Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாபாகருக்கு நாகாபரணரின் அருள்!
 
பக்தி கதைகள்
நாபாகருக்கு நாகாபரணரின் அருள்!

விஷ்ணுவின் பிரிய பக்தரான அம்பரீஷ மன்னரின் தந்தையின் பெயர் நாபாகர், அவர் சிறுவயதில் தமது தந்தையான நாபரிடம் இவ்விதம் கேட்டார். தந்தையே, என் மனம் ஆன்மிக நாட்டம் கொண்டுள்ளது. சில ஆண்டுகள் குருகுலவாசம் செய்து வரட்டுமா? என்று கேட்டார். அவரும் சரி, குழந்தாய் அப்படியே ஆகட்டும் என்றார். பிறகு யோசித்துப் பார்த்து, தந்தையே மற்ற வேலைகளை வீட்டில் யார் பார்த்துக் கொள்வர்? என வினவினார். குழந்தாய் கவலை வேண்டாம், உன் சகோதரர்கள் நல்ல உழைப்பாளிகள், அவர்கள் இருக்கும்போது கவலை ஏன்? என கூறினார். சகோதரர்களே நான் வரட்டுமா? நான் வரும்வரை நம் தந்தையை நன்றாய் கவனித்துக் கொள்ளுங்கள். என்று கூறி விடைபெற்று சென்றார்.

அவருடைய தந்தை, கவலை வேண்டாம் நாபாகா நீ நன்றாய் கற்று வா என்று சொல்லி அனுப்பினார். குருகுலத்தில் உள்ம மாணவர்கள் அனைவரும் தினமும் பிட்சை எடுத்து வந்து குருவிடம் தர வேண்டும். அன்று ஒருநாள் குரு சீடர்களை பார்த்து கேட்டார். சீடர்களே, இன்றைக்கு என்ன கிடைத்தது பிட்சையில்?  நாபாகா உன் பங்கு எங்கே? என குரு கேட்க நாபாகா குருவே இதோ நான் பெற்றதில் ஒரு பங்கு இதுதான் என்று காட்டினார். என்ன இது, ஒரு பங்கு தானா? மீதி எங்கே? என்று குரு கேட்டார். குருவே, வழியில் அனாதைச் சிறுவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு வந்தேன் என கூறினார் நாபாகா. நீயும் நிறையவே கொண்டு வந்துள்ளாயே, அது எப்படி? என்று குரு கேட்க குருவே, அனாதைக்களுக்கு நான் கொடுப்பதைக் கண்ட மக்கள் எனக்குக் குறைவின்றிப் பிட்சை இடுகின்றனர் என்று கூறினார். ஆண்டுகள் பல கடந்தன, குருவிடம் விடை பெற்றார் நாபாகர். நாபாகா, நன்கு கற்று விட்டாய், உன் உணவையும் பங்கிட்டு வாழ்ந்தவன் நீ, உனக்கு ஒரு குறைவுமிராது. எனது ஆசிகள் உனக்கு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்து அனுப்பினார் குரு.

குருவே, நான் வேத, வேதாந்தங்களில் தேர்ந்தவனாவதற்குத் தாங்களேதானே காரணம் அதை மறப்பேனோ? என்று நாபாகா கூறி தலைவணங்கி விடைபெற்றான். வீடு திரும்பிய நாபாகர் சகோதரர்களே! எனது பங்கு சொத்தைக் கொடுத்தால் அதை நானே கவனித்துக் கொள்கிறேன் என நாபாகா கேட்டார். நாபாகா, உன் பங்கு அப்பாதான். அவரிடம் சென்று வேண்டியதைப் பெற்றுக் கொள் என்று சகோதரர்கள் கூறி அனுப்பினர். சுயநல சகோதரர்கள் சொன்னதைக் கேட்டு நாபாகர் மிகவும் மனம் குன்றி தன் தந்தையிடம் வந்தார். அப்பா! நாங்கள் தான் என் பங்குச் சொத்தா? என்று நாபாகா தன் தந்தையிடம் கேட்டார். நாபாகா, உன் சகோதரர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். உன் பங்கை மீட்டுத் தரும் வலிமை இழந்த வயோதிகன் நான் என அவரது தந்தை கூறினார். அப்பா, அப்படியானால் எனது அன்றாட வாழ்க்கைக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என வினவ அவரது தந்தை நாபாகா, கவலை வேண்டாம், நான் சொன்னபடி நடந்தால் நீ விரும்பிய செல்வத்தைப் பெறலாம் என அவருக்கு அறிவுரை கூறினார். ஸத்ர யாகத்தை ஆங்கிரஸ முனிவரின் வழியில் வந்த மகரிஷிகள் மனு வனத்தில் நடத்துகின்றனர். 12-வது நாளான இன்று வைச்வதேவமந்திரங்களை ஓத வேண்டும். ஆனால் அவர்களுக்கு இந்த மந்திரங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இவற்றை அறிந்த நீ அங்கு சென்று உதவிடு. அவர்கள் யாகத்தில் மிஞ்சிய அளவற்ற செல்வத்தையும் மற்ற பொருட்களையும் உனக்குத் தட்சிணையாகத் தருவார்கள் என்று நாபாகாவிடம் அவரது தந்தை கூறினார்.

இன்று விச்வ தேவர்களைக் குறித்த சூக்தங்களை ஓத வேண்டுமே என்று மகான்கள் இருவரும் பேசிக் கொண்டனர். ஆம். ஆனால் நம்மில் அவற்றை அறிந்த மகான் யார்? என விவரிக்கையில் அப்போது நாபாகா  ஐயனே, இறைவன் கருணையால் நான் அறிவேன் என்று கூறி வணங்கினார். அவர்களும் சரி, நீங்களே ஓதுங்கள் என கூறினர். நாபாகரே! எங்கள் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என மகான்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நாபாகரும் ரிஷிபுங்கவர்களே, இந்த வாய்ப்புக்கு நான்தான் நன்றி கூற வேண்டும் என கைகூப்பி வணங்கினார். எல்லா ரிஷிகளும் சுவர்க்கம் சென்றார்கள். நாபாகர் தமக்கு வேள்வியில் கிடைத்த செல்வத்துடன் ஊர் திரும்புகையில், யக்ஷன் ஒருவர் வந்தார். யாகத்தில் மிஞ்சியவை எனக்கே சொந்தம். தக்ஷயாகம் முதலே இவ்வழக்கம் உள்ளது என யக்ஷன் ஒருவன் நாபாகாவை வழிமறித்து கூறினான். நான் ஒப்ப மாட்டேன். என் உதவிக்குப் பதிலாக ரிஷிகளால் எனக்குத் தரப்பட்டது என நாபாகா கூறினார். அப்படியானால், உன் தந்தையிடமே சென்று நியாயம் கேட்டு வா என யக்ஷன் கூறினான். வீட்டுக்கு சென்ற நாபாகாவிடம், நாபாகா நான் சொன்னபடி உனக்குச் செல்வம் கிடைத்ததா? என்று தந்தை அவரிடம் கேட்டார்.

ஆம் தந்தையே, ஆனால் யாகத்தில் மிஞ்சியவை தனக்கே சொந்தம் என்று ருத்திராம்சமான ஒரு யக்ஷன் வந்து நிற்கிறான். இது சரியா? என நாபாகா கேட்க. அவருடைய தந்தையும், ஆம் மகனே. யக்ஷனுக்குத்தான் அவை சொந்தம் என்று கூறினார். யக்ஷன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார், அவரிடம் நாபாகா சென்றார், ஐயா தாங்கள் சொல்வதுதான் சரி என்று என் தந்தை சொல்கிறார். ஆகவே இந்தச் செல்வமெல்லாம் எனக்கு உரியது. அப்படிதானே என்று யக்ஷன் சொன்னார். ஐயா, ஒரு வேண்டுகோள் நான் உன் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றப்பட்டு வறுமையால் வாடுகிறேன். எனக்காகத் தாங்கள் விட்டு கொடுத்தால் தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன் என யக்ஷனிடம் நாபாகா கேட்டார். குழந்தாய், வறுமையிலும், உன் தந்தை நியாயத்தையே சொன்னார். நீயும் கஷ்டங்களிடையேயும் அந்த உண்மையை மறுக்கவில்லை. உங்கள் சத்திய நெறிக்குப் பரிசாக எல்லாவற்றையும் எடுத்துக் கொள் என யக்ஷன் கூறினார். நாபாகா, உனக்கு எல்லா செல்வங்களுடன் பிரம்ம ஞானத்தையும் அருள்கிறேன் என ஈஸ்வரன், ஈஸ்வரியும் அவர் முன்னால் நேரில் தோன்றினர். நாபாகா இறைவன், இறைவியே பார்த்த சந்தோஷத்தில், இறைவா, தாங்களே யக்ஷனாக வந்தீரோ! தங்களின் கருணையே கருணை என மகிழ்ச்சி ததும்ப தலைமேல் கைகூப்பி மனதார வணங்கினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar