Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உத்தமகுரு விவேகானந்தர்!
 
பக்தி கதைகள்
உத்தமகுரு விவேகானந்தர்!

சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டிலும், நமது நாட்டிலும் பல சொற்பொழிவுகளை ஆற்றிய பிறகு, பேலூரில் ராமகிருஷ்ண மிஷனைத் தோற்றுவித்திருந்த காலகட்டம் அது. என்ன ஓர் அருமையான சுவாமி இவர். இவருக்கு மேல் நாட்டிலும், நமது நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருக்கிறார்களே, என்ன ஆச்சரியம் இது என்றனர் அங்குள்ளவர்கள். உத்தம குரு தம்மிடம் வரும் மக்களின் நலத்திற்காகவும் ஆன்ம லாபத்திற்காகவும் உபதேசிப்பவர் அல்லவா இவர். ஆம், கிறிஸ்தவரான மிஸ் மேக்லவுடும் பாரம்பரிய ஐயங்காரான அளசிங்கப் பெருமாளும் சவாமிஜியின் சீடர்கள்தானே! அன்று சுவாமிஜி தமது அறையில் இருந்தார். வந்த கடிதங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். அவரது சீடர் பிரம்மசாரி சுதிர். அப்போது ஒரு வாலிபன் வந்தான். நீங்கள் மக்களுக்குப் புதிய மதக் கருத்துகளைப் புகட்டியதற்கு நன்றி என்று கூறினான் சுவாமிஜியிடம் அதற்கு சுவாமி ஜி புது மதமா? அப்படி என்னப்பா நான் செய்து விட்டேன்? என்று கேட்டார்.

கங்கா ஸ்நானம் செய்தால்தான் முக்தி என்றெல்லாம் மக்கள் கூறுவதை நீங்கள் ஏற்கவில்லை அல்லவா? என்றான் உடனே அவர் இல்லை தம்பி! இன்றும் நான் கங்கையில் நீராடுகிறேன். அது முடியாவிட்டால், கங்கை நீரைச் சிறிதாவது தலையில் தெளித்துக் கொள்வேன் என்று கூறினார் சுவாமிஜி. சுவாமிஜி இவ்வாறு கூறியதும் அந்த வாலிபன் தனது அறியாமை நீங்கிச் சென்றான். சுவாமிஜியின் சீடனான பிரம்மசாரி சுதிர் அருமை, சுவாமிஜி எப்படி பதில் கூறி, அந்த இளைஞனைத் திருத்தினார்! சுவாமிஜிக்குத் தான் கங்கை மீது எவ்வளவு பக்தி என்று யோசித்து மெய்சிலிர்த்தான். அடுத்து, வயதான ஒரு பிராமணர் வந்து சுவாமிஜியை வீழ்ந்து வணங்கினார். அவர் கை கட்டி, வாய்பொத்தி நின்றார். சுவாமிஜி நமது இந்து தர்மத்தை உலகெங்கும் பிரசாரம் செய்து பெரும் பேறு பெற்றுவீட்டீர்கள் நீங்கள் வாழ்க என்று கூறினார்.

உடனே சுவாமிஜி ஐயா, இந்து தர்மம் என்று நீங்கள் எதைப் புரிந்துள்ளீர்கள்? என்று கேட்டார். காசியில் இறந்தால் முக்தி நிச்சயம் கிட்டும் என்றெல்லாம் நீங்கள் உலகெங்கும் பிரச்சாரம் செய்தீர்களே? அதை தான் என்று சொன்னார். இல்லை ஐயா, ஞானம் அடைந்தால்தான் ஒருவருக்கு முக்தி கிடைக்கும். ஆதலால் நீங்கள் எப்போதும் ஞான விசாரம் செய்யுங்கள். நானும் அதைத்தான் செய்கிறேன் என்று சொன்னார் சுவாமிஜி. என்ன இது! சுவாமிஜி யார் நம்பிக்கையையும் குலைப்பவர் இல்லையே இளைஞன் சொன்னது உண்மைதானே - இந்து மதத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சியவர்தான் சுவாமிஜி. அதுபோல், சுவாமிஜி இந்து தர்மத்தைப் பிரசாரம் செய்தவராயிற்றே! இவர் ஏன் பிராமணரிடம் இப்படிச் சொன்னார்? இரண்டும் ஒன்றுக்கு ஒன்று, முரணா? என்று யோசிக்கலானான் சீடன். சீடரின் குழப்பதைப் புரிந்து கொண்ட சுவாமிஜி சீடனின் கேட்டார். என்ன மகனே! ஒரே சிந்தனையில் ஆழந்துவிட்டாய்? என்று கேட்டார். உடனே சீடன், ஒன்றுமில்லை சுவாமிஜி வந்து சென்ற இருவருக்கும் இரண்டு விதமாகப் போதித்தீர்கள். அது எனக்குப் புரியவில்லை என்றான்.

யாருக்கு எது தேவையோ, அதுதான் கிடைக்கும். மேலும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளாமல் எதையும் ஓர் எல்லைக்குள் அடைப்பது சரியல்ல என்று கூறினார் சுவாமிஜி. ஆம் வந்த இருவரும் சுவாமிஜி வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிகளின் விஸ்தாரத்தை பரிமாணத்தைக் குறைத்து மதிப்பிட்டார்கள். அதைத்தான் சுவாமிஜி அவர்களுக்குப் புரிய வைத்தார் என்று யோசித்து புரிந்துக் கொண்டான் சீடன். அப்படியென்றால், சுவாமிஜி என் முக்திக்கான மார்க்கம் என்ன? என்று கேட்டான். குருவுக்குச் சேவை செய் மகனே. உனக்கு முக்தி கிடைக்கும் என்றார் சுவாமிஜி. பிறகு சுவாமிஜி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். அவருக்கு பாதசேவை செய்தார் பிரம்மசாரி சுதிர். சுவாமிஜி, குருசேவையால்தான் முக்தி சாத்தியம் என்றீர்கள். அப்படியென்றால் அடியேனின் சேவையைத் தாங்கள் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டான் சுதிர். மகனே, குருசேவை என்றால் அவரது உடலுக்கு மட்டும் ஆற்றும் சேவையல்ல. குரு எந்தப் பணியை ஏற்றுத் தன் உயிரைக் கொடுத்து உழைத்தாரோ, அதற்காகச் சீடனும் உழைப்பதுதான் உண்மையான குருசேவை, குருதேவர் அதை உனக்கு அருளட்டும் என்று வாழ்த்தினார். சுதிர் பிற்காலத்தில் ராமகிருஷ்ண மடம் - மிஷனின் மிகச் சிறந்த துறவிகளுள் ஒருவரானார். சுவாமி சுத்தானந்தர் என்ற நாமத்தில் மிஷனின் பொதுச் செயலாளராகவும் பொதுத் தலைவராகவும் திறம்பட சேவை புரிந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar