுத்தும் பாட்டாலே, எனக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடும் போல இருக்கிறது. அவர் கிளம்பிப் போய்விட்டால், ஏதோ ஒரு சூறாவளி அடித்து ஓய்ந்த மாதிரி நான் உணர்கிறேன், என்கிறார். அவரிடம் இது பற்றி கேட்டால், என் அலுவலகத்துக்குச் செல்ல இந்த ஒரு பஸ் தான் இருக்கிறது. அதை தவறவிட்டால் அப்புறம் ஆட்டோவுக்கு நுõறு, இருநுõறு காலி பண்ண முடியுமா? என்று பயத்தோடு சொல்கிறார். தேவைக்கு மேல் அவசரம்... அமர்க்களம் எல்லாம் ஒருவரது கூடப் பிறந்த பண்பாக இருக்கிறது. பல நுõற்றாண்டுகளுக்கு முன்பே, ஸ்ரீ பர்த்ருஹரி என்ற மகான், பயம் பற்றி ஒரு ஸ்லோகம் எழுதியுள்ளார்.லபோகே ரோக பயம், குலே ச்யுதி பயம்,  லலவித்தே நருபாலாத் பயம், லமானே தைன்ய பயம், பலே ரிபு பயம், லலரூபே ஜராயா பயம் ! லஸாஸ்த்ரே வாதி பயம், குணே கல பயம், லலகாயே க்ருதாந்தாத் பயம் லலசர்வே வஸ்து பயான்விதம், லலபுவி ந்ருணாம் வைராக்யம் ஏவ அபயம் !! சாப்பிடும் போது, அனுபவிக்கும் போது நமக்கு வியாதியைப் பற்றிய பயம். நமக்குப் பிறகு சந்ததிகள் நம் குலத்தின் பெருமையை நிலை நாட்டுவார்களா என்ற பயம். பணம், சொத்து சேர்க்கும் பொழுது வரியை பற்றிய பயம், பலம் இருக்கும் போது நமக்கு எதிரிகளின் பயம். உடல் சீராக இருக்கும் பொழுது, வயோதிகத்தை நினைத்து பயம். வயதாகி விட்டால் மரணம் வந்து விடுமே என்ற பயம்...இப்படி பயம் எப்போதுமே நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது.

நாம் எல்லாருமே சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நம் மனத்தில் சிறிய சிறிய விஷயத்திற்குக் கூட பயம் பின்னணியில் இருந்து கொண்டே இருக்கிறது. சிறு வயதில் நாம் உருளைக் கிழங்கை மிக விரும்பி சாப்பிட்டோம். அப்போது நம் குடும்பத்தின் கையில் போதிய பணவசதி இல்லை. ஆனால் இன்று நம்மால் வேண்டிய அளவுக்கு மேலே உருளைக்கிழங்கு வாங்க வசதி இருக்கிறது. ஆனால் நம்மால் சர்க்கரை வியாதியின் பயமில்லாமல் உண்ண முடிகிறதா? நாம் விரும்பும் எல்லா பொருட்களும், செயல்களும் ஒரு வித பயத்துடனேயே சம்பந்தப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்தின் கடைசி வரியில் பயமில்லாமல் வாழ வழி காட்டப்படுகிறது. வைராக்கியம் (அதாவது அமைதியான மன நிலை) மட்டுமே பயமில்லாத தன்மையை அளிக்கிறது. உதாரணத்திற்கு நம்முடைய வேலையை எடுத்துக்கொள்ளலாம். அலுவலகத்தில் பகலும், இரவும் அயராது உழைக்கிறோம். அதற்கு மாதா மாதம் சம்பளம் தருகிறார்கள். அந்த வேலையின் மீது முழுதான சார்புநிலை என்ற நிலைமையை அடைந்தோமானால், பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது நமக்கு பயமாக தெரியும். இந்த வேலை நிரந்தரமில்லை, நம் கடைசி நாள் வரைக்கும் சம்பளம் தரமாட்டார்கள் என்பதை உணர்ந்தால், ஓய்வுகாலம் என்பது நமக்கு பயம் தராது. அமைதியான மன நிலை அடைவது கடினம் என்று நமக்கு தோன்றும்; சிறு துளி பெரு வெள்ளம் என்று சொல்வார்களே! அதைப் போல முயற்சித்தால் நாம் எல்லோருமே ஒரு நாள் பயத்தை விரட்டும் காரணியான அமைதியான மனநிலையை அடைய முடியும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar